ஞாயிறு
16 மார்ச் 2025
63-0318
முதலாம் முத்திரை

என் அன்பான பரலோகத்தின் ராணியே,

இந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்காக நிறைய சேமிப்பில் வைத்திருக்கிறேன். முதலில், நீங்கள் இடி முழக்கத்தைக் கேட்பீர்கள். இது என்னுடைய சத்தமாக இருக்கும், என் மணவாட்டியாகிய, உங்களிடத்தில் பேசும் தேவனுடைய சத்தம். முன்னெப்போதும் இல்லாத வகையில் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்துவேன். நீங்கள் என்னை, உலகத் தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர், புத்தகத்தை எடுத்து திறந்து, முத்திரைகளை உடைத்து, அதை பூமிக்கு என்னுடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளராகிய, வில்லியம் மரியன் பிரான்ஹாமினிடத்திற்கு, உலகத் தோற்றத்திற்கு முன்னே மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி பூமிக்கு அனுப்புவதை காண்பீர்கள்!

நான் உங்களிடம் பேசும்போது உலகம் முழுவதிலும் இருந்து சத்தமிடுதலும், ஆரவாரமும், அல்லேலூயாக்களுமாய் இருக்கும். சிங்கம் கர்ஜிக்கும்; அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், வல்லமை, மகிமை, வெளிப்படுத்துதல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். என் ராணியே, நீ, நான் உன்னிடம் பேசி எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை உனக்கு அளிக்கும்போது, நீ உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்திருப்பாய்.

பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை நீங்கள் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என்னுடைய தூதனுக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் சொன்னேன்.

அவன், “பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பக் கொண்டுவர” வேண்டியவனாய் இருக்கிறான். மூல வேத விசுவாசமானது ஏழாம் தூதனால் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டியதாயுள்ளது.

ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவனுடைய சுவிசேஷ எக்காளத்தை முழங்குகையில்; அவன் எல்லா தேவனுடைய ரகசியங்களையும் முடிக்க வேண்டியவனாய் இருக்கிறான் என்று என்னுடைய வார்த்தை உங்களுக்கு சொல்கிறது. நான் ஒலிநாடாக்களில் கூறியுள்ளதிலிருந்து ஒரு காரியமும் சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ முடியாது; என்னுடைய தூதனாகிய செய்தியாளர் மூலமாக நான் பேசியதை அப்படியே கூறுங்கள். நீங்கள் எளிமையாக இயங்கு பொத்தானை அழுத்தி நான் சரியாக என்ன கூறினேன் என்றும், நான் எப்படி கூறினேன் என்றும் கேட்கும்படியாக அதைத்தான் நான் ஒலிப்பதிவு செய்திருந்தேன். அது உங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய விசுவாசத்தை அளிக்கும்.

என் அன்பான ராணியே, என்னுடைய பார்வையில், நீ பரிபூரணமானவளாய், முற்றிலுமானவளாய், எனக்கு முன்பாக பாவமற்றவளாய் இருக்கிறாய். கவலைப்படாதீர்கள், நீங்கள் உபத்திரத்தினூடாக செல்வதில்லை; ஏனென்றால் நீங்கள் என்னுடைய இரத்தத்தை, என்னுடைய வார்த்தையை, என்னுடைய தூதனை, என்னுடைய சத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், எனவே நீங்கள் எனக்கு முன்பாக முற்றிலும் பாவமற்றவர்களாய் இருக்கிறீர்கள்.

உங்களுக்காக அப்பேர்ப்பட்ட மகத்தான காரியங்களை சேமிப்பில் நான் வைத்துள்ளேன். ஒவ்வொரு நாளும் உங்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய வார்த்தை வெளிப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று சொல்ல நான் வானத்தில் அடையாளங்களை வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் வருகிறேன், ஆயத்தமாகுங்கள். என் வார்த்தையை, என் சத்தத்தை, உங்களுடைய ஜீவியத்தில் முதலில் வையுங்கள்.

எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள், என் வார்த்தையை விட முக்கியமானது எதுவுமில்லை. சத்துரு உங்களை வீழ்த்த முயற்சிக்கிறான் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை உயர்த்துவேன் என்று நான் உங்களுக்கு வாக்களித்தேன். நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருக்கிறேன் நான் என்னுடைய வார்த்தையை உங்களுக்கு வெளிப்படுத்தும்போது நீங்களும் நானும் ஒன்றாகிறோம். நீங்கள் உங்களுடைய இருதயத்தில், நீங்கள் என்னுடைய ராணி மணவாட்டியாய் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். நான் உங்களை முன்குறித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களோடு இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உங்களிடத்தில் என்னுடைய தூதன் மூலமாக நான் பேசுவதை நீங்கள் கேட்கும் போது, நான் உங்களுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதிகமாக வெளிப்படுத்தும் போது, நாம் அப்பேற்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாக இருப்போம். நீங்கள் காண்கிறதை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அல்லது காணாமல் இருக்கலாம், ஆனால் இதுவே என்னுடைய அருளப்பட்ட வழி என்பது உங்களுடைய இருதயத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது.

நான் உங்களுக்காக என்னே ஒரு அடைக்கலத்தை அருளியுள்ளேன். நான் உங்களிடத்தில் பேசுவதை கேட்கும்படி, இரவிலோ அல்லது பகலிலோ, நீங்கள் எந்த நேரத்திலும் எளிமையாய் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க முடியும். நீங்கள் யாராய் இருக்கிறீர்கள் என்பதை உங்களிடத்தில் சொல்லி, என்னுடைய வார்த்தையை நான் வெளிப்படுத்தும் போது நான் உங்களுடைய ஆத்துமாவிற்கு ஆறுதலைக் கொண்டு வருவேன். ஒவ்வொரு செய்தியும் உங்களுக்கானதாயும், உங்களுக்காக மாத்திரமேயுள்ளதாயும் உள்ளது. நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாம் ஒன்று சேர்ந்து ஐக்கியங்கொண்டு, ஆராதிக்க முடியும்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இந்த மகத்தான ரகசியங்கள் வெளிப்படுவதை கேட்கும்படி உலகம் முழுவதிலும் இருந்து மணவாட்டியின் ஒரு பாகத்தினர் ஒன்று கூட்டப்படுவர். நாங்கள் “முதலாம் முத்திரை - 63-0318” என்ற செய்தியை கேட்கும் போது நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப்

 

 

செய்தியைக் கேட்பதற்கு ஆயத்தமாக வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

பரி. மத்தேயு 10:1 / 11:1-14 / 24:6 / 28:19
பரி .யோவான் 12:23-28
அப்போஸ்தலர் 2:38
2 தெசலோனிக்கேயர் 2:3-12
எபிரெயர் 4:12
வெளிப்படுத்தின விசேஷம் 6:1-2 / 10:1-7 / 12:7-9 / 13:16 / 19:11-16
மல்கியா 3-வது மற்றும் 4வது அதிகாரங்கள்
தானியேல் 8:23-25 / 11:21 / 9:25-27