
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான இயேசு கிறிஸ்துவின் குடும்பமே,
உலகம் முழுவதும் கிறிஸ்துவின் மணவாட்டியுடன் இதுவரை இல்லாத அளவுக்கு ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நாம் கேள்விப்பட்ட மற்றும் பார்க்க விரும்பியுள்ள காரியங்கள் இப்போது நம்முடைய கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசுத்த ஆவியானவர் செய்வதாக கூறினதுபோல தம்முடைய மணவாட்டியை, இன்றைக்கான அவருடைய அருளப்பட்ட வழியான ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின மூலமாக மாத்திரமே அவர் ஒன்றிணைத்துக்கொண்டிருக்கிறார்.
முன்பு இல்லாத அளவுக்கு அவர் தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்திக்கொண்டும், உறுதிப்படுத்திக்கொண்டுமிருக்கிறார்.ஒரு ஆர்டீசியன் ஊற்றைப்போல, வெளிப்படுத்தல் நமக்குள்ளாகப் பொங்கிக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது அவருடைய சபையில் நடந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய இணைப்பு மாம்சம் வார்த்தையாகவும், வார்த்தை மாம்சமாகவும் ஆகிக்கொண்டிருக்கிறது. அது வெளிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது. இந்நாளில் என்ன நடக்கும் என்று வேதம் கூறியுள்ளவாறே. அது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. இது வேகமாக அந்த வனாந்தரங்களிலும் கூட குவிந்து... அநேக காரியங்கள் நடைபெறுகின்றன. என்னால் கணக்கு வைக்கவும் கூட முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தப்பட்டு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. தீர்க்கதரிசி கூறினது போலவே, காரியங்கள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன, நம்மால் அதைத் கணக்கு வைக்கக் கூட முடியவில்லை...மகிமை!!!
நமது நேரம் வந்துவிட்டது. வேதம் நிறைவற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. மாம்சம் வார்த்தையாக மாறிக்கொண்டிருக்கிறது, வார்த்தை மாம்சமாகிக்கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசி நடக்கும் என்று. கூறியுள்ளது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
ஏன் நமக்குத்தானா?
புளித்த மா இல்லை, விளங்காத சத்தம் இல்லை, மனிதனுடைய வியாக்கியானம் நமக்கு மத்தியிலே தேவைப்படவில்லை. தேவன் உதட்டிலிருந்து செவிக்கு பேசுகிறபோது அவருடைய வாயிலிருந்து வருகிற சுத்தமான பரிபூரண வார்த்தைக்கு நாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது நாம் அதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையைக் காண்கிறோம், லூக்காவிலும், மல்கியாவிலும் இன்றைக்கான இந்த மற்ற வாக்குத்தத்தங்களும் மாமிசமாகி நம்மிடையே வாசம் பண்ணுகிறதை நம்முடைய காதுகளில் அதை கேள்விப்பட்டோம், இப்பொழுது நாம் அவரைக் காண்கிறோம் (நம்முடைய சொந்த கண்களில்) தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார், நமக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவைப்படுகிறதில்லை.
மணவாட்டி, அதைவிட எளிமையாக வேறு எதையும் தெளிவாகத் பெற்றுக்கொள்ள முடியாது. எல்லாம் நம்முடைய சொந்த கண்களினால் காணும்படிக்கு, தம்முடைய சொந்த வார்த்தையை பேசி வியாக்கியானித்து, அதை ஒலிநாடாக்களில் வைத்து, மானிட சரீரத்தில் தம்முடைய மணவாட்டிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிற அது தேவனாயுள்ளது. தேவனால் தாமே பரிபூரண வார்த்தையானது உரைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது, எனவே அதற்கு மனிதனின் எந்த வியாக்கியானமும் தேவையில்லை.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் நேரடியாக ஒலிநாடாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார்.
● தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை ஒலிநாடாக்களில் வியாக்கியானிக்கிறார்.
● தேவன் தம்மை ஒலிநாடாக்களில் வெளிப்படுத்துகிறார்.
● தேவன் தம்முடைய மணவாட்டியினிடத்தில் உங்களுக்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை என்று சொல்கிறார். என்னுடைய மணவாட்டிக்குத் தேவைப்படுகிறதெல்லாம் ஒலிநாடாக்களில் உள்ள என்னுடைய வார்த்தையே.
நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் இங்கிருந்து சென்றபிறகு, பதரை விட்டுக் கடந்துபோக இப்போது ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் கோதுமை மணிக்குள் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் குமாரனுடைய சமூகத்தில் இருங்கள். நான் சொல்லியிருப்பவைகளோடு கூட்ட வேண்டாம். நான் சொல்லியிருப்பவைகளை எடுத்துப் போடவேண்டாம். ஏனென்றால் பிதா எனக்குக் கொடுத்திருக்கிறபடியே எனக்குத் தெரிந்திருக்கிற வரை நான் சத்தியத்தைப் பேசுகிறேன். புரிகிறதா?
தேவன் செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டபடி மணவாட்டி செய்வதற்கான ஒரே பரிபூரண வழியை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளார். இன்று வரை இது ஒருபோதும் சாத்தியமில்லை. யூகிக்கவோ, ஆச்சரியப்படவோ, ஏதாவது சேர்க்கப்படவோ, எடுக்கப்படவோ அல்லது வியாக்கியானிக்கப்படவோ உள்ளதா என்ற கேள்வியே இல்லை. மணவாட்டிக்கு உண்மையான வெளிப்பாடு வழங்கப்பட்டுள்ளது: ஒலிநாடாக்களை இயக்குவது தேவனுடைய பரிபூரண வழியாய் உள்ளது.
ஒரு வேளை, நான் அதை மீண்டும் கூறட்டும். என்னுடைய வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கேயன்றி, மற்றவர்களுக்கு அல்ல. மணவாட்டிக்கு ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒருமுறை உண்மையாகவே... அசலான வார்த்தை (வார்த்தை, இயேசு) உங்களுக்குள் வருகிறது, அப்போது, சகோதரனே... செய்தியானது அப்போது உங்களுக்கு இரகசியமாய் இருப்பதில்லை, நீங்கள் அதை அறிவீர்கள், சகோதரனே, அதெல்லாம் உங்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தி எனக்கு இரகசியமல்ல. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். எல்லா வானங்களும் பூமியும் இயேசு என்று அழைக்கப்படுகின்றன. இயேசுவே வார்த்தை.
நாமமானது வார்த்தையில் இருக்கிறது. ஏனெனில் அவரே வார்த்தையாக இருக்கிறார். ஆமென்! அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? வியாக்கியானிக்கப்பட்ட வார்த்தையே தேவனுடைய நாமத்தின் வெளிப்படுத்தலாகும்.
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து ஒரே குழுவாக கொண்டு வரும்படியாக இன்றைக்கான தம்முடைய சத்தத்தை அவர் ஒலிப்பதிவு செய்து சேமித்து வைத்துள்ளதன் மூலம் அவருடைய மனவாட்டியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்து கொண்டு வரக்கூடிய ஒரே வழியாக இருப்பதை மணவாட்டி பார்த்து அடையாளம் கண்டு கொள்கிறாள்.
அவர் இன்று அதை எவ்வாறு செய்யப் போகிறார் என்பதைக் காண்பிக்க 60 ஆண்டுகளுக்கு முன்பு அதைச் செய்தார். நாம் "ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அவருடைய சபைகளில் ஒன்றில் இருக்கிறோம்."
நான் சபைக்குச் செல்வதில் விசுவாசங் கொண்டிருக்கவில்லையென்றால், நான் ஏன் ஒரு சபையை உடையவனாய் இருக்கிறேன்? நாங்கள் அவர்களை நாடு முழுவதும், அன்றொரு இரவு தொலைபேசி மூலம் இணைத்தோம், ஒவ்வொரு இருநூறு சதுர மைல்களிலும் என்னுடைய சபைகளில் ஒன்று இருந்தது.
பல ஊழியர்கள் தங்களுடைய சபைகளில் "இணைப்பில் இருப்பது" அல்லது "நேரடி ஒலிப்பரப்பில் கேட்பது," , "ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்பது," சபைக்குச் செல்வதுபோல் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர் அப்படித்தான் இருப்பதாகக் கூறினார்! அவர்களுக்கு எளிமையான வார்த்தையும் தெரியாது அல்லது மணவாட்டி வாசிக்கக்கூடிய அன்பின் மடலையும் வாசிக்க முடியாது.
சபை என்றால் என்ன? சகோதரன் பிரான்ஹாம் ஒரு சபை என்று கூறினதைப் பார்ப்போமாக.
அநேக, அநேக சபைகள் இந்த கூடாரத்திலிருந்து இங்கே இந்த வசதியைப் பெற்றுள்ளீர்கள். அது பீனிக்ஸிலும் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது எல்லா இடங்களிலும் ஆராதனைகள் உள்ளன, அது சரியாக வருகிறது…அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும், அதைப் போன்ற காரியங்களிலும் ஒரு மிக தெளிவான அலை வரிசையின் மூலமாக ஒன்று கூடுகின்றனர்.
சகோதரன் பிரான்ஹாம் தங்களுடைய "வீடுகளில்" மற்றும் "அது போன்ற காரியங்களில்" உள்ள மக்கள் அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றாக இருந்ததாக தெளிவாகக் கூறுகிறார். இவ்வாறு வீடுகள், பெட்ரோல் நிலையங்கள், கட்டிடங்கள், அவரது தொலைபேசி இணைப்பில் ஒன்றுகூடிய குடும்பங்கள் அவர்களை ஒரு சபையாக்கின.
நாம் இன்னும் கொஞ்சம் அன்பின் மடலைக் வாசிப்போமாக.
நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே தொலைபேசி இணைப்பில் இருந்து கொண்டு, சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை அனைவரும் ஒரே நேரத்தில் கேட்கிறோம்; அவர்களோ நாங்கள் ஒரு குழுவாக ஒன்று கூடி, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர்.
ஆனால் நீங்கள் இன்று அப்படிச் செய்தால், அது சபைக்குப் போவதாக இருக்காது, அது தவறு, நாளானது நெருங்கி வருவதைப் பார்க்கும்போது அது இன்னும் அதிகமாக ஒன்றுகூடுவதில்லை என்று சொல்கிறீர்கள், அது சபைக்கு போவதில்லையா?
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டும், நீங்கள் உங்கள் சபைக்கு பதிலளிக்கிறீர்கள். சகோதரர் பிரான்ஹாம் இன்று இங்கே சரீரப்பிரகாரமாக இருந்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இணைய முடிந்தால், உலகம் முழுவதும் உள்ள மனவாட்டியுடன், போதகர்களே, நீங்கள் தொலைபேசி இணைப்பின் மூலம் சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்பீர்களா அல்லது நீங்கள் பிரசங்கிப்பீர்களா?
உங்களுடைய கடமை உங்களுடைய சபையில் இருக்கிறது என்று சகோதரன் பிரான்ஹாம் தெளிவாகக் கூறுகிறார். நீங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்திருந்தால், சகோதரர் பிரான்ஹாம் ஒரு ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தாலும், உங்கள் சபை கலந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆராதனையை (அப்போது பல ஊழியர்கள் செய்தது போல) நடத்தப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் "உங்கள் சபைக்கு" செல்வீர்களா, அல்லது சகோதரன் பிரான்ஹாம் பேசுவதைக் கேட்க "பிரான்ஹாம் கூடாரத்திற்கு" செல்வீர்களா?
நான் உங்களுக்கு எனது பதிலைத் அளிப்பேன். நான் தேவனுடைய தீர்க்கதரிசி பேசுவதைக் கேட்க கூடாரத்திற்குள் செல்ல மழை, பனி அல்லது பனிப்புயலிலும் வாசலில் நின்று கொண்டிருப்பேன். நான் அந்த வேறொரு சபைக்குச் சென்று கொண்டிருந்தால், அன்றிரவு நான் சபைகளை மாற்றுவேன்.
ஆனால் அந்த ஸ்திரீக்கு, தடியில் வல்லமை வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் எலியாவில் இருந்தார் என்பது அவளுக்குத் தெரியும். தேவன் அங்குதான் இருந்தார்: அவருடைய தீர்க்கதரிசியில். அவள், “நான் உம்மை விடமாட்டேன் என்று கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றாள்.
தேவனால் அருளப்பட்ட ஒரே ஆராதனை ஸ்தானம் 65-1128Mஎன்ற செய்தியை தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வரப் போவதை நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, ஒலிபரப்பு இணைப்பில் உள்ள பிரான்ஹாமுடைய சபைகளில் ஒன்றில் இருக்கும்படி நீங்கள் எங்களோடு சேர்ந்து கொள்ள நான் உங்களை அழைக்கிறேன.
சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்