
அன்புள்ள தேவனுடைய சபையே,
தேவன், “நான் பூமியின் மேல் மனிதனின் மூலமாக மாத்திரமேயல்லாமல் வேறுவிதமாக கிரியை செய்கிறதில்லை. நான்-நான்-நான் திராட்சை செடி, நீங்கள் கொடிகள். நான் ஒரு மனிதனைக் கண்டுபிடித்து, அதன் மூலமாக மாத்திரமே நான் என்னையே வெளிப்படுத்துவேன். நான் அவரை, வில்லியம் மரியன் பிரான்ஹாமைத் தெரிந்து கொண்டேன். என்னுடைய மணவாட்டியை அழைப்பதற்காக நான் அவரை அனுப்பியிருக்கிறேன். நான் என்னுடைய வார்த்தையை அவருடைய வாயில் வைப்பேன். என்னுடைய வார்த்தை அவருடைய வார்த்தையாயிருக்கும். அவர் என்னுடைய வார்த்தைகளைப் பேசி, நான் கூறுவதை மாத்திரமே கூறுவார்” என்று உரைத்துக் கூறியுள்ளார்.
வேதாகமத்தின் சத்தம் அக்கினி ஸ்தம்பத்தினூடாகப் பேசி, “வில்லியம் பிரான்ஹாம், நான் உன்னைத் தெரிந்து கொண்டுள்ளேன். நீயே அந்த மனிதன். நான் இந்த நோக்கத்திற்காகவே உன்னை எழுப்பினேன். நான் அடையாளங்களினாலும் அர்த்தங்களினாலும் உன்னை நிரூபிப்பேன். நீ என்னுடைய வார்த்தையை வெளிப்படுத்தி, என்னுடைய மணவாட்டியை வழிநடத்தப் போகிறாய். என்னுடைய வார்த்தை உன்னால் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று அவரிடம் சொன்னது.
நம்முடைய தீர்க்கதரிசி வேதாகமத்தின் எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தும்படிக்கும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு தேவனுடைய மணவாட்டியை வழிநடத்தும்படியான முக்கியமான நோக்கத்திற்காகவே அனுப்பப்பட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் என்ன கூறினார் என்பதை, தேவன் கனப்படுத்தி நிறைவேற்றுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். நீங்கள் அந்த வார்த்தையை ஒருபோதும் மறக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். நம்முடைய தீர்க்கதரிசி என்ன கூறினாரோ, தேவன் அதைக் கனம்பண்ணுவார், ஏனென்றால் தேவனுடைய வார்த்தை வில்லியம் மரியன் பிரான்ஹாமில் இருந்தது. அவர் உலகத்துக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார்.
அவர் தேவனுடைய அபிஷேகிக்கப்பட்ட ஏழாம் தூதராகிய செய்தியாளர் என்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் அவருடைய வார்த்தையில் இவரைக் குறித்து கூறியிருந்த எல்லா காரியங்களையும் அவருடைய இருதயத்தில் அவர் அறிந்திருந்தார். அவருடைய இதயத்தில் எரிந்து கொண்டிருந்தவை நிஜமாகிவிட்டன. அவர் அபிஷேகிக்கப்பட்டு, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவராயிருந்தார் என்பதை அறிந்திருந்தார். அவரிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற தேவனுடைய வார்த்தையைத் தடுக்க அவருக்கு ஒன்றும் இல்லாதிருந்தது.
தேவன் அவரிடத்தில், “என்னுடைய வார்த்தையும், நீயும், என்னுடைய செய்தியாளரும் ஒன்றுதான்” என்று சொன்னார். அவர் தவறிப் போகாத வார்த்தையை பேசும்படி தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவர் என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வளவுதான் அவருக்கு தேவைப்பட்டது. அவர் பேசுவார், தேவன் நிறைவேற்றுவார்.
இந்தச் செய்தியின் வெளிப்பாடும் மற்றும் தேவனுடைய செய்தியாளர் நம்முடைய விசுவாசத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபிஷேகம் செய்துள்ளார். இது நம்மைப் பெரிய சுழற்சிகளுக்குள் நகர்த்தியுள்ளது. அது அவருடைய செய்தி, அவருடைய வார்த்தை, அவருடைய சத்தம், அவருடைய ஒலிநாடாக்கள் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் நம்மைப் பிரித்துள்ளது.
நாம் எவ்வளவு சிறுபான்மையினராக இருந்தாலும், எவ்வளவு பரிகசிக்கப்பட்டாலும், கேலி செய்யப்பட்டாலும், அது ஒரு இம்மியும் வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறதில்லை. நாம் அதைப் பார்க்கிறோம். நாம் அதை விசுவாசிக்கிறோம்.நமக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்க நாம் முன்குறிக்கப்பட்டிருந்தோம், அதை விசுவாசிப்பதிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்கப் போவதில்லை.
அந்தத் தரிசனம், "திரும்பிச் சென்று ஆகாரத்தை சேமித்து வை" என்று கூறினதை நாம் நினைவில் கொள்வோம். அந்தப் பண்டகசாலை எங்கே இருந்தது? பிரான்ஹாம் கூடாரம். நம்மிடம் உள்ள செய்திகளுடன் ஒப்பிடக்கூடியது, நாட்டிலோ அல்லது உலகெங்கிலும் எங்கும் ஏதாவது இருக்கிறதா? இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும் படி தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாய் உள்ளது. ஒரே சத்தமே!
அவர் கூறினபோது நாம் வேறு எங்கு செல்ல முடியும், அல்லது நாம் செல்ல விரும்புவோம்;
இங்கேதான் ஆகாரம் சேமிக்கப்பட்டுள்ளது...
அது இங்கே சேமிக்கப்பட்டுள்ளது. அது ஒலிநாடாக்களில் உள்ளது. இது உலகம் முழுவதும் ஒலிநாடக்களில் செல்லும், அங்கே ஜனங்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கிறார்கள்.
அந்த ஒலிநாடாக்கள் தேவனுடைய முன்குறிக்கப்பட்டவர்களின் கைகளில் விழும். அவரால் வார்த்தையை வழிநடத்த முடியும், எல்லாவற்றையும் அதன் போக்கில் சரியாக வழிநடத்துவார். அதனால்தான் அவர் என்னை இதைச் செய்ய அனுப்பினார்: "ஆகாரத்தை இங்கே சேமித்து வைக்கவும்."
நாம் அவருடைய சேமிக்கப்பட்ட ஆதாரத்தோடு தரித்திருக்கிற அவருடைய பரிபூரண வார்த்தை மனவாட்டியாய் இருக்கிறோம். இனி ஒருபோதும் கூக்குரலிட வேண்டியதேயில்லை, நாம் வார்த்தையை பேசி முன்னோக்கிச் செல்கிறோம், ஏனென்றால் நாமே வார்த்தையாய் இருக்கிறோம்.
கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் யாராய் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த முழு இரவு ஜெப கூட்டங்கள் தேவையில்லை, வார்த்தை நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனுடைய தீர்க்கதரிசியைப் போலவே, நாம் யார் என்பதை நாம் அறிவோம், மேலும் யார் போகிறார்கள் என்பதை அவர் ஏற்கனவே நம்மிடத்தில் கூறியுள்ளார்.
நாம் ஒவ்வொருவரும்! நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஒரு-ஒரு சிறிய பணிப்பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் ஒரு வயதான பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு இளைஞனாக இருந்தாலும் சரி, ஒரு வயதான மனிதனாக இருந்தாலும் சரி, எப்படியும் நாம் செல்கிறோம். நம்மில் ஒருவர் கூட கைவிடப்படப் போவதில்லை." ஆமென். "நாம் ஒவ்வொருவரும் போகிறோம், வேறு எதுவும் நம்மைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை."
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான விசுவாசத்தை நமக்கு கொடுப்பதை குறித்து பேசுவோமே!!!
என்னுடைய இனிய இருதயமே, என்னுடைய தெரிந்து கொள்ளப்பட்ட, என்னுடைய மணவாட்டியே, முறையிடுகிறது என்ன, சொல் என்றும், முன்னோக்கிச் செல் என்றும் அவர் பேசி நமக்குச் சொல்லுகிற தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தின் பேரில் நாங்கள் ஒன்று கூடுகையில் தேவனுடைய மணவாட்டியின் ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: 63-0714M முறையிடுகிறது என்ன? சொல்!
நேரம்: பிற்பகல் 12:00 மணி, ஜெபர்சன்வில் நேரம்
இடம்: