
அன்பான இளைப்பாறுகிறவர்களே,
நாங்கள் இங்கே இருக்கிறோம். நாங்கள் வந்தடைந்துவிட்டோம். இந்தச் செய்தியின் வெளிப்பாடு தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை வார்த்தையின் ரூபகாரப்படுத்துதல் நிரூபித்துள்ளது. ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பதன் மூலம் நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம்.
இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது எவ்வளவு முக்கியம்? ஒலிநாடாக்களில் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், மிகவும் புனிதமானவைகளாகவும் உள்ளபடியால், தேவன் அதற்கு ஒரு தேவதூதனைக் கூட நம்ப முடியவில்லை... அவருடைய பரலோக தூதர்களில் ஒருவனைக் கூட அல்ல. அது அவருடைய தீர்க்கதரிசியால் வெளிப்படுத்தப்பட்டு அவருடைய மணவாட்டிக்கு கொண்டு வரப்பட வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை அவருடைய தீர்க்கதரிசிக்கு மட்டுமே வருகிறது.
தேவன் முத்திரைகளை உடைத்து, அதைத் தம்முடைய பூமிக்குரிய ஏழாம் தூதனாகிய செய்தியாளரிடம் ஒப்படைத்து, முழு வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தையும் அவருக்கு வெளிப்படுத்தினார். பின்னர், தேவன் தம்முடைய பூமிக்குரிய தூதன் மூலம் பேசி, ஒவ்வொரு காரியத்தையும் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு சிறிய விவரமும் நமக்குப் பேசப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் நம் மீது மிகுந்த அக்கறை கொண்டதால், காலத்தின் தொடக்கத்திலிருந்து இங்கே பூமியில் என்ன நடந்துள்ளது என்பதை அவர் நமக்குச் சொன்னது மட்டுமல்லாமல், அவர் தம்முடைய தூதன் மூலம் பேசி, தற்போது பரதீசைப் போன்ற ஒரு இடத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நமக்குச் சொன்னார்.
நாம் இந்த பூமிக்குரிய கூடாரத்தை விட்டுச் செல்லும்போது நமக்காக எதிர்காலம் என்ன வைத்துள்ளது என்பதைப் பற்றி நாம் கவலைப்படவோ அல்லது நிச்சயமற்றவர்களாகவோ இருக்க அவர் விரும்பவில்லை. எனவே, தேவன் தாமே தம்முடைய பலமுள்ள ஏழாம் தூதனை காலத்தின் திரைக்கு அப்பால் அழைத்துச் சென்றார், அதனால் அவர் அதைப் பார்க்கவும், அதை உணரவும், அங்கிருந்த அவர்களிடம் பேசவும் கூட முடிந்தது. அது ஒரு தரிசனம் அல்ல, அவர் அங்கே இருந்தார்.
அவர் திரும்பி வந்து நம்மிடம் சொல்லும்படி தேவன் அவரை அங்கு அழைத்துச் சென்றார்: “நான் அங்கே இருந்தேன், நான் அதைப் பார்த்தேன். அது இப்போதே சம்பவித்துக் கொண்டிருக்கிறது...நம்முடைய தாய்மார்கள், நம்முடைய தந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள், குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், கணவன்மார்கள், தாத்தா பாட்டிகள், மோசே, எலியா, அங்கே சென்றுள்ள எல்லா பரிசுத்தவான்களும் வெள்ளை அங்கிகளில், நமக்காக இளைப்பாறிக் கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
நாம் இனி அழ மாட்டோம், ஏனென்றால் அது முழுவதுமே மகிழ்ச்சியாக இருக்கும். நாம் இனி சோகமாக இருக்க மாட்டோம், ஏனென்றால் அது முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும். நாம் ஒருபோதும் மரிக்க மாட்டோம், ஏனென்றால் அது முழுவதுமே ஜீவனாயுள்ளது. நாம் வயோதிகராக முடியாது, ஏனென்றால் நாம் அனைவரும் என்றென்றும் இளமையாகவே இருப்போம்.
இது பரிபூரணம்...கூடுதலாக பரிபூரணம்...கூடுதலாக பரிபூரணம், நாம் அங்கு சென்று கொண்டிருக்கிறோம்!! மோசேயைப் போலவே, நாம் ஒரு குளம்பைக் கூட விட்டுச் செல்ல மாட்டோம், நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம்...நம்முடைய குடும்பத்தினர் அனைவருமே.
அந்த பலமுள்ள ஏழாம் தூதனை நேசிப்பது எவ்வளவு முக்கியம்?
அது, “நீ நேசித்த அனைவரையும்…” என்று சத்தமிட்டது, என்னுடைய ஊழியத்திற்கான பலன். எனக்கு எவ்வித பலனும் வேண்டாம். அவர், “நீ நேசித்த அனைவரையும், உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும், தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
தயவுசெய்து அதை மீண்டும் படிப்போமாக: அவர் என்ன சொன்னார்?...தேவன் உனக்கு கொடுத்திருக்கிறார்!!
நாம் அவர்களுடன் சேர்ந்து, "நாங்கள் அதன் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்" என்று சத்தமிடுவோம்.
நாம் நம்முடைய எந்த நித்திய இலக்கின் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்? ஒலிநாடாக்களில் உரைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையின் பேரிலுமே. மணவாட்டி செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பது என்ற உண்மையான வெளிப்பாட்டை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதற்கு நான் கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.
நீங்கள் எங்களோடு இளைப்பாற விரும்புகிறீர்களா? எதிர்காலம் என்ன வைத்துள்ளது என்பதை குறித்த எல்லாவற்றையும், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும், எப்படி அங்கே சென்றடைய வேண்டும் என்பதையும் நாங்கள் கேட்க போகிறபடியால், தேவனுடைய சத்தம் பேசி: ஐந்தாம் முத்திரையை 63-0322 திறப்பதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
தானியேல் 9:20-27
அப்போஸ்தலர் 15:13-14
ரோமர் 11:25-26
வெளிப்படுத்தின விசேஷம் 6:9-11 / 11:7-8 / 22:8-9