ஞாயிறு
25 ஜனவரி 2026
64-0823M
கேள்விகளும் பதில்களும் #1
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள பிரான்ஹாம் கூடாரமே,

பிரான்ஹாம் கூடாரம், தேவனுடைய சத்தம், இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காகச் சேமித்து வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ள மறைவான மன்னாவினால் ஆவிக்குரிய ரீதியில் போஷிக்கப்படும் தங்களுடைய சொந்த சபை என்று விசுவாசிக்கிற, உலகம் முழுவதிலுமுள்ள இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு வாழ்த்துக்கள்.

இதுவே என் சொந்த வீடு; இதுவே என் தலைமை அலுவலகம்; இங்குதான் எங்கள் அமைப்பு உள்ளது. இப்பொழுது, என்ன நடந்த போதிலும், அதை மனதில் கொள்ளுங்கள். இப்பொழுது, நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால், ஒன்றை கிரகித்துக்கொள்வீர்கள். என்ன நடந்தபோதிலும், அதுதான் எங்கள் தலைமை அலுவலகம், இங்குதான்!

பல விசுவாசிகள் தீர்க்கதரிசி இங்கு சொன்னதை எப்போதும் தவறாகப் புரிந்துகொண்டார்கள் அல்லது தங்கள் சொந்தக் கருத்தையோ அல்லது வியாக்கியானத்தையோ கொடுத்தார்கள், ஆனால் அவர் மணவாட்டியிடம் நேரடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார், "நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருந்தால், ஏதோ ஒன்றைப் புரிந்துகொள்வீர்கள், இதுதான் நமது தலைமையகம், இந்த இடம்தான்!"

அதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார்?

சகோதரன் பிரான்ஹாம் இங்கு இருந்தபோது, பலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, மணவாட்டி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரிசோனாவுக்குச் சென்று அவரைப் பின்தொடர வேண்டும் என்று நினைத்தார்கள். சகோதரன் பிரான்ஹாம் அவர்களுக்குத் தெளிவாகப் பதிலளித்தார்: இங்கேயே தரித்திருங்கள், இதுதான் அந்த இடம்.

அவர்களிடம் நான் அங்கு தங்கியிருக்க கூறியிருந்தபோதிலும், அவர்களில் ஒரு பெரிய கூட்டம் நான் சென்ற வழியை நோக்கிப் புறப்பட்டு, அவர்கள் அங்கு சென்று அதை செய்ய வேண்டுமென்று விரும்பினர். அங்கேயே தங்கியிருங்கள், அங்கேயே தங்கியிருங்கள்; இதுவே அந்த இடம் என்று கூறியிருந்தேன்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலுமிருந்து மக்கள் அரிசோனாவுக்குச் செல்லப் புறப்பட்டனர், ஆனால் அவர் அவர்களிடம் தெளிவாகச் சொன்னார்: இந்த இடத்திலேயே இருங்கள், இதுதான் அந்த இடம்!

ஜெஃபர்சன்வில்லிலேயே தங்குவதா? அதைத்தான் அவர் சொன்னாரே!

எனக்குக் கிடைத்த வெளிப்பாடு என்னவென்றால், அது தேவன், தம்முடைய தீர்க்கதரிசி மூலமாகப் பேசி, மக்களிடம், “இந்த ஒலிநாடாக்களுடனே தரித்திருங்கள்” என்று சொன்னதுதான். அதுதான் அந்த இடம்!

அவர் மிகவும் கலக்கமடைந்து, அந்த மக்கள் அனைவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எந்தச் சபைக்கு அனுப்ப வேண்டும்? அவர்கள் எங்கே செல்ல வேண்டும்? சகோதரன் பிரான்ஹாம் தான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்?

எனவே இப்பொழுது, என் பிள்ளைகள் ஏதாவது உண்ண, அவர்களை நான் இங்கே கொண்டு வரவேண்டும். அவர்கள் அந்த வனாந்தரத்தில் பட்டினி கிடக்கின்றனர்.

அவர்கள் ஒரு உள்ளூர் சபைக்குச் சென்று, தங்களால் உண்ணக்கூடிய சிறிய உணவுத் துணுக்குகளைப் பெற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பதற்காக அவர்களை இங்கே திரும்ப அழைத்து வர வேண்டும், இல்லையென்றால் அவர்கள் பட்டினியால் மரித்துப்போவார்கள் என்று சொன்னார்.

நண்பர்களே, என் வெளிப்பாடு.

இப்போது, அவரை மீண்டும் தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்காகவோ, அல்லது அவர் சொல்லாத ஒன்றைச் சொல்வதைத் தவிர்ப்பதற்காகவோ, “சகோதரன் பிரான்ஹாம் ஒவ்வொரு விசுவாசியும் மணவாட்டியாக இருப்பதற்காக ஜெபர்சன்வில்லுக்குக் குடிபெயர வேண்டும் என்று விரும்பினார்” என்று சொல்லக்கூடாது. சகோதரன் பிரன்ஹாம் அந்த மக்கள் அனைவருக்கும், மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு விசுவாசியும் ஜெபர்சன்வில்லுக்குக் குடிபெயர்ந்து வாழ முடியாது என்பதை அறிந்திருந்தார். அது சாத்தியமற்றது. அப்படியானால் அவர் என்ன சொல்ல வந்தார்? மணவாட்டியை போஷிப்பதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஒலிநாடாக்களைக் கொண்டு கிறிஸ்துவின் மணவாட்டியை அவர் ஒன்றிணைத்துக் கொண்டிருந்தார்.

இந்தச் செய்தி, இந்தச் சத்தம், இன்றைய நாளுக்கான தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை, அது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும்.

கழுகுகள் தின்பதுதான் பிணம். இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசி, வேதத்தில் ஒரு கழுகாகக் கருதப்படுகிறான். ஒரு தீர்க்கதரிசிதான் கழுகு. தேவன்—தேவன் தம்மை ஒரு கழுகென்று அழைத்துக்கொள்கிறார், மற்றும் அப்படியானால், விசுவாசிகளாகிய நாம் “கழுகுக் குஞ்சுகள்.” உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் தின்னும் பிணம் எது? வார்த்தை. வார்த்தை எங்கெல்லாம் உள்ளதோ, அங்கு பறவையின் உண்மையான இயல்புதாமே வெளியரங்கமாகும்.

இன்றைய நாளுக்கான தூய்மையான, ரூபகாரப்படுத்தப்பட்ட, தவறான புரிதல்கள் இல்லாத, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தை எங்கே இருக்கிறது? ஒரே ஒரு இடத்தில் மாத்திரமே இருக்கிறது, அந்த ஒலிநாடாக்களிலே.

நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம், மேற்கோளுக்கு மேல் மேற்கோள் காட்டலாம், ஆனால் இந்தச் செய்தியும் சகோதரன் பிரான்ஹாம் சொன்னதும் தேவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைக் கோருகிறது. நாம் வெளிப்பாட்டின் மூலம் வரிகளுக்கு இடையில் உள்ள மறைபொருளை படிக்க வேண்டும், ஆனால் அவர் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதுவே தூய்மையான வார்த்தை.

இன்றைய நாளுக்கான கேள்விகளும் பதில்களும், மற்றும் நான் விசுவாசிப்பதும் இதுதான்.

இன்றைக்கு, பல போதகர்கள் மக்களிடம், வீட்டில் ஒலிநாடாவைக் கேட்டு ஆராதனை செய்வதன் மூலம் நாம் தேவனுடைய வார்த்தையிலிருந்தும், சகோதரன் பிரான்ஹாம் செய்யச் சொன்னதிலிருந்தும் விலகிவிட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்கள், தாங்கள் 'சபை' என்று அழைத்து கருதும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சகோதரன் பிரான்ஹாம் இதைத் தெளிவாகக் கூறுகிற பல மேற்கோள்கள், பல உண்மையிலேயே உள்ளன.

"இப்பொழுது, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாகிலும் ஒரு நல்ல முழு சுவிசேஷ சபைக்குச் சென்று அதை உங்கள் சபையாக்கிக் கொள்ளுங்கள்.”

அவர் அவ்வாறு சொன்னதால், நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஆனால், வீட்டில் ஒலிநாடாவைக் கேட்டு ஆராதனை செய்வதன் மூலம் நாம் அதைத்தான் செய்கிறோம் என்று நான் நம்புகிறேன். நாம் இருக்கும் இடம் கர்த்தருக்கு முக்கியமல்ல. அது வெறும் ஒரு கட்டிடம் மட்டுமே. ஆனால், ஒரு இடத்திற்கோ அல்லது கட்டிடத்திற்கோ அல்ல, அவருடைய வார்த்தையோடு நிலைத்திருப்பதே கர்த்தருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். அந்த இடம் மணவாட்டியை இரட்சித்து பரிபூரணப்படுத்துகிறதில்லை, தேவனுடைய வார்த்தையே அதைச் செய்கிறது.

நான் ஒரு சபை கட்டிடத்திற்குச் சென்றாலும், அவர்கள் முக்கியமான காரியத்தை மறந்துவிட்டு, அதாவது இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதை மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக போதகர்கள் செய்தியைப் பிரசங்கிப்பதை மட்டுமே கேட்பார்களானால், அது உங்கள் ஆத்துமாவை முழுமையாக திருப்திப்படுத்தி போஷிக்குமா? என் சகோதரனே, சகோதரியே, அது உங்கள் ஆத்துமாவை திருப்திப்படுத்தலாம், ஆனால் அது மணவாட்டியை திருப்திப்படுத்தாது.

இங்கே நான் குறுக்கிட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், ஆயிரக்கணக்கான மக்களுக்குச் செல்லுவதற்கு ஒரு சபைக் கட்டிடம் இல்லை. அவர்கள் இழக்கப்பட்டுப்போனவர்களா? அவர்களுக்கு ஒரு போதகரோ அல்லது சபையோ இல்லையென்றால், அவர்கள் மணவாட்டியாக இருக்க முடியாது என்று அர்த்தமா? நீங்கள் ஒரு சபைக் கட்டிடத்திலிருந்து 100 மைல் தொலைவிற்குள் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அந்தத் சபைக்குச் செல்ல வேண்டுமா? ஆனால் நான் இன்னும் தொலைவில் வசித்தால், நான் செல்லத் தேவையில்லையா? நான் ஒரு பிரசங்கியாரின் பிரசங்கத்தை இணையத்தில் கேட்க வேண்டும், ஆனால் நான் ஒலிநாடாக்களைக் கேட்கக்கூடாதா? நாம் செல்ல வேண்டிய மிக முக்கியமான காரியம் இந்த இயற்பொருள் சார்ந்த கட்டிடம் தான் என்று தீர்க்கதரிசி கூறுக்கொண்டிருக்கிறாரா?

தீர்க்கதரிசி மணவாட்டியை எங்கு கொண்டுவர விரும்பினார்?

உங்களால் இந்த கூடாரத்துக்கு வர முடியாவிட்டால் எங்காவது ஒரு சபையைத் தெரிந்துகொண்டு; அங்கு போங்கள்.

மீண்டும் ஒருமுறை, மக்களை அனுப்புவதற்கு அவருடைய முதல் விருப்பம் எங்கே உள்ளது? பிரான்ஹாம் கூடாரம், வார்த்தை, ஒலிநாடாக்கள். இந்த கடைசி காலத்தில் தம்முடைய மணவாட்டி செய்வதற்காக தேவன் அருளியிருப்பது அதுதான், நாம் அதை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்து வருகிறோம்.

ஆகவே, நான் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. மணவாட்டியாக இருப்பதற்கு நீங்கள் பிரான்ஹாம் கூடாரத்துடன் ஒலிநாடாக்களை இணையத்தில் கேட்க வேண்டும் என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் சபைக்குச் செல்லக்கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஊழியர்களின் பிரசங்கங்களைக் கேட்கக்கூடாது என்று நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் அதை நம்பினால், நீங்கள் வார்த்தையிலிருந்து விலகிவிட்டீர்கள். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் என்று நான் கூறிக் கொண்டிருக்கிறேன், மேலும் ஒவ்வொரு போதகரும் அந்தச் சத்தத்தை, ஒலிநாடாக்களை, தங்களுடைய சபைகளில் இயக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் ஒலிநாடாக்களை இயக்காமல் இருப்பதற்கு எல்லாவிதமான சாக்குப்போக்குகளையும் கூறுகிறார்கள். அதுதான் உங்களுடைய சபை என்றால், நீங்கள் வார்த்தையால் போஷிக்கப்படவில்லை.

இதுதான் அவர் நடக்க விரும்பாத ஒன்று, ஆனால் மக்கள் செய்துகொண்டிருந்ததும் இதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நீங்கள் சபைக்குச் செல்லுங்கள்; ஞாயிற்றுக்கிழமையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கவோ, மீன் பிடிக்கவோ, வேட்டைக்கோ செல்லாதீர்கள்.

நாம் அப்படி இல்லை. மணவாட்டியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே காரியத்தைக் கொண்டே நாங்கள் ஒன்றிணைந்துகொண்டிருக்கிறோம், அது இந்தச் செய்தி, இந்தச் சத்தம்.

மீண்டும் ஒருமுறை, நான் சபைக்குச் செல்வதை நம்புகிறேன். உலகெங்கிலும் பல சபைகள் தங்களுடைய பிரசங்க பீடங்களில் ஒலிநாடாக்களுக்கு முதலிடம் கொடுக்கின்றன, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் மணவாட்டி அல்ல என்று நான் நம்புகிறேனா? இல்லை, இல்லை, இல்லை... நான் அதை ஒருபோதும் நினைத்ததில்லை, ஒருபோதும் நம்பியதில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் சரி, எந்தச் சபைக்குச் சென்றாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அவர் கூறிக் கொண்டிருக்கிறதைக் குறித்த வெளிப்பாடு உங்களுக்கு இல்லையென்றால், அப்பொழுது நீங்கள், “நான் சகோதரன் பிரான்ஹாமுக்கு செவிகொடுத்துக கேட்க வேண்டியதில்லை அல்லது அவர் சொல்வதையெல்லாம் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை. அவரும் கூட அப்படித்தான் சொன்னார், தேவனால் அழைக்கப்பட்ட வேறு பல மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று தெளிவாகக் கூறலாம்.

போங்கள். “நம்முடன் வேற்றுமை கொண்டிருக்கும் மற்றொரு சபைக்கு நாம் செல்லலாமா?” என்று கூறுகிறதை, இங்கு நாம் கவனிக்கிறோம். நிச்சயமாக, நான்…நான் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல் அல்ல, உங்களுக்குத் தெரியும். தேவபக்தியுள்ள மற்ற மனிதர் எல்லாவிடங்களிலும் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்று நான் நம்புகிறேன்.

அந்த ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம்தான் என் கூழாங்கல், என் கன்மலை. அதுதான் நான் கேட்க விரும்பும் சத்தம், பிரன்ஹாம் கூடார சபையும் கேட்க விரும்பும் சத்தம்.

நீங்கள் எங்களுடன் சேர விரும்பினால், என் சகோதர சகோதரிகளே, உங்களை அதிக அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் இருதயத்தில் உள்ள பல கேள்விகளுக்கு பதிலைப் பெற்றுக் கொள்ளும்படி தேவனுடைய சத்தம் பேசுவதை நாங்கள் கேட்க போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். மேலும், இந்த கடிதத்தில் நான் கூறிய காரியங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணானதா என்பதையும், தேவன் தம்முடைய மணவாட்டிக்குச் சொல்வதை நான் தவறாகப் புரிந்துகொண்டேனா என்பதையும் நீங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்த ஒலிநாடாக்களில் அவர் கூறுகிறது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்று நான் கூறுவதோ, அல்லது அவர் கூறிக் கொண்டிருக்கிறார் என்று நான் நம்புவதோ அல்ல, மேலும் உண்மையான வெளிப்பாட்டை தேவன் மட்டுமே உங்களுக்குத் தர முடியும்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்