ஞாயிறு
14 டிசம்பர் 2025
64-0719M
எக்காளங்களின் பண்டிகை

அன்புள்ள பரிபூரண மணவாட்டியே,

இது வெறும் ஒப்பனை அல்ல, நண்பர்களே. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வேதமாயுள்ளது.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் மணவாட்டியாக இருக்க விரும்புகிறான், ஆனால் அவருடைய மணவாட்டியோ சிறிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே என்பதை நாம் அறிவோம். அவருக்கு ஒரு அனுமதிக்கும் சித்தம் இருப்பதை நாம் அறிவோம், ஆனால் அவருடைய மணவாட்டியோ அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்க வேண்டும். எனவே, நாம் தேவனை அவருடைய வார்த்தையில் தேட வேண்டும், பின்னர் வெளிப்படுத்தல் மூலம், அவருடைய மணவாட்டியாக எப்படி மாறுவது என்ற அவருடைய பரிபூரண சித்தத்தை நாம் அறிந்துகொள்வோம்.

நாம் வேதத்தை ஆராய வேண்டும், ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையைப் பற்றிய தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றுகிறதில்லை என்பதை நாம் அறிவோம். தேவன் ஒருபோதும் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. அவர் எந்தக் காரியத்தையும் ஒருபோதும் மாற்றுகிறதில்லை. முதல் முறை அவர் அதைச் செய்த விதம் பரிபூரணமானது. நேற்று அவர் என்ன செய்தாரோ அதையே அவர் இன்றைக்கும் செய்வார்.

அவர் ஒரு மனிதனை ஆதியிலிருந்து எப்படி இரட்சித்தாரோ, இன்றைக்கும் அதே வழியில் ஒரு மனிதனைக் இரட்சிக்க வேண்டும். முதல் மனிதனை எப்படிக் குணப்படுத்தினாரோ, இன்றைக்கும் அதே வழியி்ல் அவர் அதைச் செய்ய வேண்டும். தேவன் தம்முடைய மணவாட்டியை எப்படி அழைத்து வழிநடத்தத் தெரிந்து கொண்டாரோ, இன்றைக்கும் அதே வழியில் அவர் அதைச் செய்வார்; ஏனென்றால் அவர் தேவன், மாற்ற முடியாது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது.

எனவே, நாம் அவருடைய வார்த்தையைப் வாசிக்கும்போது, ஒவ்வொரு காலத்திற்கும் அவர் தம்முடைய மணவாட்டியை எப்படி அழைத்து வழிநடத்தத் தெரிந்து கொண்டார் என்பதை நாம் தெளிவாகக் காண முடியும். அவர் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அவர்களுடைய நாளுக்கான வார்த்தையாயிருந்தனர் என்று அவர் கூறினார். அவர் ஒருபோதும் ஒரு மனிதர்களின் குழுவை உடையவர்களாக இருந்ததில்லை என்று தீர்க்கதரிசி நமக்குச் சொன்னார்; அவர்களுக்கு வெவ்வேறு வழிகள், வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன, மேலும் முக்கியமாக, தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை என்று அவர் கூறினார்.

எனவே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தீர்க்கதரிசியும் என்ன உரைத்தனரோ அதிலிருந்து சேர்க்கப்படவோ அல்லது எடுக்கப்படவோ முடியாது. வார்த்தைக்கு வார்த்தை அவர் உரைத்ததாய் இருக்க வேண்டும். தேவன் அருளியிருக்கிற வழி என்ன என்று மிகவும் எளிமையாக நீங்கள் என்னிடம் கேட்டால்….தீர்க்கதரிசியுடன் தரித்திருங்கள் என்பதேயாகும்.

இப்போது, ஆதியிலிருந்தே தேவன் அருளியிருக்கிற வழி என்ன என்பதை நாம் சரியாக அறிவது மட்டுமல்லாமல், தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அப்படியே நிரூபிக்கும்படியாக,கர்த்தர் தம்முடைய தூதன் மூலமாகவும் பேசி, எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார் என்று நமக்குச் சொல்வார்.

அவருடைய மணவாட்டி (நாம்) இந்த பூமியை விட்டு வெளியேறி கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட பிறகு, தேவன் 144,000 தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை எப்படி அழைக்கப் போகிறார்? ஒரு கூட்ட மனிதர்களைக் கொண்டா?

இப்பொழுது இந்த சபை (மணவாட்டி) ஒன்றாக சேர்க்கப்பட்டவுடன், அவள் எடுத்துக்கொள்ளப்படுகிறாள்: அந்த ஏழாம் முத்திரையின் இரகசியம், அல்லது ஏழாம் முத்திரை, இரகசியமாக எடுத்துக் கொள்ளப்படுதல். யூதர்கள் ஏழாவது எக்காளத்தின் இரகசியத்தினால் அழைக்கப்படுகின்றனர், அது இரண்டு தீர்க்கதரிசிகள் எலியாவும் மோசேயும், அவர்கள் திரும்பி வருகின்றனர்.

எனவே மணவாட்டி ஒன்றாக சேர்க்கப்பட்டவுடன், நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம். மணவாட்டியை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவி அவருடைய வார்த்தையாயுள்ளது, இன்றைக்கான அவருடைய வார்த்தை தேவனுடைய சத்தமாயுள்ளது, தேவனுடைய சத்தமாய்...

நான் அதைக் கூறுவதனால் உங்களை புண்படுத்திவிட்டிருந்தால், என்னை மன்னியுங்கள், ஆனால், கோபமடைந்திருக்கலாம் என்றும் நான் உணர்ந்தேன், ஆனால், நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறேன். புரிகிறதா? நான் அதை மீண்டும் கூறுகிறேன், நீங்கள் பாருங்கள், அந்த நேரத்தில் ஆவியின் ஏவுதலின் கீழ் இருந்தேன்.

நான் இங்கே குறுக்கிட்டு கூறுவேனாக, தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட தூதனாகிய செய்தியாளரிடமிருந்து கூறப்படுகிற இந்த ஒரு மேற்கோள் மட்டுமே இந்த கடைசி கால செய்தியில் விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் தங்களுடைய சபையில் தங்களுடைய போதகரிடம் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்கும்படிக்கு அல்லது பதவி விலகச் செய்து தேவனிடத்திலிருந்து வருகிற உண்மையான வெளிப்பாட்டோடு அவர்கள் ஒரு போதருக்கு வாக்களிக்க போதுமானதாகும்.

எனவே, எக்காளம் தொனித்து, இரண்டு தீர்க்கதரிசிகளும் தோன்றும்போது, அவர்கள் வரும்போது அவர் தம்முடைய ஏழாம் தூதனையும் அவருடைய மணவாட்டியையும் ஒரே நேரத்தில் பூமியில் வைத்திருக்க முடியாது. எனவே அவர் யூதர்களை எப்படி அழைக்கிறார்? அவர் தம்முடைய புறஜாதி மணவாட்டியை அழைத்திருக்கிற அதே வழியில்.

யூதர்கள் ஏழாவது எக்காளத்தின் இரகசியத்தால் அழைக்கப்படுகிறார்கள், இது இரண்டு தீர்க்கதரிசிகள்...

மணவாட்டி மேலே செல்வதற்காக ஆயத்தமாயிருக்க வேண்டும்; அப்பொழுது தேவனுடைய இரண்டு ஊழியக்காரர்கள், வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள இரண்டு ஊழியக்காரர்கள், அந்த இரண்டு தீர்க்கதரிசிகள், காட்சியில் தோன்றி, ஏழாம் எக்காளத்தை ஊதி, கிறிஸ்துவை அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்.

மிகத் தெளிவாக, தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இவ்வாறு, அவருடைய மணவாட்டி அவருடைய அருளப்பட்ட வழியுடன், அவருடைய தூதனான தீர்க்கதரிசியோடு, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தோடு தரித்திருப்பாள்.

பின்னர் அதை மிகத் தெளிவாக, தேவன் மீண்டும் ஒருமுறை பேசி தம்முடைய மணவாட்டியிடம் சொல்கிறார்: நீங்கள் எனக்கும் என்னுடைய அருளப்பட்ட வழிக்கும் உண்மையாக தரித்துள்ளீர்கள், எனவே உங்களுடைய நாளுக்கான என்னுடைய அருளப்பட்ட வழி உங்களிடம் இவ்வாறு கூறுவதாக:

ஏழாம் தூதன், செய்தியாளர், "இதோ உலகின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!" என்று கூறுகிறார்.

அந்த சத்தம் மிகவும் முக்கியமானது; ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய ஏழாம் தூதனின் மூலமாக பேசுகிற தேவனுடைய சத்தம். தேவன் அந்த சத்தத்தை, அவருடைய ஏழாம் தூதனின் சத்தத்தை, ஒரு குழுவை அல்ல…என்னையல்ல…உங்களுடைய மேய்ப்பரை அல்ல…நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்மை நமக்கு அறிமுகப்படுத்த அவருடைய ஏழாம் தூதனாகிய செய்தியாளரின் சத்தத்தையே உபயோகிக்க போகிறார்.

இவ்வாறு, நமக்குத் தெரியும்:

• நாம் அவருடைய மணவாட்டி.

• நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம்.

• இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம் இன்றைக்கான அவருடைய திட்டத்தை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினர் இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு கூடி, நம்முடைய போதகர், தேவனுடைய தூதனான செய்தியாளர், வில்லியம் மரியன் பிரான்ஹாம் அவர்கள், உலகத் தோற்றம் முதற்கொண்டு, தேவன் அவர்களிடம் நேரடியாகப் பேசுவதைக் கேட்டு நாம் ஒன்றிணைக்கப்பட வேண்டிய வாய்ப்பை இதற்கு முன்பு எப்போதுமே பெற்றிருந்த வேறெந்த சபையும் இல்லை, வேறு எந்த ஜனக் குழுவும் இல்லை என்பதை பேசி நமக்கு வெளிப்படுத்துவதை கேட்போம்.

நாம் என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள். நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மணவாட்டி மணவாளனோடு ஒன்றாகிக் கொண்டிருக்கிறாள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

எக்காளங்களின் பண்டிகை 64-0719M.

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

லேவியராகமம் 16
லேவியராகமம் 23:23-27
ஏசாயா 18:1-3
ஏசாயா 27:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7
வெளிப்படுத்தின விசேஷம் 9:13-14
வெளிப்படுத்தின விசேஷம் 17:8