ஞாயிறு
06 ஜூலை 2025
65-1127E
நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன்
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்பான இணைக்கப்பட்டுள்ள மணவாட்டியே,

இன்றைக்கு, தேவன் தம்முடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளர் மூலம் பேசின் இந்த வார்த்தைகள் இன்னமும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய, நம் மூலமாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களுக்கும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.

அவர்கள் சபைகளில், வீடுகளில், சிறிய கட்டிடங்களில் மற்றும் ஒரு பெட்ரோல் நிலையங்களில் கூட இருந்தனர்; அமெரிக்கா முழுவதும் சிதறிக்கிடந்தனர், வார்த்தை புறப்பட்டுச் சென்ற அதே நேரத்தில் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இன்றைக்கு, நாம் இன்னமும் அவருடைய சபைகளில் ஒன்றாக இருக்கிறோம். அவர் இன்னமும் நம்முடைய போதகர். அவருடைய வார்த்தைக்கு இன்னமும் வியாக்கியானம் தேவையில்லை, மேலும் நாம் இன்னமும் உலகம் முழுவதும் கூட்டப்பட்டு, இணைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை பரிபூரணபடுத்தும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாளிலே, இந்த வார்த்தை இன்னும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்பொழுது அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள்? அப்போதே போதகர்கள் ஏன் தங்களுடைய சபைகளை மூடிவிட்டு வந்து செய்தியைக் கேட்டனர்? அவர்கள் ஒலிநாடாக்களைப் பெறுவதற்காகக் காத்திருந்திருக்கலாம், பின்னர் தங்களுடைய மக்களுக்குச் செய்தியைப் பிரசங்கித்திருக்கலாம்; ஒரு வெளிப்பாடில்லாமல் பலர் செய்தார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.

அல்லது சிலர் தங்கள் சபைகளிடம், “இப்போது கேளுங்கள், சகோதரர் பிரான்ஹாம் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் எங்களுடைய சபைகளில் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நான் இந்த ஞாயிற்றுக்கிழமையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரசங்கிக்கிறேன்; ஒலிநாடாக்களைப் பெற்றுக்கொண்டு உங்களுடைய வீடுகளில் அவற்றைக் கேளுங்கள்” என்று சொல்லியிருக்கலாம்.

அப்பொழுது இருந்த மணவாட்டியும், இப்பொழுது இருக்கிற மணவாட்டியைப் போல, ஒரு வெளிப்பாட்டை உடையவளாயிருந்து, அவர்களுக்கான தேவனுடைய சத்தத்தை நேரடியாக கேட்க விரும்பினர. தேவனுடைய சத்தம் புறப்பட்டு சென்றபோது அதைக் கேட்க அவர்கள் நாடு முழுவதும் மணவாட்டியுடன் ஐக்கியப்பட வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் அவருடைய சபைகளில் ஒன்றாக, வீடுகளில் அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், செய்தியோடு, சத்தத்தோடு, இப்பொழுதோ ஒலிநாடாக்களோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுவதுபோல விரும்பினர்.

இன்றைக்கு, இந்த வார்த்தை இன்னமும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவர்கள்/நாம் அதைப் பார்த்ததை மற்றவர்கள் ஏன் பார்க்கிறதில்லை?

முன்னறிவிப்பின் மூலம், இதைப் பார்க்க நாம் நியமிக்கப்பட்டோம். ஆனால் நியமிக்கப்படாத நீங்கள், அதை ஒருபோதும் பார்க்கவே மாட்டீர்கள். கோதுமை அதைப் பார்த்து விலகிச் செல்லத் தொடங்கிவிட்டது.

இது நீங்கள் உங்களுடைய சபைக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. இது உங்களுடைய போதகர் ஊழியம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அர்த்தமல்ல. பல ஊழியங்களும் போதகர்களும் முக்கியமான காரியத்தை மறந்துவிட்டார்கள் என்பதையே இது எளிமையாக பொருட்படுத்துகிறது., மேலும் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்று தங்களுடைய மக்களுக்குச் சொல்லுவதில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாளும் சபைக்குச் செல்வது உங்களை மணவாட்டியாக மாற்றுகிறதில்லை; அது தேவனுடைய தேவை அல்ல. பரிசேயர்களும் சதுசேயர்களும் அந்த போதனையை நன்கு கடைபிடித்தனர். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் அறிந்திருந்தனர், ஆனால் ஜீவனுள்ள வார்த்தை மானிட சரீரத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? இன்றைக்கு பலர் அதே காரியத்தையே செய்கிறார்கள்.

அவர்கள், “அவர் பேசிக்கொண்டிருந்த ஸ்தாபனங்கள் அதுதான். அவர்கள் சகோதரன் பிரான்ஹாமை தங்களுடைய சபைகளில் பிரசங்கிக்க அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் நாங்கள் வார்த்தையைப் பிரசங்கித்து, அவர் கூறினதை அப்படியே சொல்கிறோம்” என்று கூறுவார்கள்.

அது அற்புதமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். ஆனால் அதன்ன்னர கூறுவதோ, இன்று அது வேறு, உங்கள் சபைகளில் சகோதரன் பிரான்ஹாமின் ஒலிநாடாக்களை இயக்குவது தவறு. நீங்கள் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் அல்லது ஸ்தாபனங்களை விட வேறுபட்டவர் அல்ல.

நீங்கள் ஒரு மாய்மாலக்காரர்.

அன்று இருந்தது போல, இயேசு கதவைத் தட்டிக்கொண்டு, உள்ளே நுழைந்து, அவருடைய சபையினிடத்தில் நேரடியாகப் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறார், அவர்கள் தங்களுடைய கதவுகளைத் திறக்க மாட்டார்கள், மேலும் அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க மாட்டார்கள். "அவர் எங்களுடைய சபையில் வந்து பிரசங்கிக்க் கூடாது" என்று கூறுகிறார்கள்.

சத்துரு வெளிப்படுத்தப்படுவதை வெறுக்கிறபடியால், அவன் அதைத் திரித்து, பல திசைகளில் சுழற்றப் போகிறான், ஆனாலும், அது நம் கண்களுக்கு முன்பாகவே வெளிப்படுத்தப்படுகிறது, பலர் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

“ஆதியிலே [சபையோர், “வார்த்தை இருந்தது'' என்கின்றனர்-ஆசி.] ''அந்த வார்த்தை'' [சபையோர், ''தேவனிடத்திலிருந்தது'' என்கின்றனர்-ஆசி. ] “அந்த வார்த்தை” [''தேவனாயிருந்தது.''] ''அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' அது சரியா? லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்காக வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அதே வார்த்தை மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனின் வியாக்கியானமும் தேவையில்லை. ஓ, இங்கேயும் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளதுமான ஜீவனுள்ள தேவனுடைய சபையே! காலதாமதமாவதற்கு முன்பு சீக்கிரம் உறக்கத்தினின்று எழுந்திரு!

உங்களுடைய இருதயங்களைத் திறந்து, தேவன் உங்களுக்கும், அவருடைய எல்லா சபைகளுக்கும் கூறினதைக் கேளுங்கள். இப்போது நாம் அவரை, நம்முடைய கண்களால், அவருடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிப்பதைக் காண்கிறோம். நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை!! மிகவும் தாமதமாகும் முன் எழுந்திருங்கள்!!

இந்தக் காரியங்களைப் பற்றி எங்களுடைய வாழ்நாள் முழுவதும் முடிவு காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுது அது நடப்பதை எங்களுடைய கண்களால் காண்கிறோம்.

அவர் எங்களிடம் கூறினார், ஒரே ஒரு வழி இருக்கிறது, அது தேவனால் தம்முடைய மணவாட்டிக்காக அருளியிருக்கிற வழி. நீங்கள் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருக்க வேண்டும்.

இந்த நாளுக்காக தேவன் அருளியிருக்கிற வழியை கேட்கும்படி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, உலக மக்கள் அனைவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி நான் அழைக்கிறேன், அப்போது நீங்களும், “நான் உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போது நான் உம்மைக் காண்கிறேன்” என்று சொல்லலாம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

செய்தி: 65-1127E நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுதோ நான் காண்கிறேன்.

 

 

வேதவாக்கியங்கள்

ஆதியாகமம் 17
யாத்திராகமம் 14:13-16
யோபு 14வது அதிகாரம் மற்றும் 42:1-5
ஆமோஸ் 3:7
மாற்கு 11:22-26 மற்றும் 14:3-9
லூக்கா 17:28-30