
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள அடையாள மணவாட்டியே,
நாம் ஒன்று கூடும்போது, செய்தியைப் பற்றிப் பேசுவதில்லை, இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கும், அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கும் ஒன்றுபடுகிறோம்; அடையாளம் என்பது இந்த நேரத்தின் செய்தி! அதுதான் இந்த நாளின் செய்தி! அதுதான் இந்தக் காலத்தின் செய்தி.
நாம் அந்த அடையாளத்தை நமக்கும், நம்முடைய வீடுகளுக்கும், நம்முடைய குடும்பங்களுக்கும் பயன்படுத்தியுள்ளோம். நாம் வெட்கமடைகிறதில்லை. யார் இதை அறிந்திருக்கிறார்கள் என்று நாம் கவலைப்படுவதில்லை. எல்லோரும் அதை அறிய வேண்டும் என்றும், ஒவ்வொரு வழிப்போக்கரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்: நாம் ஒலிநாடாக்களை கேட்கிற ஜனங்களாயிருக்கிறோம். நாம் ஒரு ஒலிநாடா இல்லமாயிருக்கிறோம். நாம் தேவனுடைய ஒலிநாடா மணவாட்டியாய் இருக்கிறோம்.
பரிசுத்த ஆவி = அடையாளம் = செய்தி. அவை யாவும் ஒன்றே. உங்களால் அவைகளைப் பிரிக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி = கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது. செய்தி = செய்தியாளர். விமர்சகர்கள் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, தீர்க்கதரிசி கூறினார், உங்களால் அவர்களைப் பிரிக்க முடியாது.
தேவன் உங்களுடைய சந்தோஷம். தேவன் உங்களுடைய பெலன். இந்த செய்தியை அறிவது, அதை அறிவது மாத்திரமே சத்தியம், அதை அறிவதுதான் அடையாளம், அதுதான் நம்முடைய போதுமானது. சிலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை சத்தியம் என்று ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம். அவ்வளவுதான் நல்லது, ஆனால் அதே சமயத்தில் அது பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தச் செய்தி இன்றைக்கான அடையாளம் என்று தீர்க்கதரிசி கூறினார். இந்தச் செய்தி பரிசுத்த ஆவி. இந்தச் செய்தியின் ஏதேனும் வெளிப்பாடு உங்களிடம் இருந்தால், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம். பலர், “நான் அதை விசுவாசிக்கிறேன். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். இது இந்த வேளைக்கான செய்தி” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய சபைகளில் அடையாளத்தின் சத்தத்தை இயக்கவில்லை, இயக்கமாட்டார்கள் என்று கூறி பெருமை பேசுகிறார்கள்.
தேவன் ஒரு அர்த்தம் இல்லாமல் தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் எதையும் பேசவில்லை, அவர் நமக்கு மாதிரிகள் மற்றும் நிழல்கள் மூலம் கற்பித்தார் என்று அவர் சொன்னார். இந்தச் செய்தியில், ராகாபும் அவளுடைய குடும்பத்தினரும் இரட்சிக்கப்படுவதற்கும், மணவாட்டியாக மாறுவதற்கும் என்ன செய்தார்கள் என்பதை தீர்க்கதரிசி மிக விரிவாகச் சொல்கிறார். அவள் என்ன செய்தாள் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும்.
ஒலிநாடாவை இயக்கும் பையன்கள் “ஒலிநாடாவை” இயக்கியபோது... ஒரு நிமிடம் பொறு, அந்த செய்தியாளர் என்ன செய்தார்? ஒரு ஒலிநாடாவை இயக்கினார். அப்பொழுது அவள் என்ன செய்தாள்? அவளுடைய வீட்டை ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபையாக ஆக்கினாள். “அந்த சிவப்பு நூல் கயிற்றைப் பார், அதாவது நான் ஒலிநாடாவை இயக்கும் ஒரு சபை” என்று கூற அவள் வெட்கப்படவில்லை.
நீங்கள் நினைப்பதோ, “ஆம், நான் செய்தியாளரையும், செய்தியையும் விசுவாசிக்கிறேன், ஆனால் எங்களுடைய சபையில் இனி நாங்கள் ஒலிநாடக்களை இயக்குவதில்லை. வேண்டாம் என்று கூறுகிற ஒரு போதகர் எனக்கு உண்டு, ஒலிநாடாக்கள் என்ன கூறுகின்றனவோ அதை மேற்கோள் காட்டி அவர் அப்படியே பிரசங்கிக்கிறார்” என்று அவள் கூறியிருந்திருந்தால் என்னவாயிருக்கும். அவள் இரட்சிக்கப்பட்டிருந்திருப்பாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா…???
அவள் அடையாளத்தைப் பயன்படுத்தினாள். அவளுடைய வீட்டார் காக்கப்பட்டனர். இல்லையேல் அவள் இருந்த இடத்திலேயே அவள் அழிந்து போயிருப்பாள்.
ஒலிநாடாக்களை இயக்குவது குறித்து பல ஊழியர்கள் சாக்குப்போக்குகள் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் பெரும்பாலானவர்கள்: “தீர்க்கதரிசி ஒருபோதும் சபையில் ஒலிநாடாக்களை இயக்குவதாகச் சொல்லவில்லை” என்று கூறுகிறார்கள்.
ராகாப் தன்னுடைய வீட்டை ஒரு சபையாக மாற்றினாரள், அவளுடைய சபை ஒலிநாடாக்களை இயக்கியது என்று தீர்க்கதரிசி கூறினார். அவள் தன்னுடைய சபையில் ஒலிநாடாக்களை இயக்கியதால், அவளும், ஒலிநாடா சபையில் இருந்த அவளுடைய யாவரும், அடையாளத்தின் கீழ் இருந்து, காப்பாற்றப்பட்டனர். மற்ற எல்லா சபைகளும் அழிந்தன.
சகோதர சகோதரிகளே, தயவுசெய்து, ஒரு போதகர் இந்தச் செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றோ, அவர் அவ்வாறு செய்தால் அது தவறு என்றோ நான் கூறிக் கொண்டிருக்கவில்லை. என்னுடைய சொந்த வழியில், நான் இப்போது இந்தக் கடிதத்தின் மூலம் பிரசங்கிக்கிறேன், ஆனால் உங்கள் இருதயத்தைத் திறந்து, தீர்க்கதரிசி என்ன கூறிக்கொண்டு, உங்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேளுங்கள். உங்களுடைய போதகர் அவ்வாறு செய்யாவிட்டால், அல்லது உங்கள் சபையில் ஒலிநாடாக்களை இயக்காமல், ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி; அது எதுவாக இருந்தாலும், வார்த்தையின்படி, நான் அந்தக் காலத்தின் செய்தியை விசுவாசிக்கிறேன் என்று எவ்வளவுதான் கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, வார்த்தை கூறுகிறதை நான் விசுவாசிக்கிறபடி, அந்த அடையாளமாக, அந்தக் காலத்தின் செய்தி, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.
இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, பிரான்ஹாம் கூடாரத்துடன், அடையாளம் 63-0901M என்ற செய்தியைக் கேட்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியாவிட்டால், எந்த அடையாள செய்தியையாவது இயக்கி, அதைப் பயன்படுத்துங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம் 4:10
யாத்திராகமம் 12வது அதிகாரம்
யோசுவா 12வது அதிகாரம்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:31 / 19:1-7
ரோமர் 8:1
1 கொரிந்தியர் 12:13
எபேசியர் 2:12 / 4:30
எபிரெயர் 6:4 / 9:11-14 / 10:26-29 / 11:37 / 12:24 / 13:8, 10-20
பரி. யோவான் 14:12