ஞாயிறு
22 ஜூன் 2025
65-1126
விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள்

அன்பான மாம்சமான வார்த்தையே,

அல்லேலூயா! வார்த்தையைக் கேட்பதன் மூலம் நம்முடைய இருதயத்தின் விளை நிலம் ஆயத்தமாக உள்ளது, மேலும் அது நமக்கு வெளிப்படுத்தியுள்ளது, நாம் கிறிஸ்துவின் கற்புள்ள மணவாட்டியாய் இருக்கிறோம்; விலையேறப்பெற்ற, கற்புள்ள, பாவமற்ற தேவகுமாரனோடு, தூய்மையான, கலப்படமற்ற மணவாட்டி-வார்த்தையுடன், அவருடைய சொந்த இரத்தத்தின் தண்ணீரால் கழுவப்பட்டு நின்றுகொண்டிருக்கிறோம்.

உலகத் தோற்றத்திற்கு முன்பு இயேசு முன்குறித்த நம்மை, பிதாவின் மார்புக்கு அழைத்துச் செல்லும்படி, நாம் மாம்சமான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக மாறிவிட்டோம்.

நாம் நடந்துகொண்ட விதத்திலும், தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையின் அவருடைய உண்மையான வெளிப்பாடு நமக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதிலும், நாம் அச்சமற்றவர்கள் என்பதிலும் உலகம் நம்முடைய விசுவாசத்தின் வெளிப்படுத்துதலைக் காண முடியும். முழு உலகமும் என்ன சொல்கிறது அல்லது நம்புகிறது என்பது நமக்கு கவலையில்லை...நாம் அச்சமற்றவர்கள். இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக தேவன் அருளியிருக்கிற வழியாய் உள்ளது.

இந்த கடைசி-கால செய்தியை அவர்கள் விசுவாசிப்பதாக கூறுகிற அநேகர் இருக்கின்றனர், தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், வில்லியம் மரியன் பிரான்ஹாம் ஏழாம் தூதனாகிய செய்தியாளராயிருந்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உரைத்தார் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஆனால் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அந்த சத்தம் என்பதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்கள் உரைக்கப்பட்ட வார்த்தையின் பிழையின்மையை விசுவாசிக்கிறதில்லை. அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்குவதை அவர்கள் விசுவாசிப்பதில்லை.

அதன் அர்த்தம் என்ன? அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பதே அர்த்தமாகிறது!

அது ஒரு வெளிப்பாடு, அவர் தம்முடைய கிருபையினால் அதை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கென்று நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. நீங்கள் உங்கள் சுய முயற்சியினால் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் விசுவாசத்தைப் எப்போதும் உடையவர்களாய் இருக்கிறீர்கள், தேவனுடைய கிருபையால் அது உங்களுக்கு அளிக்கப்பட்டது. தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். எனவே விசுவாசம் என்பது ஒரு வெளிப்பாடாகும். தேவனுடைய சபை முழுவதுமே வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டுள்ளது.

விசுவாசத்தின் மூலம், இந்தச் செய்தி இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியைப் போஷித்து, பரிபூரணப்படுத்துவதற்காகப் பதிவுசெய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சத்தியம் என்று தேவன் கூறினதில் உள்ள ஒரு அசலான, கலப்படமற்ற விசுவாசமாக உள்ளது. மேலும் இது நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது, அதை எதுவும் அசைக்கப் போவதில்லை. அவருடைய தீர்க்கதரிசி நம்மை நம்முடைய கர்த்தரிடத்திற்கு அறிமுகப்படுத்தும் வரையில் அது அங்கேயே இருக்கப்போகிறது.

நாம்தாமே அதைத் தவிர்க்க முடியாது. உலகத் தோற்றத்திற்கு முன்னே அதை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்கும்படி அவர் நம்மை ஆயத்தப்படுத்தினார். இந்தக் காலத்தில் அவருடைய சத்தத்தை நாம் ஏற்றுக் கொள்வோம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்மை முன்னறிந்து, ஏற்றுக் கொள்ளும்படி நம்மை நியமித்திருந்தார்.

அப்படியானால், இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் செய்து வரும் கிரியைகள், ஒருபோதும் தவறி போகாத இந்த தரிசனங்கள், ஒருபோதும் தவறி போகாத வாக்குத்தத்தங்கள் மூலம், வேதாகமத்தில் வாக்களிக்கப்பட்டுள்ள எல்லா அப்போஸ்தல அடையாளங்களும், மல்கியா 4, மற்றும் ஓ, வெளிப்படுத்தல் 10:6 இவையனைத்தும் நிறைவேற்றப்பட்டு, விஞ்ஞானத்தின் மூலமும், மற்ற ஒவ்வொரு வழியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருக்கவில்லையென்றால், இந்த காரியங்கள் நடந்திருக்காது. ஆனால் நான் உங்களுக்குச் சத்தியத்தை சொல்லியிருந்தால், நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருக்கிறேன் என்பதற்கு அவைகள் சாட்சி பகருகின்றன. அவர் இன்னும் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய ஆவியின் வெளிப்படுத்துதல், மணவாட்டியைக் கொண்டு செல்லவிருக்கிறது. அந்த விசுவாசம், வெளிப்பாடு உங்கள் இருதயத்தில் விழுந்து “இதுதான் அந்த வேளை” என்பதை உணர்த்துவதாக.

இதுவே நேரம். இதுவே செய்தி. இது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை அழைக்கும் தேவனுடைய சத்தம். ஓ சபையே, ஒலிநாடாக்களில் உள்ள இந்த சத்தத்தை கேட்பதே இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை ஒன்றிணைத்து பரிபூரணப்படுத்தும் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்தவும், விசுவாசத்தை பெற்றுக் கொள்ளவும் உங்களுடைய இருதயத்தின் விளை நிலத்தைக் கர்த்தர் ஆயத்தப்படுத்துவாராக.

அவருடைய அதிசீக்கிர வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துகிற தேவனுடைய சதத்தை நாங்கள் கேட்க போகிறபடியால், உன்னதங்களில் எங்களோடு ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, உங்களுடைய விசுவாசத்தைஉயர்வான தளங்களுக்குள் கொண்டு செல்லும்படிக்கு ஜெபர்சன்வில், நேரப்படி, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் மீண்டும் ஒருமுறை உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரன்ஹாம்

 

அடுத்த வாரம் நாங்கள் எங்களுடைய முதல் அமைதியான தண்ணீர் முகாமமைத் (ஸ்டில் வாட்டர்ஸ் கேம்ப்) தொடங்கும்போது எங்களுக்காக தயவுகூர்ந்து ஜெபத்தில் இருங்கள்.

செய்தி: விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் 65-1126

 

 

படிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:

ஆதியாகமம் 15:5-6, 22:1-12
அப்போஸ்தலர் 2:17
ரோமர் 4:1-8, 8:28-34
எபேசியர் 1:1-5
யாக்கோபு 2:21-23

பரி. யோவான் 1:26, 6:44-46