
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான தேவனுடைய தன்மைகளே,
இந்தச் செய்தியில் பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய மணவாட்டிக்கு எழுதப்பட்ட அன்பின் மடல். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா நம்மை மிகவும் நேசிக்கிறார் என்று நினைப்பது, நாம் அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது மட்டுமல்லாமல், “நீங்கள் அவருடைய ஜீவனுள்ள வேதவாக்கியமாயும், நான் உலகத்திற்கு வெளிப்படுத்தக்கூடிய என்னுடைய ஜீவனுள்ள தன்மையாயும் இருக்கிறீர்கள்” என்று நமக்குச் சொல்லக்கூடிய அவருடைய சத்தம் நம்முடைய இருதயங்களில் பேசுவதைக் கேட்கவும் அவர் விரும்பினார்.
பின்னர் அவர் பூமியில் செய்த அனைத்து தியாகங்களுக்கும், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவர் நடந்த பாதைக்கும் பிறகு, அவர் ஒரே ஒரு காரியத்தைக் கேட்டார் என்று நினைப்பது:
"அதாவது, நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்.” அவர் நமது ஐக்கியத்தை கேட்டார். அவர் அந்தக் காரியத்தை மாத்திரமே ஜெபத்தில் பிதாவினிடம் கேட்டார், என்றென்றும் உங்களுடைய தோழமையே.
அவருடைய ஐக்கியத்தை, என்றென்றைக்கும் அவருடைய தோழமையை ஏற்றுக் கொள்ளும்படியாக நான் இருக்கும் இடத்தில், "அவருடைய வார்த்தை," நாமும் கூட இருக்க வேண்டும். ஆகையால், நாம் அவருடைய கற்புள்ள வார்த்தை மணவாட்சியாக இருக்கும்படியாக ஒலிநாடாவில் நம்மிடத்தில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையினாலும் நாம் பிழைக்க வேண்டும், அதுவே நம்மை மணவாளனின் பாகமாக்குகிறது.
இந்த காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு இதுதான்; இன்னொரு காலத்தில் அவர் எப்படி இருந்தார் என்பது அல்ல, இப்பொழுது அவர் யாராய் இருக்கிறார் என்பதேயாகும். இன்றைக்கான வார்த்தை. இன்றைக்கு தேவன் எங்கே இருக்கிறார். அதுவே இன்றைக்கான வெளிப்பாடாயுள்ளது. அது இப்பொழுது மணவாட்டிக்குள் வளர்ந்துகொண்டு, நம்மை தேவனுடைய குமாரர் மற்றும் குமாரத்திகளின் முழு வளர்ச்சிக்குள்ளாக உருவாக்குகிறது.
நாம் அவருடைய வார்த்தையில் நம்மைப் பார்க்கிறோம். நாம் யார் என்பதை நாம் அறிவோம். நாம் அவருடைய திட்டத்தில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். இது இன்றைக்கான தேவன் அருளின வழியாயுள்ளது. எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபத்து விட்டது என்பதை நாம் அறிவோம். சீக்கிரத்தில் நம்முடைய அன்பார்ந்தவர்கள் பிரசன்னமாவர். நாம் வந்தடைந்துவிட்டோம் என்பதை அப்பொழுது நாம் அறிந்து கொள்வோம். நாம் பரலோகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறோம்…ஆம், பரலோகத்திற்கு, இதைப் போன்ற ஒரு உண்மையான இடத்திற்கே.
நாம் தத்ரூபமான ஓரிடத்துக்கு சென்று செயல் புரியப் போகின்றோம். அங்கு நாம் வாழப் போகின்றோம்; அங்கு நாம் பணிபுரியப் போகின்றோம்; அங்கு நாம் அனுபவித்து மகிழப் போகின்றோம். நாம் ஜீவிக்கப் போகிறோம். நாம் ஒரு ஜீவனுக்கு, உண்மையான நித்திய ஜீவனுக்கு செல்கிறோம். நாம் ஒரு பரலோகத்துக்கு, ஒரு பரதீசுக்கு செல்லப் போகின்றோம், ஆதாமும் ஏவாளும், பாவம் பிரவேசிப்பதற்கு முன்பு, ஏதேன் தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து, புசித்து, எல்லாவற்றையும் அனுபவித்தது போன்று நாமும் அந்த இடத்தை அடைவதற்கு நமது பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அது உண்மை, மறுபடியுமே. முதலாம் ஆதாம் பாவத்தின் மூலம் நம்மை அங்கிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டான்; இப்பொழுது இரண்டாம் ஆதாம் நீதியின் மூலம் நம்மை மறுபடியும் அங்கு கொண்டு செல்கிறார், நம்மை நீதிமான்களாக்கி, உள்ளே கொண்டு செல்கிறார்.
இது நமக்கு என்ன அர்த்தம் என்பதை யாராவது எப்படி வார்த்தைகளில் சொல்ல முடியும்? நாம் நித்தியம் முழுவதும் ஒன்றாக ஜீவிக்க பரதீசுககு செல்கிறோம் என்பதுதான் யதார்த்தம். இனி துக்கம், வேதனை அல்லது துயரம் இல்லை, பரிபூரணத்தின் மேல் பரிபூரணம்.
நம்முடைய இதயங்கள் களிகூர்ந்து கொண்டிருக்கின்றன, நம்முடைய ஆத்துமாக்கள் நமக்குள் அனல்மூட்டப்படுகின்றன. சாத்தான் ஒவ்வொரு நாளும் நம் மீது அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் நாம் இன்னும் மகிழ்ச்சியடைகிறோம். ஏன்:
• நாம் யார் என்பதை நாம் அறிவோம்.
• நாம் அவரைத் தவறவிட்டதில்லை, தவறவிடமாட்டோம் என்பதை நாம் அறிவோம்.
• அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.
• அவருடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
சகோதரரன் ஜோசப், நீங்கள் ஒவ்வொரு வாரமும் அதையே எழுதுகிறீர்கள். மகிமை, அவர் உங்களை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படியாக அவர் விரும்புகிறபடியால் நான் ஒவ்வொரு வாரமும் அதையே எழுதுவேன். நீங்கள் யார். நீங்கள் எங்கு செல்கிறீர்கள். எதிர்மறையானது நேர்மறையாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வார்த்தையாயும் வார்த்தையாகவுமே மாறிக் கொண்டிருக்கிறீர்கள்.
அன்பான உலகமே, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி, "நான்" உங்களை அழைப்பதால் அல்ல, ஆனால் "அவர்" உங்களை அழைப்பதால் எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். "நான்" ஒலிநாடாவைத் தேர்ந்தெடுத்ததால் அல்ல, ஆனால் உலகம் முழுவதும் மணவாட்டியின் ஒரு பகுதியுடன் ஒரே நேரத்தில் வார்த்தையைக் கேட்கவே.
மணவாட்டி உலகெங்கிலும், சரியான நேரத்தில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும் என்பதை நாம் உணர முடியுமா? அது தேவனாயிருக்க வேண்டும். தேவன் தம்முடைய தூதன் பூமியில் இருந்தபோது தீர்க்கதரிசியை அதைச் செய்ய வைத்தார். அவர் மணவாட்டியை ஜெபத்தில் ஒன்றுபட ஊக்குவித்தார், அனைவரும் ஒரே நேரத்தில் ஜெபம் செய்ய, ஜெஃபர்சன்வில் நேரம், 9:00, 12;00, 3:00; இப்போது மணவாட்டி ஒன்றாக ஒன்றிணைந்து தேவனுடைய சத்தம் அவர்கள் அனைவரிடமும் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்பது எவ்வளவு பெரியது?
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: இனி வரப்போகும் காரியங்கள் 65-1205
வேதவாக்கியங்கள்:
பரி. மத்தேயு 22:1-14
பரி. யோவான் 14:1-7
எபிரெயர் 7:1-10