அன்புள்ள நித்தியமானவர்களே,
நம்முடைய ஆடம்பரங்களான அறிவு சார்ந்த சிந்தையை அகற்றிவிட்டு, உங்களுடைய ஆவிக்குரிய சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனெனில் தேவன் தம்முடைய மணவாட்டிக்கு தம்முடைய வார்த்தையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தத் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்துவார். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் நமக்குச் சொல்வார். வேதாகமத்தில் உள்ள மற்ற அனைவரும் இப்போது பார்த்த அல்லது கேட்டதை, அவர் தம்முடைய வார்த்தையின் ஒவ்வொரு சிறிய விவரத்தையும், அதன் அர்த்தத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார்.
ஜீவனுள்ள சிருஷ்டிகள், கண்ணாடிக் கடல், சிங்கம், காளை, மனிதன், கழுகு, கிருபாசனம், காவலர்கள், மூப்பர்கள், சத்தங்கள், தேரியன், சூன் போன்ற வேதாகமத்தின் சின்னங்களின் அர்த்தத்தை நாம் கேட்டு புரிந்து கொள்ளப் போகிறோம்.
பழைய ஏற்பாட்டின் காவலர்களைப் பற்றிய அனைத்தையும் நாம் கேட்டு புரிந்துகொள்வோம். யூதா: கிழக்கு காவலர்; எப்பிராயீம்: மேற்கு காவலர்; ரூபன்: தெற்கு காவலர்; மற்றும் தாண்: வடக்கு காவலர்.
அக்கோத்திரங்களைத் தாண்டி வேறு எதுவும் அங்கே எந்த இடத்திலும் ஊடுருவி வந்து விட முடியாது. சிங்கம், மனுஷனுடைய விவேகம்; காளை: கடுமையாக உழைக்கும் மிருகம்; கழுகு: அதனுடைய வேகமாக செயல்படுகிற தன்மை.
எப்படி வானத்திலும், பூமியிலும், இடையிலும், சுற்றிலும், அவைகள் காவலர்களாக இருந்தனர். அதற்கு மேலே அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அந்த கோத்திரங்களைக் கடக்காமல் எதுவுமே அந்த கிருபாசனத்தை தொட்டதில்லை.
இப்போது புதிய ஏற்பாட்டின் காவலர்கள் உள்ளனர்: மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான், நேராக முன்னோக்கி செல்கிறார்கள். கிழக்கு வாசல் சிங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது, வடக்கு வாசல் பறக்கும் கழுகினால், யோவானால், சுவிசேஷகனால் பாதுகாக்கப்படுகிறது. பிறகு இந்தப் பக்கத்தில் உள்ள வைத்தியன், லூக்கா, மனிதன்.
இந்நான்கு சுவிசேஷப் புத்தகங்களும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்கள் என்ன கூறினார்களோ, அவற்றை அப்படியே ஆதரித்து நிற்கத்தக்கதாக, அதை காத்து நின்றன. எனவே இப்பொழுது, இன்றைக்கு, அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமானது நான்கு சுவிசேஷப் புத்தகங்களோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை ரூபகாரப்படுத்துகிறது.
தேவனுடைய உண்மையான அபிஷேகம் பெற்றவர் பேசும் போது, அதுவே தேவனுடைய சத்தமாயிருக்கிறது! நாம், “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!” என்று சத்தமிட விரும்புகிறோம்.
அதை விட்டு அகன்று போக வழியேயில்லை. உண்மையில், அதை விட்டு நாம் அகன்று போகவே முடியாது. ஏனெனில், அது நம்மை விட்டு அகன்றிடாது. புரிகிறதா? நாம் மீட்கப்படும் நாள் வரைக்கும் முத்திரையிடப்படுகின்றோம். வருங்காலமோ, நிகழ்காலமோ, நாசமோசமோ, பசியோ, தாகமோ, மரணமோ, அல்லது வேறு எந்த ஒன்றுமோ, கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது.
இந்த ஒளியைக் காணவும், இந்தச் சத்தத்தைப் பெற்றுக் கொள்ளவும், இந்தச் செய்தியை விசுவாசிக்கவும், நம்முடைய நாளுக்கான பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவும், அதில் நடக்கவும், உலகத் தோற்றத்திற்கு முன்னமே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டன. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, ஆட்டுக்குட்டியானவரின் பெயர் புத்தகத்தில் எழுதப்பட்ட அதே நேரத்தில் நம்முடைய பெயர்களும் எழுதப்பட்டன. மகிமை!!
எனவே, இந்தச் செய்தியிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது. அந்த சத்தத்திலிருந்து இருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது. இந்த வார்த்தையின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து எதுவுமே எடுத்துப் போட முடியாது. அது நம்முடையது. தேவன் நம்மை அழைத்து, நம்மைத் தெரிந்துகொண்டு, நம்மை முன்குறித்தார். ஒவ்வொரு காரியமும் நமக்குச் சொந்தமானதும், நம்முடையதுமாயிருக்கிறது.
இதையெல்லாம் பெற்றுக் கொள்ள ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் வார்த்தையின் தண்ணீரால் கழுவப்பட வேண்டும். நீங்கள் அங்கு நுழைவதற்கு முன் வார்த்தையைக் கேட்க வேண்டும். நீங்கள் தேவனை அணுகுவதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே இருக்கிறது, அது விசுவாசத்தின் மூலமேயாகும். விசுவாசம் கேட்பதனால், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது, அது மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து காலத்தின் செய்தியாளருக்குள்ளாக பிரதிபலிக்கப்படுகிறது.
எனவே, இங்கே, அந்த தண்ணீரில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிற சபைக் காலத்திற்குரிய தூதனானவனே இங்கேயிருந்து கொண்டு, அவருடைய இரக்கத்தையும், அவருடைய வார்த்தைகளையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும், அவரது நாமத்தையும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறவனாயிருக்கிறான். இங்கே யாவும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன, அதை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம், அங்கே வேறுபிரிக்கப்படுகின்றீர்கள். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
ஒலிநாடாக்களைக் கேட்பதை நிறுத்தி விடாதீர்கள், அதனோடு தரித்திருங்கள். வார்த்தையினால் அதை ஆராய்ந்து பார்த்து, அது சரியா என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது இந்நாளுக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் அவருடைய மணவாட்டிக்கு அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்க உலகெங்கிலும் இருந்து நாம் ஒன்றுபடும் இந்த குளிர்காலத்தில் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். இயங்கு பொத்தானை அழுத்தி, அவருடைய சத்தத்தைக் கேட்பதை விட மகத்தான அபிஷேகம் வேறுஎதுவுமே இல்லை.
என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து என்னால் கூற முடியும்: உங்கள் ஒவ்வொருவரோடும் நானும் அவர்களில் ஒருவன் என்று என்னால் கூற முடியும் என்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 61-0108 - "வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம் பாகம் III”
நேரம்: பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வீட்டில் கூடுகிற மணவாட்டி சபையே,
நாம் யாவரும் ஒன்று கூடி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, 61-0101 வெளிப்படுத்தின விசேஷம், நான்காம் அதிகாரம், பாகம் II என்ற செய்தியைக் கேட்போமாக.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள மணவாட்டியே,
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு அற்புதமான கிறிஸ்மஸைக் கொண்டாடினீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை இன்றைக்கு உலகம் காண்கிற தொழுவத்தில் விட்டுவிடவில்லை, ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார், தம்முடைய மணவாட்டியின் நடுவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தம்முடைய சத்தத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் இன்று எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நான் ஏற்கனவே அறிவித்தபடி, புத்தாண்டு தினத்தன்று, டிசம்பர் 31 அன்று நம்முடைய வீடுகளில்/சபைகளில் மீண்டும் ஒருமுறை இராப்போஜனத்தை நடத்த விரும்புகிறேன். பங்கேற்க விரும்புவோர், நாம், 62-1231 போட்டி என்ற செய்தியை கேட்டுவிட்டு, செய்தியின் நிறைவில் சகோதரன் பிரான்ஹாம் அறிமுகப்படுத்தும் இராபோஜன ஆராதனைக்குச் செல்வோம்.
உள்ளூர் விசுவாசிகளுக்கு, நாங்கள் இரவு 7:00 மணிக்கு ஒலிநாடாவை இயக்கத் தொடங்குவோம். இருப்பினும், மற்ற நேர மண்டலங்களில் இருப்பவர்கள், உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்தியைத் இயக்கத் தொடங்கவும். சகோதரன் பிரான்ஹாம் தனது புத்தாண்டுக்கு முந்தின மாலை செய்தியைக் கொண்டு வந்த பிறகு, பத்தி 59-ன் இறுதியில் ஒலிநாடாவை இடைநிறுத்துவோம், மேலும் நாங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்கேற்கும்போது தோராயமாக 10 நிமிட பியானோ இசையைக் கேட்போம். சகோதரன் பிரான்ஹாம் ஆராதனையை முடித்தவுடன் ஒலிநாடாவை மீண்டும் இயக்கத் தொடங்குவோம். இந்த ஒலிநாடாவில், கால்களைக் கழுவும் ஆராதனை பகுதியை அவர் தவிர்க்கிறார், அதை நாமும் கூட தவிர்ப்போம்.
திராட்சை ரசத்தை எப்படிப் பெறுவது என்பதும், இராப்போஜன அப்பத்தை சுடுவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைப்புகளில் காணலாம். இணையதளத்தில் இருந்து ஒலிப்பதிவை இயக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம் அல்லது லைஃப்லைன் பயன்பாட்டில் உள்ள வாய்ஸ் ரேடியோவில் இருந்து ஆராதனையை இயக்கலாம் (இது ஜெபர்சன்வில் நேரப்படி மாலை 7:00 மணிக்கு ஆங்கிலத்தில் இயக்கப்படும்.)
நம்முடைய கர்த்தருக்கு சேவை செய்யும் மற்றொரு வருடத்தை நாம் நெருங்கும்போது, முதலில் அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் அவருக்கு நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோமாக, பின்னர் அவருடைய இராப்போஜனத்தில் பங்கெடுப்போம். அவருடைய சேவைக்காக நம்முடைய ஜீவியங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்போது அது எவ்வளவு ஒரு மகிமையான, புனிதமான நேரமாயிருக்கும்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
சகோதரன் ஜோசப்
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள வெண்வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்களே,
தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை நாம் கேட்கும் போது, நம்முடைய ஆத்துமாவில் ஏதோ காரியம் ஆழமாக சம்பவிக்கிறது. நம்முடைய முழு சரீரமும் மறுரூபமாக்கப்பட்டு நம்மை சுற்றியுள்ள உலகம் மறைந்து போவதாக தென்படுகிறது.
நாம் கேட்கிற ஒவ்வொரு செய்தியிலும் தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்தும்போது, நம்முடைய இருதயங்களிலும், நம்முடைய சிந்தைகளிலும், நம்முடைய ஆத்துமாக்களிலும் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி ஒருவரால் வெளிப்படுத்த முடியும்?
நம்முடைய தீர்க்கதரிசியைப் போலவே, நாம் மூன்றாம் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக உணரும்போது, நம்முடைய ஆவி இந்த அழிவுள்ள சரீரத்தைவிட்டு வெளியேறுவது போல் தென்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவன் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தும்போது நாம் என்ன உணர்கிறோம் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
யோவான் பத்மூ தீவில் வைக்கப்பட்டு, அவன் கண்டதை எழுதி வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகத்தில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான், அதனால் அது காலங்களினூடாக செல்லும். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட 7-வது தூதனாகிய செய்தியாளனினூடாக நமக்கு அந்த ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் வரையில் அவைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர் யோவான் தனக்கு மேலே அதே சத்தத்தைக் கேட்டு மூன்றாம் வானத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அந்த சத்தம் அவனுக்கு சபைக் காலங்களையும், யூதர்களின் வருகையையும், வாதைகளின் ஊற்றப்படுதலையும், எடுத்துக்கொள்ளப்படுதலையும், மீண்டும் வருவதையும், ஆயிர வருட அரசாட்சியையும், அவருடைய இரட்சிக்கப்பட்ட நித்திய பரம இல்லத்தையும் காண்பித்தது. அவர் யோவானை அழைத்துச் சென்று, அவர் செய்வேன் என்று அவனுக்கு கூறினது போன்ற முழு காரியத்தின் ஒத்திகையையும் காண்பித்தார்.
ஆனால் யோவான் ஒத்திகையைக் கண்டபோது யார் அவனைப் பார்த்தது? இன்று வரை உண்மையாகவே யாருக்கும் தெரியாது.
வருகையில் அவன் கண்ட முதலாவது காரியம் மோசேயாக இருந்தது. அவன் உயிர்த்தெழுப்பப்படும் மரித்த பரிசுத்தவான்களை பிரதிநிதித்துவப்படுத்தினான்; ஆறு சபைக் காலங்கள் முழுவதிலும் நித்திரையடைந்திருந்தவர்கள்.
ஆனால் அங்கே மோசே மட்டும் நின்று கொண்டிருக்கவில்லை, ஆனால் எலியாவும் கூட அங்கே இருந்தான்.
நின்று கொண்டிருந்த எலியா யார்?
ஆனால் அங்கே எலியா; கடைசி நாளின் தூதன், தன்னுடைய குழுவினரோடு, மறுரூபமாக்கப்பட, எடுத்துக்கொள்ளப்படப் போகிறவர்களோடு இருந்தான்.
மகிமை...அல்லேலூயா…அங்கே நின்று கொண்டிருந்த யோவானைக் கண்டது யார்?
தேவனுடைய 7வது தூதனாகிய செய்தியாளன், வில்லியம் மரியன் பிரான்ஹாம், அவருடைய மறுரூபமாக்கப்பட, எடுத்துக் கொள்ளப்படவுள்ள குழுவாகிய…நம் ஒவ்வொருவரோடும் இருந்த அவரைத் தவிர வேறு யாருமில்லையே!!
எலியாவோ மறுரூபப்படுத்தப்படும் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினான். மோசே தான் முந்தினவன். எலியா அதன்பின் என்பது நினைவிருக்கட்டும். கடைசி நாளுக்குரிய தூதனாயிருக்கும்படி எலியா வைக்கப்பட்டிருந்தான், அவனோடும், அவனுடைய குழுவினரோடும் உயிர்த்தெழுதல்…பாருங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல் வரும் என்பதையே பொருட்படுத்திக் கூறிகிறேன். மோசே உயிர்த்தெழுதலை பெறும் கூட்டத்தையும், எலியா மறுரூபப்படுத்தப்படும் குழுவினரையும் கொண்டு வருகிறார்கள். அங்கே, அவர்கள் இருவருமே அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
திரைநீக்கப்படுதலையும், வெளிப்படுத்துதலையும், வெளிப்பாட்டையும் குறித்துப் பேசுகிறோம்.
இங்கே அது இருக்கிறது! நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாகிய பரிசுத்த ஆவியானவரை இப்பொழுதே நம்மிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். நீங்கள்…அவர் உங்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டும் போதித்துக் கொண்டும், எது சரியானது எது தவறானது என்றும் நீங்கள் கண்டுக் கொள்ளச் செய்ய முயன்று கொண்டும் இருக்கிறார். அது பரிசுத்த ஆவியானவர் தாமே மானிட உதடுகள் மூலம் பேசிக் கொண்டும், மனித இனத்தின் நடுவில் கிரியை செய்து கொண்டும், இரக்கத்தையும் கிருபையையும் காண்பிக்க முயன்று கொண்டும் இருக்கிறார்.
ஜீவ அப்பத்தைப் புசிப்பதற்காக பூமி முழுவதிலுமிருந்து வருகிறதாக அவருடைய தூதன் கண்ட வெண் வஸ்திரம் தரித்த பரிசுத்தவான்கள் நாமே. நாம் அவருடன் நிச்சயிக்கப்பட்டு, விவாகம் செய்து கொண்டு, அவருடைய நிச்சயதார்த்த முத்தத்தை நம்முடைய இருதயத்தில் உணர்ந்துள்ளோம். நாம் தாமே அவருக்கு, அவருடைய சத்தத்திற்கு மாத்திரமே உறுதிமொழியளித்தோம். நாம் நம்மை வேறெந்த சத்தத்தோடும் தீட்டுப்படுத்திக் கொண்டதில்லை, தீட்டுப்படுத்தவும் மாட்டோம்.
தேவனுடைய பிரசனத்திற்குள்ளாக; யோவான் சென்றது போல மணவாட்டி மேலே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சபையில் எடுத்துக் கொள்ளப்படுதலில் நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். அது நம்முடைய ஆத்துமாவை எப்படி சுற்றி வளைக்கிறது!
அடுத்து அவர் நமக்கு என்ன வெளிப்படுத்தப் போகிறார்?
நியாயத்தீர்ப்புகள்; பதுமராகக் கல், அது எதைக் குறிக்கிறது; அது என்ன பங்கு வகித்தது. வச்சிரக் கல், மற்றும் எல்லா வெவ்வேறு கற்களுமே. அவர் இவை அனைத்தையும் எசேக்கியேல் மூலம் எடுத்துச் சென்று, மீண்டும் ஆதியாகமத்திற்கு வந்து, மீண்டும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வந்து, வேதாகமத்தின் மையத்திற்கு வந்து, அதை ஒன்றாக இணைப்பார்; இந்த எல்லா வெவ்வேறு கற்களையும், நிறங்களையுமே.
அதே பரிசுத்த ஆவியானவர், அதே தேவன், அதே அடையாளங்களை, அதே அற்புதங்களைக் காட்டுகிறார், அவர் வாக்குறுதியளித்தபடியே அதே காரியத்தை செய்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி அவருடைய சத்தத்தை கேட்பதன் மூலம் தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொள்கிறதாயிருக்கிறது.
காலங்களினூடாக மறைக்கப்பட்டிருந்த ரகசியங்களை வெளிப்படுத்த, இந்த கடைசி காலத்திற்கு தேவனுடைய செய்தியாளனாகிய எலியா பேசுவதை கேட்க, ஜெஃபர்சன்வில் நேரப்படி, 12:00 மணிக்கு நாங்கள் உன்னதங்களில் வீற்றிருக்கப் போகிறபடியால் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 60-1231 வெளிப்படுத்தின விசேஷம், அதிகாரம் நான்கு பாகம் I
● போட்டி 62-1231: என்ற செய்தியே செவ்வாய் இரவு, நம்முடைய புத்தாண்டினுடைய செய்தி என்பதை நினைவில் கொள்ளவும். புத்தாண்டைத் தொடங்க இதைவிட சிறந்த வழி இல்லை.
தொடர்புடைய சேவைகள்
அன்புள்ள திருமதி. இயேசுவே,
ஓ தேவாட்டுக் குட்டியே, நீர் உலகத்திற்கு தேவனுடைய மகத்தான சுற்றப்பட்ட வெகுமதியாய் இருக்கிறீர். எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியாக உம்மையே நீர் எங்களுக்கு அளித்திருக்கிறீர். நீ முதல் நட்சத்திரத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் பூமியை, சந்திரனை, சூரிய குடும்பத்தை சிருஷ்டிக்கும் முன்னே, நீர் எங்களை அறிந்து, உம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி எங்களை தெரிந்து கொண்டீர்.
நீர் எங்களை அப்பொழுது கண்டபோது, நீர் எங்களை நேசித்தீர். நாங்கள் உம்முடைய மாம்சத்தின் மாம்சமும், உம்முடைய எலும்பின் எலும்புமாயிருந்தோம்; நாங்கள் உம்முடைய ஒரு பாகமாக இருந்தோம். நீர் எப்படியாய் எங்களை நேசித்து, எங்களோடு ஐக்கியம் கொள்ள விரும்பினீர். நீர் உம்முடைய நித்திய ஜீவனை எங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினீர். நாங்கள் உம்முடைய திருமதி. இயேசுவாய் இருப்போம் என்பதை அப்பொழுதே நாங்கள் அறிந்து கொண்டோம்.
நாங்கள் தவறிப் போவோம் என்பதை நீர் கண்டீர், எனவே எங்களை திரும்பவும் மீட்டெடுக்க ஒரு வழியை நீர் அளிக்க வேண்டியதாயிருந்தது. நாங்கள் இழக்கப்பட்டு நம்பிக்கையற்றவர்களாக இருந்தோம். ஒரே ஒரு வழி இருந்தது, நீர் ஒரு “புது சிருஷ்டியாக” வேண்டியதாயிருந்தது. தேவனும் மனிதனும் ஒன்றாக மாறவேண்டியதாயிருந்தது. நாங்கள் உம்மைப் போலாகும்படிக்கு நீர் எங்களைப் போலாக வேண்டியதாய் இருந்தது. இவ்வாறு, நீர் ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உம்முடைய பெரிய திட்டத்தை செயல்படுத்தினீர். உம்முடைய பரிபூரண வார்த்தை மணவாட்டியான எங்களுடன் இருக்க நீர் மிகவும் வாஞ்சித்தீர், ஆனால் ஆதியிலே இழக்கப்பட்டிருந்த யாவற்றையும் நீர் எங்களுக்கு மீண்டும் திரும்பளிக்க வேண்டியதாய் இருந்தது என்பதை முதலில் நீர் அறிந்திருந்தீர். நீர் உம்முடைய திட்டத்தை முடிக்க இந்நாள் வரை காத்துக் கொண்டேயிருந்தீர்.
அந்த நாளானது வந்துவிட்டது. நீர் ஆதியில் கண்ட அந்த சிறிய குழு இங்கே உள்ளது. எல்லாவற்றைக் காட்டிலும் உம்மையும் உம்முடைய வார்த்தையையும் உம்முடைய இனிய இருதயம் நேசிக்கிறாள்.
நீர் ஆபிரகாமுடன் செய்தது போல, நீர் ஒரு புது சிருஷ்டியானபோது செய்தது போல, இது நீர் மானிட மாம்சத்தில் வந்து உம்மையே வெளிப்படுத்த வேண்டிய நேரமாயிருந்தது. உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த உம்முடைய மகத்தான எல்லா இரகசியங்களையும் நீர் எங்களுக்கு வெளிப்படுத்தும்படியாக இந்த நாளுக்காக நீர் எவ்வளவாய் வாஞ்சித்திருந்தீர்.
நீர் உம்முடைய மணவாட்டியைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறீர். நீர் எப்படி அவளைக் காண்பித்து சாத்தானிடம், “நீ அவர்களுக்கு என்ன செய்ய முயற்சித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் அசைய மாட்டார்கள்; அவர்கள் என் வார்த்தை, என்னுடைய சத்தத்தின் பேரில் சமரசம் செய்ய மாட்டார்கள். அவர்கள் என்னுடைய பரிபூரண வார்த்தை மணவாட்டி” என்று சொல்ல விரும்புகிறீர். அவர்கள் எனக்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாகவும் என்னுடைய வார்த்தைக்கு உண்மையாய் தரித்திருக்கிறார்கள். நான் அவர்களுக்கு நித்திய வெகுமதியை கொடுப்பேன். எனக்கு இருக்கிற எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுக்கிறேன். நாங்கள் ஒன்றாக இருப்போம்.
நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம், “இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை எங்களுடைய வீட்டுக்குள் வரவேற்போமாக. நாங்கள் உமக்கு எண்ணெய் பூசி, உம்முடைய பாதங்களை எங்களுடைய கண்ணீரால் கழுவி, அவைகளை முத்தம் செய்வோம். நாங்கள் எப்படியாய் உம்மை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உமக்கு சொல்வோமாக.”
எங்களுக்கு இருக்கிற எல்லாவற்றையும், நாங்கள் இயேசுவே உமக்கு அளிக்கிறோம். அதுவே உமக்கு எங்களுடைய வெகுமதியாய் உள்ளது. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நாங்கள் உம்மை போற்றுகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இயேசுவை உங்களுடைய வீட்டில், உங்களுடைய சபையில், உங்களுடைய காரில், நீங்கள் எங்கே இருந்தாலும், மனிதனுக்கு எப்போதும் அளிக்கப்பட்டதிலேயே மகத்தான வெகுமதியான: தேவன் தாமே பேசி உங்களோடு ஐக்கியங்கொள்ளுகிறதை பெற்றுக் கொள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
60-1225 தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி