
அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,
நாம் இப்பொழுது தேவனுடைய பலமான காரியங்களை புசித்துக்கொண்டும், அவருடைய வார்த்தையின் தெளிவான ஒரு புரிந்து கொள்ளுதலை உடையவர்களாயிருக்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை நமக்கு கொடுத்திருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய சிந்தையோ முழுவதும் குழப்பமற்றதாய் இருக்கிறது.
அவர் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். அவர் என்னவாயிருக்கிறார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவோம், நாம் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயத்துமிருக்கிறோம்.
உலகத் தோற்றம் முதற்கொண்டு மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் அவர் பேசி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி மற்றவர்கள் அவருடைய அருளப்பட்ட வழியைப் புறக்கணித்து, ஒரு வித்தியாசமான வழிநடத்துதலை விரும்பினர் என்பதை அவர் நமக்குச் சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்கும் ஒரு சிறு குழுவை அவர் உடையவராயிருப்பார்.
உலகம் முழுவதும், அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி காரியங்களைப் பொதுவானதாகக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.
மகிமை, நாம் பூமியெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை கேட்பதன் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை அவருடைய பலமுள்ள தூதன் மூலம் அவர் நமக்கு என்ன கூறப் போகிறார் என்பதைக் குறித்த ஒரு முன்ருசியை நாம் ருசித்துப் பார்ப்போமாக.
என்னுடைய அன்பான தெரிந்து கொள்ளப்பட்டவர்களே, நீங்கள் இப்பொழுது உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கோ ஓரிடத்தில் அல்ல, ''உன்னதங்களில்.'' அதுதான் விசுவாசி என்ற உங்களுடைய ஸ்தானம். நீங்கள் ஜெபத்தை ஏறெடுத்து செய்தியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், தேவனுடைய ஆசிர்வாதத்தினால் நிரப்பப்பட்டு, பரிசுத்தவான்களாக நீங்கள் ஒன்று கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, உங்களுடைய ஆவியானது ஒரு பரலோக சூழ்நிலைக்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ளது.
என்ன சமபிக்கக்கூடும். என்னுடைய பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அசைவாடுவார். நீங்கள் புதிதாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் இரத்தத்தின் கீழ் உள்ளன. உங்களுடைய கரங்களும் இருதயங்களும் என்னண்டை உயர்த்தப்பட்டிருப்பதோடு, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து என்னை ஆராதித்துக் கொண்டு, நீங்கள் பரிபூரண ஆராதனையில் இருக்கிறீர்கள்.
நீங்கள் முன்குறிப்பில், என்னுடைய முன்னறிவில் தெரிந்து கொள்ள பட்டவர்களாக இருக்கிறீர்கள். முன் நியமித்ததினால் தெரிந்துகொள்ளப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் வஞ்சிக்கப்படுவது கூடாத காரியமாகும். உலக தோற்றத்திற்கு முன்னே நான் உங்களை நியமித்திருக்கிறேன். நீங்கள் குட்டி தேவனாக, பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்; வெறுமன குடும்பத்திற்குள்ளாகப் பிறந்திருக்கவில்லை, என்னுடைய புத்திரசுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள்.
நான் உங்களை தெய்வீக சுகமளித்தலினால், முன்னறிவினால், வெளிப்பாட்டினால், தரிசனங்களினால், வல்லமைகளினால், அந்நிய பாஷைகளினால், வியாக்கியானங்களினால், ஞானத்தினால், அறிவினால், எல்லா உன்னத ஆசிர்வாதங்களினாலும், மகிமையால் நிறைந்ததும், சொல்லி முடியாததுமான சந்தோஷத்தினாலும் உங்களை ஆசீர்வதிப்பேன்.
ஒவ்வொரு இதயமும் என் ஆவியால் நிரப்பப்படும். நீங்கள் ஒன்றாக நடந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து வீற்றிருப்பீர்கள். உங்களுக்கு மத்தியிலே ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒரு சிகரெட்டும் புகைப்படவில்லை, ஒரு குட்டையான ஆடையும் இல்லை, இந்த, அந்த அல்லது மற்ற, எந்த ஒன்றும் இல்லை, ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒருவருக்கு எதிராக ஒருவர் எதையும் கொண்டிருக்கவில்லை, எல்லோரும் அன்பிலும் ஒற்றுமையிலும் பேசுகிறார்கள், ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் ஏகமனதோடு இருக்கிறார்கள்.
அதன்பின்னர் திடீரென்று பரலோகத்திலிருந்து ஒரு பலத்த காற்றடிக்கிற முழக்கம் உண்டாகும், நான் உங்களை எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிப்பேன். அப்பொழுது நீங்கள் தாவீதை போல, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நடனமாடி, நீங்கள் வெட்கப்படவில்லை என்று உலகத்திற்கு சொல்லுவீர்கள். நீங்கள் என்னுடைய ஒலிநாடா மணவாட்டியாயிருக்கிறீர்கள்! நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள், அசைக்கப்பட முடியாதே!
மற்றவர்கள் அதை புறக்கணிக்கலாம், அல்லது அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கோ, இது உங்கள் மரியாதைக்குரிய பதக்கம். தாவீது தன் மனைவியிடம் சொன்னது போல்; “இது ஏதோ ஒன்று என்று நீ நினைக்கிறாய், நாளை வரை காத்திரு, நாங்கள் இன்னும் அதிகமான ஒலிநாடாக்களைக் கேட்டு, கர்த்தரைத் துடித்து, அவருடைய ஆவியால் நிரப்பப்படுவோம்; ஏனென்றால் நாம் கானானில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறோம்.
அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கீழே பார்த்து:
“நீ என்னுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற மணவாட்டி” என்று கூறுவேன்.
இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் கூட கிடைக்கலாம். புத்திர சுவிகாரம் # 1 60-0515E என்ற செய்தியை இன்றைக்கான தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வந்து, எங்களிடத்தில் பேசப் போவததை நாங்கள் கேட்க போகிறபடியால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவிக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.
இது சபைக்கு மாத்திரமே என்பது ஞாபகமிருக்கட்டும், வெளியிலுள்ளவர்களுக்கல்ல, இது புதிர்களில் உள்ள ஒரு ரகசியமாய் அவனுக்கு இருக்கிறபடியால், புரிந்து கொள்ள முடியாமல், அவனுடைய தலைக்கு மேலே சென்று விடுகிறது, அவனுக்கு இதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால், சபைக்கோ, இது கன்மலையில் உள்ள தேனாகவும், இது சொல்லி முடியாத சந்தோஷமாயும், இது ஆசிர்வதிக்கப்பட்ட உறுதியாயும், இது ஆத்துமாவின் நங்கூரமாயும், இது நம்முடைய நம்பிக்கையும் புகலிடமாயும், ஓ, இது நன்மையான ஒவ்வொரு காரியமாயும் இருக்கிறது. ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது.
சகோதரா. ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
யோவேல் 2:28
எபேசியர் 1:1-5
1 கொரிந்தியர் 12:13
1 பேதுரு 1:20
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
வெளிப்படுத்தின விசேஷம் 13