Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான ஆர்ட்டீசியன் ஊற்றில் பருகுபவர்களே,
நாம் என்னவொரு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளைக் கழித்திருக்கிறோம்! தேவன் தம்முடைய மணவாட்டிக்கு அனுப்பியுள்ள தேவனுடைய வெகுமதிகளை நாம் ஏற்றுக்கொண்டு, பிரித்துப் பார்த்திருக்கிறோம். நம்முடைய முதல் வெகுமதி, இதுவரை எப்போதும் சுற்றப்பட்டிருந்த வெகுமதிகளிலேயே மகத்தான கிறிஸ்துமஸ் வெகுமதியாயிருந்தது. தேவன் தாமே தம்மை மானிட மாம்சத்தில் சுற்றிக் கொண்டு, அந்தப் பொட்டலத்தை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அது தம்முடைய மணவாட்டியை திரும்ப அளிப்பதற்கான அவருடைய முதல் மகத்தான வெகுமதியாயிருந்தது.
பிறகு தேவன் தம்முடைய மணவாட்டிக்கு மற்றொரு மகத்தான பொட்டலத்தை அனுப்பினார். அவர் நம்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்ததால், நம்முடன் உதட்டிலிருந்து செவிக்கு பேசுவதற்காக, அவர் மீண்டும் மாம்சத்தில் வந்து தம்மை வெளிப்படுத்தினார். அவரும் அவருடைய மணவாட்டியும் ஒன்றாக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இப்போது, நண்பர்களே, நான் சொல்வதை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். ஒரு நாள் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிற்கப்போகும் நித்தியத்திற்குரிய ஒரு நபர் என்பதை அறிந்தவனாய், என் இருதயத்தில் மரியாதையுடன் நான் இதைக் கூறுவேனாக: ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வெகுமதியை தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். புரிகிறதா? அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் பார்த்து, “ஓ, அவர் ஒரு சாதாரண மனிதர்தானே” என்று சொல்கிறார்கள். அது உண்மைதான். மக்களை விடுவித்தது தேவனா அல்லது மோசேயா? அது மோசேக்குள் இருந்த தேவன். பார்த்தீர்களா? அவர்கள் ஒரு விடுவிப்பவருக்காகக் கதறினார்கள். தேவன் அவர்களுக்கு விடுவிப்பவரை அனுப்பியபோது, அவர்கள் அதைக் காண தவறினர், ஏனென்றால் அது ஒரு மனிதன் மூலமாயிருந்தது, ஆனால் அது அந்த மனிதனாய் இருக்கவில்லை, அது அந்த மனிதனுக்குள் இருந்த தேவனாயிருந்தது.
இன்றைக்கு, மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வெகுமதியைத் தவறவிட்டுக்கொண்டு, “நீங்கள் இந்த ஒலிநாடாக்களைக் கேட்க வேண்டியதில்லை, இப்போது அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மைதான், ஆனால் அந்த மனிதன் மூலமாக, 'கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசுகிற, தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தம் அதுதான் என்பதை அவர்கள் அடையாளங்கண்டுகொள்ளத் தவறுகிறார்கள். அந்தச் சத்தமே தேவனுடைய ஊரீம் தும்மீமாயும், இன்றைக்கான அவருடைய முற்றிலுமானதாயுமுள்ளது.
நாம் ஒலிநாடாக்களில் அவருடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, நாம் உண்மையாகவே தேவனுடைய ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து தண்ணீரை பருகிக் கொண்டிருக்கிறோம். அதற்கு இறைக்கவோ, இழுக்கவோ, இணைக்கவோ, அள்ளவோ தேவையில்லை; நாம் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்து, அதில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம்.
இயேசுவானவர்தாமே சொன்னபடி, அந்த ஒலிநாடாக்களில் உள்ள சத்தத்திற்கு செவிகொடுப்பதன் மூலம், நம்முடைய நாளில் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான அத்தாட்சியை நாம் உடையவர்களாயிருக்கிறோம்.
ஆகையால் பரிசுத்த ஆவியானவரின் அசலான அத்தாட்சி உண்டு! அவர் இதுவரை எனக்கு எந்தத் தவறான காரியத்தையும் ஒருபோதும் சொன்னதில்லை. அதாவது, “வார்த்தையை விசுவாசிக்க முடிந்தவனே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாய் உள்ளான்.” நீங்கள் அதை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பருகக்கூடிய ஒரு நீரூற்றை தேவன் நமக்கு அருளியிருக்கிறார். அது எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. அது தேங்கி நிற்கும் ஏதோவொன்று அல்ல, அது அவருடைய வற்றாத, தன்னிறைவு பெற்ற நீரூற்று; நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்க வேண்டும்.
தேவனிடமிருந்து வரும் ஒரு வெகுமதியைப் பற்றிப் பேசுகையில், இந்த வெகுமதி உண்மையில் எவ்வளவு மகத்தானது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? வெறுமனே இயங்கு பொத்தானை அழுத்தி, அந்த ஒலிநாடாக்களில் உள்ள அவருடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், அது மாத்திரமே…உலகில் உள்ள ஒரே சத்தம், அதற்கு உங்களுக்கு வடிகட்டியோ, சல்லடையோ அல்லது வேறு எதுவுமோ தேவையில்லை. நீங்கள் செவி கொடுத்து, விசுவாசித்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று கூற வேண்டும்.
நித்திய ஜீவனைப் பெறுவதற்கும், அதைவிடக் கூட முக்கியமாக, அவருடைய மணவாட்டியாக இருப்பதற்கும், தேவன் தாமே இந்த வழியை, அவருடைய ஒரே வழியை, அருளியிருக்கிறார். நாம் அவருடைய மார்பில் சாய்ந்து, அவருடைய நீரூற்றுக்கு, அவருடைய சத்தத்திற்கு, எல் ஷடாய் தம்முடைய மணவாட்டியிடம் பேசுவதற்கு செவிகொடுப்பதன் மூலம் நம்முடைய பலத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
இந்த ஆண்டு, அவர் நம்முடைய அன்பான மணவாட்டியாகிய நமக்காக வரும் ஆண்டாக இருப்பதாக. நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில், நாம் காண ஏங்கியவர்களைக் காண்போம். ஒரு இமைப்பொழுதில், நாம் இங்கிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு, நம்முடைய கலியாண விருந்துக்கு அழைக்கப்படுவோம் நாம் என்பதை உணர்வோம்.
கர்த்தாவே, அந்த மகத்தான மேசையானது, ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்திற்கு, விருந்திற்காக விரிக்கப்பட்டு, யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களாய், ஆனந்த கண்ணீர், எங்களுடைய கன்னங்களில் வடிய, மேசையின் ஊடாக ஒருவரையொருவர் நோக்கிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்... ராஜாவானவர் தம்முடைய அழகிலும், பரிசுத்தத்திலும் வெளிப்பட்டு, அந்த மேசையினூடாக கடந்து வந்து, தம்முடைய சொந்த கரங்களால், எங்களுடைய கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரை துடைத்து, “இனி ஒருபோதும் அழாதீர்கள், அதெல்லாம் முடிந்தது. கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்,” என்று சொல்லுகிறதை, நாங்கள் பார்க்கிறோம். பிதாவே, நாங்கள் பாதையின் கடைமுனைக்கு வரும்போது, பாதையில் உண்டாயிருந்த பாடுகள் எல்லாம், ஒன்றுமில்லாத்தாய் காணப்படும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, இன்றைக்கு நமக்காக தேவன் அருளியிருக்கிற நீரூற்றிலிருந்து பருகிக்கொண்டேயிருக்க வாருங்கள். நீங்கள் முழுமையான இளைப்பாறுதலுடன், நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று சொல்லக்கூடிய ஒரே இடம் இதுதான். இது அவருடைய மணவாட்டி பருகுவதற்காக அவருடைய அருளப்பட்ட ஆர்ட்சியின் ஊற்றாயுள்ளது.
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
செய்தி: 64-0726E வெடிப்புள்ள தொட்டிகள்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரம்