ஞாயிறு
30 மார்ச் 2025
63-0320
மூன்றாம் முத்திரை

அன்புள்ள ஆவிக்குரிய ஏவாளே,

இன்றைக்கு என்னுடைய கடிதத்தை தேவனுடைய அணுகுண்டோடு துவங்குவேனாக; .22 என்ற ஒரு துப்பாக்கியோடு அல்ல, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கான அணுகுண்டு.

இப்பொழுது, நீங்கள் அவைகளை குறித்துக்கொள்ள வேண்டுமானால்; உண்மையாகவே, நீங்கள் யாவரும் அவைகளை அறிவீர்கள். இயேசு, யோவான் 14:12; யோவேல், யோவேல்: 2:38; பவுல், 2தீமோத்தேயு 3; மல்கியா 4-வது அதிகாரம்; திவ்வியவாசகனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷம் 10:17, 1-17, சரியாக இப்பொழுது என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள்.

அறிவிப்பும், எச்சரிக்கையும்: நீங்கள் நம்பினால் பின்வரும் மேற்கோள் உங்களுக்காக அல்.

“நாம் தேவனுடைய தீர்க்கதரிசியின் பேரில் மிஞ்சிப் போகிறோம்.” “நீங்கள் தீர்க்கதரிசி பேசுவதற்கு செவி கொடுத்தால், நீங்கள் மணவாட்டியாய் இருக்க முடியாது.” “சபையில் ஒலிநாடக்களை இயக்குவது தவறாய் உள்ளது.” “தீவட்டி அனுப்பப்பட்டுள்ளது; இன்றைக்கு மிக முக்கியமான காரியம் ஊழியத்திற்கு செவி கொடுத்துக் கொண்டிருப்பதாகும்.” “ஒரே நேரத்தில் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது ஒரு ஸ்தாபனமாக உள்ளது.”

சபைக்கு, அது என்னவாயுள்ளது? வார்த்தையானது மறுபடியும் அவருடைய மக்களிடையே மாம்சமானது. புரிகிறதா?

பயங்கரமான வெடி சத்தம்…எனவே இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம், அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறபோது, மாம்சமாக்கப்பட்ட வார்த்தை நம்மிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.

நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் இதுவல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? மேற்கோளின் இந்தப் பகுதி உங்களுக்கானது.

அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை.

நாம் யார் என்று கர்த்தர் தம்முடைய வார்த்தையிலிருந்து நமக்கு எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்துகிறாரோ, அந்த வெளிப்படுத்தலுக்கு வெளியே உள்ள அனைவரும் அவ்வளவு தூரம் விலகிச் செல்கிறார்கள்.

உண்மையாகவே, உங்களுக்கு… பதியவேண்டுமென்று அதை நான் கூறட்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே காரியம்தான் காணப்படுகின்றது, பாருங்கள், நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! பார்த்தீர்களா?

இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க தேவன் மனிதர்களை அபிஷேகம் செய்துள்ளார், ஆனால் ஒரே ஒரு முற்றிலுமான வார்த்தை மட்டுமே உள்ளது: வார்த்தை. ஒரு ஊழியக்காரர் அல்லது யாராவது பேசுவதை நீங்கள் கேட்கும்போது, அவர் கூறிக் கொண்டிருப்பது சரியாக தேவனுடைய தீர்க்கதரிசி ஏற்கனவே கூறியதுதான் என்று விசுவாசிப்பதற்கு உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தை, அவர்களின் வெளிப்பாடு, அவர்களின் வியாக்கியானம் தவறிப் போகக்கூடும்; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் ஒருபோதும் தவறி போக முடியாது.

இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தேவன் எளிமையில் இருப்பதை குறித்து பேசுகிறோம்...அவர் அதை மீண்டும்கூறுகிறார்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையினால், மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகிய, அவரை அவர்கள் காணத்தவறுகின்றனர். இவைகளைச் செய்யும்படியாக வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்துள்ளது. கடைசி நாட்களில் இது இவ்வாறு இருக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது.

அவருடைய இடிமுழக்கத்தைக் கேளுங்கள். ஒரு இடிமுழக்கம் என்பது தேவனுடைய சத்தம். வில்லியம் மாரியன் பிரான்ஹாம் இந்தத் தலைமுறைக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறார்.

மணவாட்டிக்கு உண்மையாக எழுப்புதல் இன்னும் நிகழவில்லை. புரிகிறதா? இன்னும் அங்கே எழுப்புதல் இல்லை, மணவாட்டியை அசைத்தெழுப்பும்படியாக தேவனுடைய வெளிப்படுத்துதல் இன்னும் வரவில்லை. பார்த்தீர்களா? நாம் இப்பொழுது அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடிகள் தான், அவளை மறுபடியுமாக எழுப்பும். பாருங்கள், ஆம். அவர் அதை அனுப்புவார். அவர் அதை வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள்.

நீங்கள் விரும்பினால் அதைத் திரிக்கலாம், ஆனால் ஏழு இடி முழக்கங்கள் மணவாட்டிக்கு வெளிப்பாட்டினாலும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தினாலும் ஊக்குவித்தலை அளிக்கும், இது தேவனுடைய தீர்க்கதரிசி மூலம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதன் மூலம் மட்டுமே வருகிறது. இது இப்போது உலகம் முழுவதும் நடைபெறுகிறது. தேவன் தம்முடைய மணவாட்டியை தனது வார்த்தையால் ஊக்குவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே நம்முடைய சத்துருவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

உன்னுடைய கரங்களை அவர்களிடத்திலிருந்து விலக்கி வை. அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்னர், ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். என் எண்ணெயினால் அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் என் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறார்கள். ‘நான் அவர்களை மறுபடியும் உயிரோடெழுப்புவேன்.’ அதை சேதப்படுத்த வேண்டாம்! அவர்களை குழப்பமுறச் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

அவர் நம்முடைய சத்துருவிடம் அவனுடைய மோசமான கைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் சுகவீனம் இன்னும் நம்மைத் தாக்க முடியுமா? ஆம். நமக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளதா? ஆம். ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்றும் நமக்கும் கூட சொன்னார்.

இது ஆழமானது. மெதுவாகவும் மீண்டும் மீண்டும் படியுங்கள்.

அது வார்த்தையாகுமுன்பு சிந்தையாயிருக்கும். ஒரு சிந்தை என்பது உருவாக்கப்படவேண்டும். சரி. ஆகவே, தேவனுடைய சிந்தனைகள் ஒரு வார்த்தையினால் பேசப்படும்பொழுது, அது சிருஷ்டிப்பாகிறது. அதாவது, அவர் ஒரு சிந்தையை, தம்முடைய சிந்தையை உங்களிடத்தில் கொடுக்கும்பொழுது, அது உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அதன்பின்னர், நீங்கள் அதைப் பேசுகின்ற வரையில், இது இன்னும் ஒரு சிந்தையாகவே இருக்கின்றது.

அது பேசப்படும்போது அவருடைய சிந்தனைகள் ஒரு சிருஷ்டிப்பாக மாறியது. பின்னர், அவருடைய சிந்தனைகள் வார்த்தையாக வழங்கப்பட்டு, நமக்கு வெளிப்படுத்தப்பட்டன. இப்போது நாம் அதைப் பேசும் வரை அது இன்னும் நம்முடன் ஒரு சிந்தனையாகவே இருக்கும். எனவே நாம் அதைப் பேசுகிறோம்... அதை விசுவாசிக்கிறோம்.

நான் ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. நான் கிறிஸ்துவின் மணவாட்டி. உலகம் தோன்றுவதற்கு முன்பே நான் அவருடைய மணவாட்டியாகத் தெரிந்து கொள்ளப்பட்டு முன்குறிக்கப்பட்டேன், அதை எதுவும் மாற்ற முடியாது. வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் என்னுடையது. அது எனக்கு அவருடைய வார்த்தை. நான் அந்த வாக்குத்தத்தத்திற்கு சுதந்திரவாளி. அவர் என் நோய்களை எல்லாம் குணமாக்குகிற தேவனாகிய கர்த்தர். எனக்கு என்ன தேவையோ அது என்னுடன் உள்ளது, தேவன் அவ்வண்ணமாய் கூறினார்.

எளிமையில் தேவன்: வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது. வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது.

ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும், தங்களுடைய செய்தியையும் நிரூபிக்க “மேற்கோள்களை” பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான், நானும் அவ்வாறு செய்கிறேன், அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்ல மேற்கோள்களை மட்டுமே தருகிறேன்: ஒலிநாடக்களோடு தரித்திருங்கள்; அந்தக் சத்தத்தைக் கேளுங்கள். அந்த சத்தம் தேவனுடைய சத்தமாய் உள்ளது. ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும், வேறு யாரோ கூறுவதை அல்ல. அந்த சத்தமே நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாகும்.

மற்றவர்கள் உங்களை தங்களுடைய ஊழியத்திற்கு, தங்களுடைய சபைக்கு, அவர்களுடைய வியாக்கியானத்திற்கு, அவர்களுடைய வெளிப்பாட்டிற்குக் கொண்டுவர மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். “உங்கள் போதகருடன் தரித்திருங்கள்.” (சரி, எனக்கும் கூட அது பிடிக்கும், ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம், ஒரு வித்தியாசமான போதகர்.) “அவர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் அல்ல.” “அவர் ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்கும்படி கூறவேயில்லை.”

தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். சுத்தமான, கலப்படமில்லாத ஒருவள் அவருக்குத் தேவை, வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவள் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்பமாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், நீங்கள் சாத்தானுடன் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகின்றது. ஆமென்! அது உங்களை பக்திபரவசமடையச் செய்கிறதல்லவா? நீங்கள் கலப்படமற்றவராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலைநில்லுங்கள். அதனுடன் நிலை நில்லுங்கள். சரி.

நானும் என் வீட்டாருமோவென்றால், நாங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலமாக மாம்சமாக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை பேசுவதை கேட்டு பின்பற்றுவோம். நாங்கள் அதில் எங்களுடைய தனிப்பட்ட வியாக்கியானத்தை சேர்க்க மாட்டோம்; நாங்கள் சரசமாடவோ அல்லது எந்த தக்க அறிவிற்க்கும் செவி கொடுக்க மாட்டோம். ஒலிநாடாக்களில் அது உரைக்கப்பட்டப்படியே அந்த வார்த்தையோடு நாங்கள் தரித்திருப்போம். இது தேவன் எளிமையில் உள்ளதாகும்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, மூன்றாம் முத்திரை 63-0320 என்ற செய்தியை நாங்கள் கேட்கும் போது எங்களுக்கு அது என்ன ஒரு மகிமையான நேரமாய் இருக்கப் போகிறது. இன்றைக்கான வார்த்தையின் பேரில் நாங்கள் ஒன்றிணையும்போது நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்க விரும்புகிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

பரி. மத்தேயு 25:3-4
பரி. யோவான் 1:1, 1:14, 14:12, 17:17
அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம்
1 தீமோத்தேயு 3:16
எபிரெயர் 4:12, 13:8
1 யோவான் 5:7
லேவியராகமம் 8:12
எரேமியா 32-ம் அதிகாரம்
யோவேல் 2:28
சகரியா 4:12

 

நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவேனாக. நான் ஐந்து- வகையான ஊழியத்திற்கு எதிரானவன் அல்ல. ஐந்து-வகையான ஊழியத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு ஊழியருக்குச் செவிசாய்ப்பது தவறென்று நான் நினைக்கவில்லை. தேவன் உங்களை எங்கே வைத்திருக்கிறாரோ அங்கு உங்கள் போதகருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால், நம்முடைய காலத்தில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நான் நம்புகிறேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தினார். நான் தவறாக இருக்கலாம், உங்கள் போதகர் தவறாக இருக்கலாம், ஆனால் நாம் (இந்தச் செய்தி உண்மையானது என்றும், சகோதரன் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் நாம் விசுவாசிப்பதாக கூறுவோமேயானால்) ஒப்புக் கொள்ள வேண்டும். ஒலிநாடாக்களில் கூறப்பட்டுள்ளது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் செய்தியை விசுவாசிக்கவில்லை. எனவே, நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் இதுவே என்று நான் நம்புகிறேன். நீங்கள் எனக்கு செவி கொடுக்க வேண்டியதில்லை, வேறு யாருக்கும் செவி கொடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள அந்த சத்தத்தைக் கேட்க வேண்டும்.