ஞாயிறு
07 செப்டம்பர் 2025
63-0630M
மூன்றாம் யாத்திரை

அன்புள்ள மூன்றாம் யாத்திரை மணவாட்டியே,

உங்களுக்கு ஆவிக்குரிய கண் இல்லையென்றால், நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவதில்லை. ஆனால் ஆவிக்குரிய கண்ணால் தேவனுடைய வல்லமை அசைவதை காண முடியும் ஏனென்றால் அது சரியாக வார்த்தையோடு உள்ளது. அது வார்த்தையாய் உள்ளது, தேவனுடைய வார்த்தை ஒரு போதும் மாறுகிறதில்லை. அவர் ஆதியில் என்ன செய்தாரோ, அதையே அவர் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார், ஆவிக்குரிய கண் அதைக் காண்கிறது, அதை விசுவாசிக்கிறது, அதைக் கேட்கிறது.

இன்றைக்கான தேவனுடைய அருளப்பட்ட வழியாய் இருக்கும்படி நான் விசுவாசிப்பதில் உலகமானது என்னோடு உடன்படாமல் இருக்கலாம்: நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமேயாகும். நீங்கள் உங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க வேண்டும், ஆனால் நீங்கள் உண்மையாகவே இந்த செய்தியை விசுவாசித்தால், அப்பொழுது தேவனுடைய தீர்க்கதரிசி கூறுவதோடு நீங்கள் உடன்படாமல் இருக்க முடியாது.

வரவிருக்கும் நாள் முழுவதும் அவர்களை காத்துக் கொள்ளும்படி அவர்களுக்காக இரவிலே அருளப்பட்டிருந்த மன்னாவைப் பெற்றுக் கொள்ளும்படி எபிரேய பிள்ளைகள் செய்தது போல இந்த ஞாயிற்றுக்கிழமை நாம் ஒன்று கூட்டப்படுவோம். சீக்கிரத்தில் வரவிருக்கும் நம்முடைய மகத்தான யாத்திரைக்காக நமக்கு பெலனை அளிக்க நம்முடைய ஆவிக்குரிய மன்னாவிற்காக நாம் ஒன்று கூட்டப்படுவோம்.

தேவனுடைய சத்தம் அவரையும், அவரைக் குறித்தும் கூற அனுமதிப்பதைக் காட்டிலும் சிறந்த வழி எதுவுமில்லை, மேலும் நாம் கேட்கப் போகும் இந்த செய்தி நிரப்பிவைக்கப்பட்டுள்ளதே!

தேவன் வனாந்தரத்தில் ஒரு மனிதனைத் தெரிந்தெடுத்து, அவனுக்குப் பயிற்சியளித்தார். அவனை வனாந்தரத்திலிருந்து கொண்டு வந்து, பொறுப்பேற்று, ஜனங்களை வெளியே கொண்டு வந்தார். நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகின்றதா? அவர் தமது திட்டத்தை ஒருபோதும் மாற்றுவது கிடையாது. அவர் தேவனாயிருக்கிறார்.

எனவே அவர் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுகிறதில்லை என்று இங்கே நமக்கு தெளிவாகச் சொல்லுகிறார். அவர் ஆதியில் என்ன செய்தாரோ, அவர் அதையே மீண்டும் முடிவிலே செய்வதாக, அவர் வாக்குத்தத்தம் செய்தார். எனவே இப்பொழுது அவருடைய திட்டம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அது இப்போது அதே திட்டமாக இருக்கும்.

அவர் ஒரு குழுவுடன் ஈடுபடவேமாட்டார். அவர் அப்படிச் செய்ததேயில்லை. ஒரு தனிப்பட்ட நபருடன் மாத்திரமே அவர் தொடர்பு கொள்கிறார். அவர் அப்படி தொடர்பு கொண்டார். அவர் தொடர்பு கொள்வார், மல்கியா 4-ல் கூட, அவர் அப்படிச் செய்யப் போவதாக அவர் வாக்களித்துள்ளார்.

அவர் ஒரு குழுவுடன் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. எனவே, அவர் நம்முடைய நாளில், ஒரு மனிதனை, மல்கியா 4-ஐ, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு அனுப்புவதாக வாக்களித்தார்.

அது உண்மை. எனவே அவர் என்னவாயிருந்தார் என்றும், அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அந்த அவருடைய வாக்குத்தத்தம் அங்கே உள்ளது. இதோ நாமோ இந்நிலையில் இருக்கிறோம். நாம் என்னே மகிழ்ச்சியுள்ள ஜனங்களாக இருக்க வேண்டும், தமது வாக்களிக்கப்பட்ட வார்த்தையின் அடையாளத்தை, வாக்களிக்கப்பட்ட வார்த்தையை அடையாளமாக அவர்களுக்கு அளித்துள்ளார். அவர் அதைச் செய்யப்போவதாக அவர் வாக்களித்துள்ளார்.

அப்பொழுது தேவன் தம்முடைய மணவாட்டியே எவ்வாறு வழிநடத்தத் தெரிந்து கொண்டார்?

யாத்திரையின் நாட்களில் தேவன் தெரிந்துகொண்ட ஒரு கூட்டத்தை அவர் வெளியே அழைத்தார். நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த குழுவிலிருந்த இரண்டுபேர் மாத்திரமே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர். அவர்களை வழிநடத்த அவர் எதைத் தெரிந்து கொண்டார்?

இதோ அது. புரிந்து கொள்ளும்படியான ஆவிக்குரிய சிந்தையே இதற்கு மிகவும் முக்கியமாகும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு மணவாட்டியை வழிநடத்தவும், கொண்டு செல்லவும் தேவன் எப்படித் தெரிந்து கொண்டார்?

அரசியலையா? ஒரு ஸ்தாபனத்தையா? அவர் ஒரு தீர்க்கதரிசியைத், ஜனங்கள் தவறாகப் புரிந்துகொள்ளாதபடிக்கு, இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ஒரு அடையாளத்தோடு தெரிந்து கொண்டார். தீர்க்கதரிசி கூறினது மாத்திரமே சத்தியமாக இருந்தது. தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, தம்மை ரூபகாரப்படுத்தி, அவருடைய வார்த்தையைக் காண்பித்தார். அது சரிதானே? அதைத்தான் அவர் தம்முடைய முதலாம் யாத்திரையில் கொண்டுவந்தார். அவருடைய இரண்டாம் யாத்திரை...

எனவே, ஜனங்கள் ஒரு தவறு செய்யாமல் உறுதி கொள்வதற்காக, அவர் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அவர்களுடைய மகத்தான யாத்திரைக்காக ஒரு இயற்கைக்கு மேம்பட்ட அக்கினி ஸ்தம்ப அடையாளத்தோடு அனுப்பினார்.

முதலாம் யாத்திரையின்போது, அவர் என்ன செய்தார்?அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி, அவனை அக்கினி ஸ்தம்பத்தினால் அபிஷேகம் செய்து, அவருடைய ஜனங்களை வெளியே அழைத்து வந்தார். அதுவே அவருடைய முதலாம் யாத்திரையாயிருந்தது…

இரண்டாம் யாத்திரையில், அவர் ஒரு தீர்க்கதரிசியை அபிஷேகத்துடன் அனுப்பினார். அது அவருடைய குமாரன், தேவனாகிய—தீர்க்கதரிசி. அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பாரென்று மோசே உரைத்தான். அவரிடம் அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்…

இந்த கடைசி நாட்களில் நிகழவிருக்கும் யாத்திரைக்கும் அவர் அதேக் காரியத்தையே இங்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் அதை மாற்றவே முடியாது…

அநேகர், ஆம், மணவாட்டியை அழைக்க, அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார், என்று கூறுவதன் மூலம் ஒப்புக்கொள்வர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஊழியத்தின் மூலம் மணவாட்டியை இப்பொழுது வழிநடத்துவார்; ஆனால் அவர அதைக் கூறவில்லை…நாம் அப்படியே தொடர்ந்து வாசிப்போமாக.

அவர்களை வெளியே அழைத்த அக்கினி ஸ்தம்பத்தை கவனியுங்கள், ஒரு தீர்க்கதரிசியின் அபிஷேகத்தின் கீழ் அவர்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தினது. அவர்கள் நோக்கிப் பார்க்க முடிந்த ஒரு அக்கினி கினி ஸ்தம்பம், அபிஷேகம்பண்ணப்பட்டிருந்த ஒரு தீர்க்கதரிசியின் கீழ் அவர்களை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தினது. ஆனால் அவர்களோ அந்த தீர்க்கதரிசியை தொடர்ந்து புறக்கணித்தனர். அது சரியா? நிச்சயமாக.

அதே அக்கினி ஸ்தம்பம் மறுபடியுமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, ஆயிர வருட அரசாட்சிக்கு மக்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.

அக்கினி ஸ்தம்பம், தேவனுடைய வழிநடத்துதலின் கீழ்...தேவன்தான் அந்த அக்கினி, அந்த அக்கினி ஸ்தம்பம் தீர்க்கதரிசியை மாத்திரம் அபிஷேகம் செய்தது. மோசே அழைக்கப்பட்டிருந்தான் என்பதற்கு ஒரு பரலோக சாட்சியாக அக்கினி ஸ்தம்பம் நின்றது.

மோசே அந்த அக்கினி ஸ்தம்பம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் அபிஷேகம் பெற்ற தலைவனாயிருந்தான். அவனுடைய செய்தியை அக்கினி ஸ்தம்பம் மாத்திரமே அற்புதங்களாலும் அடையாளங்களாலும் ரூபகாரப்படுத்தினது.

நண்பர்களே, இதில் எவ்வித பிழையும் இல்லை. இது நான் கூறுவதல்ல. நான் உங்கள் சகோதரன். தேவன் இதை உங்களுக்கு நிரூபித்து வருகிறார். எனவேதான் அது சத்தியமாயிருக்கிறது. மற்ற இரண்டு யாத்திரைகளுக்கும் அவர் உபயோகித்த அதே அக்கினி ஸ்தம்பம்; அவர் இக்காலத்தில் அதை உங்கள் மத்தியில் கொண்டு வந்து. விஞ்ஞானத்தின் மூலம் அதை நிரூபித்திருக்கிறார்.

தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை. தேவன் இன்றைக்கு தம்முடைய மணவாட்டிக்கான ஒரு அருளப்பட்ட வழியை உடையவராய் இருக்கிறார்: அக்கினி ஸ்தம்பம் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ்…தேவன் அக்கினியாய் இருந்தார், அக்கினி ஸ்தம்பம் மாத்திரமே தீர்க்கதரிசி அபிஷேகித்தது.

ஒரே சத்தம், ஒரே தீர்க்கதரிசி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடைய வில்லியம் மரியன் பிரான்ஹாம் மாத்திரமே உண்டு. அவர் அக்கினி ஸ்தம்பம் அல்ல, ஆனால் அக்கினி ஸ்ம்பத்தின் கீழ் அவர் அபிஷேகிக்கப்பட்ட தலைவராய் இருக்கிறார்.

நாம் யாவரும் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் இருக்க விரும்புகிறோம். அவருடைய வார்த்தை அவருடைய பரிபூரண சித்தமாய் இருக்கிறது. நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாக இந்த செய்தி உள்ளது. அவருடைய மணவாட்டியை வழிநடத்த அவருடைய தீர்க்கதரிசி தெரிந்து கொள்ளபட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் அவருடைய மணவாட்டியாய் இருக்க முடியாது.

மூன்றாம் யாத்திரை 63-0630M: என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய பரிபூரண வார்த்தையை எங்களோடு கேட்பதன் மூலம் நம்முடைய மகத்தான யாத்திரைக்காக வந்து ஆயத்தமாகுங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்