
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள ஒன்றிணைக்கப்பட்ட மணவாட்டியே,
நம்முடைய நாளில் தேவன் செய்துகொண்டிருக்கிற எல்லாவற்றிலும் ஒரு பாகமாக இருக்கும்படி நான் மிகவும் உற்சாகமடைந்து, மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருக்கிறேன். ஆதியிலிருந்த தேவனுடைய சிந்தனைகள் இப்பொழுது நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறோம்.
வேதாகமம் முழுவதும், தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்து, என்ன சம்பவிக்கப் போவதாயிருந்தது என்பதை உரைத்தனர். சில சமயங்களில் அந்த தீர்க்கதரிசனங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேறவில்லை, ஆனால் காலம் நிறைவேறினபோது, அது நிறைவேறியது; ஏனெனில், தம்முடைய தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட தேவனுடைய சிந்தனை நிறைவேற வேண்டும்.
ஏசாயா தீர்க்கதரிசி, "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று கூறினான். ஒவ்வொரு எபிரெய குடும்பமும் தங்களுடைய சிறிய மகளை இந்தக் குழந்தையைப் பெறத் ஆயத்தப்படுத்தினர. அவர்கள் அதற்கு காலணிகள் மற்றும் மூடப்பட்ட காலணிகள் மற்றும் சிறிய விளையாட்டுப் பொருட்களை வாங்கி, வரப் போகும் குழந்தைக்காக ஆயத்தப்படுத்தினர். தலைமுறைகள் கடந்தன, ஆனால் இறுதியாக தேவனுடைய வார்த்தை நிறைவேறியது.
ஒரு வாலிப பையனாக வளருகையில், நான் எப்பொழுதுமே வியப்படைந்தது உண்டு, கர்த்தாவே உம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்படி உம்முடைய ஜனங்களை எப்பொழுதும் ஒன்றிணைத்திருக்கிறீர் என்பதை உம்முடைய வார்த்தையில் நான் காண்கிறேன். உம்முடைய எபிரெய பிள்ளைகளை மோசே என்ற ஒரே மனிதனால் ஒன்றிணைத்தீர், அவன் அவர்களை அக்கினி ஸ்தம்பத்தினால் வாக்குத்தத்த தேசத்திற்கு வழி நடத்தினான்.
நீர் மாம்சமாகி பூமியில் வாசம் செய்த போது, நீர் உம்முடைய சீஷர்களை ஒன்றிணைத்தீர். உம்முடைய வார்த்தையை அவர்களுக்கு வெளிப்படுத்தும்படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் வேறுபிரித்தீர். பெந்தெகொஸ்தே நாளில், நீர் வந்து உம்முடைய பரிசுத்த ஆவியை அவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்பு, நீர் மீண்டும் ஒருமுறை உமது சபையை ஒரே இடத்தில், ஏகமனதோடு, ஒருமனப்பட்டு ஒன்றிணைத்தீர்.
இன்று அது எப்படி சாத்தியமாகும் என்று நான் நினைத்தேன், கர்த்தாவே? உம்முடைய மணவாட்டி உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறாள். மணவாட்டி அனைவரும் ஜெபர்சன்வில்லுக்கு வருவார்களா? அது நடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை கர்த்தாவே. ஆனால் கர்த்தாவே, நீர் ஒருபோதும் உம்முடைய திட்டத்தை மாற்றுகிறதில்லை. இது உம்முடைய பிரமாணம், அதைத் தடுக்க எந்த வழியும் இல்லை. நீர் அதை எப்படி செய்வீர்?
மகிமை...இன்றைக்கு, நாம் நம்முடைய சொந்த கண்களால் காண முடியும், மிக முக்கியமாக, அதனுடைய ஒரு பாகமாக இருங்கள்: தேவனுடைய நித்திய வார்த்தை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் சரீரப்பிரகாரமாக ஒரே இடத்தில் இல்லை, நாம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறோம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்போது தேவனுடைய சத்தத்தின் மூலம் தம்முடைய மணவாட்டியை ஒன்றிணைத்துள்ளார். அவருடைய வார்த்தை உரைக்கப்பட்டு ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கான தேவனுடைய முற்றிலுமானது ஒன்று சேர்ந்து தம்முடைய மணவாட்டியை இணைத்துக் கொண்டிருக்கிறது...அதைத் தடுக்க எதுவும் இல்லை.
தேவன் தம்முடைய மணவாட்டியை ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவள் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து வந்து ஒன்று சேருகின்றாள். ஒரு இணையும் நேரம் உண்டு, அது இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவள் எதற்காக இணைந்து கொண்டிருக்கிறாள்? எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக. ஆமென்!
ஒன்றிணைக்கும் நேரம் இப்போது நடக்கிறது!!! நம்மை இணைத்துக் கொண்டிருக்கிறது எது? பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தையால், தம்முடைய சத்தத்தால். நாம் எதற்காக ஒன்றிணைந்து கொண்டிருக்கிறோம்? ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகவே!!! நாம் அனைவரும் போய்க்கொண்டிருக்கிறோம், ஒருவரையும் விட்டுச் செல்லப் போகிறதில்லை.
தேவன் அவளை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். ஆம் ஐயா, இணைதல்! அவள் எதனோடு இணைந்து கொண்டிருக்கிறாள்? வார்த்தையோடு!
நம்முடைய நாளுக்கான வார்த்தை என்ன? இந்தச் செய்தி, அவருடைய சத்தம், தம்முடைய மணவாட்டிக்குக் தேவனுடைய சத்தம், ஒரு மனிதனல்ல. மனிதர்களல்ல. ஒரு குழுவல்ல. அக்கினி ஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம்.
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” அவள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். எந்த ஸ்தாபனம் அல்லது வேறு யார் என்னக் கூறினாலும் அதைப் பொருட்படுத்துகிறதில்லை.
எவரேனும் என்னக் கூறினாலும், நாம் நிரூபிக்கப்பட்ட, நம்முடைய நாளுக்கான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தத்தோடு இணைந்து கொண்டிருக்கிறோம். வேறொருவருடைய வியாக்கியானத்தோடு அல்ல: நாம் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அது ஒவ்வொரு மனிதனுடனும் மாறுகிறது, ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் ஒருபோதும் மாறுகிறதில்லை, அது தேவனுடைய வார்த்தையாய், தேவனுடைய சத்தமாய் இருக்கும்படி அக்கினி ஸ்தம்பத்தினால் தானே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைக் குறித்து மனிதனுக்குள்ள தொல்லையென்னவெனில், அவன் தன் தலைவனை அறியாமலிருக்கிறான். ஆம், ஐயா. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தில் ஒன்று சேருகின்றனர், அவர்கள் ஒரு பேராயரை அல்லது ஒரு மனிதனை சுற்றி ஒன்று சேருகின்றனர். ஆனால் அவர்கள் தலைவரை, வார்த்தையில் உள்ள பரிசுத்த ஆவியானவரை சுற்றி ஒன்று சேருகிறதில்லை. புரிகிறதா? அவர்களோ, “ஓ, பரவாயில்லை, நான் சற்று மதவெறிகொண்டவனாகிவிடுவேன் என்று நான் பயப்படுகிறேன்; நான் தவறான பாதையில் சென்று விடுவேன் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறுகிறார்கள். ஓ, ஓ, ஓ, ஓ, அங்குதான் உங்கள் காரியமே உள்ளது.
இங்குதான் விமர்சகர்கள் தங்கள் சபைகளை சுட்டிக்காட்டி, “பாருங்கள், அவர்கள் சகோதரன் பிரான்ஹாம் என்ற ஒரு மனிதனை உயர்த்துகிறார்கள். அவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட விசுவாசிகளாய், அந்த மனிதன் பேரில் ஒன்று கூடுகிறார்கள், அந்த மனிதன், பரிசுத்த ஆவியானவர் அல்ல” என்கிறார்கள்.
அர்த்தமற்றது, அந்த மனிதன் மூலமாக உரைக்கப்பட்ட ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்தின் பேரில் நாம் இணைந்து கொண்டிருக்கிறோம். நினைவிருக்கட்டும், அந்த மனிதனே இந்த நாளில் தம்முடைய மணவாட்டியை வழிநடத்தும்படி வெளியே அழைக்க அவருடைய சத்தமாய் இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராய் இருக்கிறார். அதுவே தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாய் உள்ளது. ஆனால் மாறாக, அவர்கள் மனிதர்களை சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை இயக்குகிறதில்லை. உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா??? ஒரு ஊழியக்காரன் இந்த செய்தியை கர்த்தர் உரைக்கிறதாவது என்ற இந்த மணி நேரத்துக்கான செய்தியாக விசுவாசிப்பதாக உரிமை கோரி, தங்களுடைய சபைகளில் அந்த சத்தத்தை இயக்காததற்கு ஒரு விதமான சாத்துப் போக்கை கண்டறிந்து, ஆனாலும் ஜனங்களுக்கு ஊழியம் செய்து அவர்கள் இவர்களுக்கு செவி கொடுக்க வேண்டும் என்றும் மற்ற ஊழியக்காரர்கள் வார்த்தையை பிரசங்கிக்க வேண்டும்…அதன்பின்னர் நாங்கள் ஒரு மனிதனை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்!!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவன் அந்த மனிதர்களுக்கு என்ன செய்தார் என்று கேள்விப்பட்டோம்!!
நாம் ஒரு கலியாணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். நாம் அவரோடு ஒன்றாகி கொண்டு இருக்கிறோம். வார்த்தை நீங்களாக மாறுகிறது, நீங்கள் வார்த்தையாகிவிடுகிறீர்கள். இயேசு, “அந்த நாளில் நீங்கள் அதை அறிவீர்கள். பிதாவாக இருக்கிற யாவும், நானாக இருக்கிறேன், நானாக இருக்கிற யாவும், நீங்களாக, நீங்கள் யாவருமாக இருக்கிறீர்கள். அந்த நாளில் நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றார்.
எங்களுடைய நாளில் எங்களைக் குறித்தும், உம்மைக் குறித்ததுமான வெளிப்பாட்டிற்காக கர்த்தாவே உமக்கு நன்றி. உம்முடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உம்முடைய மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாள். உம்முடைய பதிவு செய்யப்பட்ட வார்த்தையோடு தரித்திருப்பதன் மூலம் நாங்கள் உம்முடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை நம்முடைய நாளுக்கான ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுக்கும்படி நான் உலகத்தை அழைக்கிறேன். 63-0818 இணையும் நேரமும் அடையாளமும் என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளும்படி உங்களை வரவேற்கிறோம். உங்களால் எங்களுடன் இணைய முடியாவிட்டால், ஒரு ஒலிநாடாவை, எந்த ஒலிநாடாவையாவது எடுத்துக் கொள்ளுங்கள்; அவை அனைத்தும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும், தேவனுடைய வார்த்தை உங்களை பரிபூரணப்படுத்த செவிகொடுத்து, அவருடைய அதி சீக்கிர வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
சங்கீதம் 86:1-11 பரி. மத்தேயு 16:1-3
அவள் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். ஏன்? அவள் மணவாட்டியாயிருக்கிறாள். அது உண்மை. அவள் தன்னை தன்னுடைய மணவாளனோடு இணைத்துக் கொண்டிருக்கிறாள், பாருங்கள், மணவாளன் வார்த்தையாயிருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.”