ஞாயிறு
14 செப்டம்பர் 2025
63-0630E
உன்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா?
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள சகோதர & சகோதரிகளே,

நான் ஜீவனைப் பார்க்கிலும் கர்த்தரை, தேவனுடைய வார்த்தையை, இந்த செய்தியை, அவருடைய சத்தத்தை, அவருடைய தீர்க்கதரிசியை, அவருடைய மணவாட்டியை நேசிக்கிறேன். அவை யாவும் எனக்கு ஒன்றாயிருக்கின்றன. தேவன் எழுதின அவருடைய வார்த்தையில் அல்லது அவருடைய தீர்க்கதரிசி மூலமாக உரைத்த வார்த்தையின் ஒரு எழுத்தையாவது, ஒரு எழுத்தின் உறுப்பையாவது நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. எனக்கு இவை யாவுமே கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.

தேவன் அதை நினைத்தார், பின்னர் அதை தம்முடைய தீர்க்கதரிசிகளிடம் பேசினார், அவர்கள் அவருடைய வார்த்தையை எழுதினார்கள். பின்னர் அவர் தம்முடைய பலமுள்ள தூதனாகிய வில்லியம் மரியன் பிரான்ஹாமை அவர் ஆபிரகாமோடு செய்தது போல, மீண்டும் ஒருமுறை மானிட சரீரத்தில் தம்மை வெளிப்படுத்த நம்முடைய நாளில் பூமிக்கு அனுப்பினார். அதன் பின்னர் அவருடைய முன்குறிக்கப்பட்ட மணவாட்டிக்கு உலக தோற்றமுதல் மறைக்கப்பட்டிருந்த எல்லா இரகசியங்களையும் வியாக்கியானித்து வெளிப்படுத்தும்படிக்கு, உலகத்திற்கு தேவனுடைய சத்தமாக இருக்கும்படிக்கு அவருடைய தீர்க்கதரிசி மூலமாக அவர் பேசினார்.

இப்பொழுது, அவருடைய மணவாட்டியாகிய, நீங்கள், மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள்; அவருடன் ஒன்றாக, அவருடைய முழுமையாக திரும்பளிக்கப்பட்ட வார்த்தை மணவாட்டி.

நான் கூறுவதிலும், எழுதுவதிலும் நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நம்முடைய தீர்க்கதரிசி கூறினது போல், நான் கல்வி கற்கவில்லை, என்னுடைய இருதயத்தில் உணர்வதை சரியாக எழுதவோ பேசவோ என்னால் முடியாது என்பதை நான் தாழ்மையுடன் கூறுவேனாக. சில நேரங்களில் நான் மிகவும் கடுமையாக எழுதுவது போல் தெரிகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் அவ்வாறு செய்யும்போது, அது அவமரியாதை காட்டவோ, தவறான அணுகுமுறையைக் கொண்டிருக்கவோ அல்லது ஒருவரை நியாயந்தீர்க்கவோ அல்ல, ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தைக்காக என்னுடைய இருதயத்தில் உள்ள அன்பினால் நான் அதைச் செய்கிறேன்.

தேவன் தம்முடைய மணவாட்டியை அழைக்க அனுப்பிய இந்த செய்தியை அனைவரும் ஏற்றுக்கொண்டு விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஊழியர்கள் இனி ஒருபோதும் பிரசங்கிக்கக்கூடாது என்று என்னுடைய இருதயத்திலோ அல்லது மனதிலோ நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை; அது தேவனுடைய வார்த்தைக்கு எதிரானதாக இருக்கும். ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்திற்காக நான் வைராக்கியமாக இருக்கிறேன். எல்லா ஊழியங்களிலுமே ஜனங்களுக்கு முன்பாக முதலில் வைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சத்தம் இதுவே என்று நான் விசுவாசிக்கிறேன். இதன் பொருள் அவர்களால் பிரசங்கிக்க முடியாது என்று அர்த்தமல்ல, மக்கள் அந்த அபிஷேகத்தின் கீழ் கூடும்போது அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களை இயக்க அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

ஆம், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே செய்தியைக் கேட்பதை நான் விரும்புகிறேன். "நான்" அப்படிச் சொன்னதாலோ அல்லது "நான்" கேட்க ஒலிநாடாவைத் தேர்ந்தெடுத்ததாலோ அல்ல, ஆனால் நம்முடைய நாளில் இது நடக்க தேவன் எவ்வாறு ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார் என்பதை மணவாட்டி காண்பாள் என்று நான் நிச்சயமாகவே உணருகிறேன்.

இயேசு என்ன கூறினார் என்பதைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா அல்லது யோவான் எழுதினவைகளை (அவர்கள் அனைவரும் கொஞ்சம் வித்தியாசமாகச் கூறினார்கள்) அல்லாமல், இன்று இயேசு பேசிய ஒலிப்பதிவுகளை ஒலி நாடாவில் வைத்திருந்தால், ஆனால் இயேசுவின் சத்தம், அவருடைய ஆளுமை, அவருடைய இலக்கணமற்ற வார்த்தைகளை நம்முடைய சொந்தக் காதுகளால் கேட்க முடிந்தால், இன்றைய ஊழியம் அவர்களுடைய சபைக்கு, "நாங்கள் எங்களுடைய சபையில் இயேசுவின் ஒலிப்பதிவை இயக்கப் போவதில்லை. நான் அழைக்கப்பட்டு, அதைப் பிரசங்கிக்க அபிஷேகம் செய்யப்பட்டுள்ளேன், அதை மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது அதைக் கேளுங்கள்" என்று கூறுமா? மக்கள் அதை ஆதரிப்பார்களா? சொல்ல வருத்தமாக இருக்கிறது, ஆனால் இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருப்பது இதுதான். அவர்கள் அதை எப்படி வெள்ளையடித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, எந்த வித்தியாசமும் இல்லை.

எனனைப் பொறுத்தவரையில், சகோதரன் பிரான்ஹாம் எங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்தார். எல்லா சபைகளிலும், வீடுகளிலும், அல்லது அவர்கள் எங்கிருந்தாலும், ஒரே நேரத்தில் செய்தியைக் கேட்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளதை அவர் விரும்பினார். அவர்களால் ஒலிநாடாக்களைப் பெற்று பின்னர் கேட்க முடியும் என்பது அவருக்குத் தெரியும், ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் செய்தியைக் கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினார்…. என்னைப் பொறுத்தவரையில் தேவன் தம்முடைய மணவாட்டிக்கு நம்முடைய நாளில் என்ன நடக்கும், என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்பித்துக் கொண்டிருந்தார் என்பதாகும்.

உண்மையாகவே செய்தியை- விசுவாசிக்கும் ஒவ்வொரு ஊழியக்காரனும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருக்கிற ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தின் அபிஷேகத்தின் கீழ் அமர்வதை பார்க்கிலும் மகத்தான காரியம் வேறொன்றும் இல்லை என்பதை ஒப்புக் கொள்வர். மணவாட்டியோ இந்த செய்தியானது இந்நாளுக்கான தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது என்று விசுவாசித்து வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்வாள். வார்த்தையின் அடிப்படையில் மட்டுமே நான் நிதானிக்க முடியும், ஆனால் இந்தச் செய்தி அவர்களுடைய முற்றிலுமானது என்று சொல்லாத எவருக்கும் இன்று வார்த்தையின் வெளிப்பாடு இல்லை, எனவே, அவர்கள் எப்படி அவருடைய மணவாட்டியாக இருக்க முடியும்?

அதை மேற்கோள் காட்டுவது, பிரசங்கிப்பது அல்லது கற்பிப்பது மட்டுமல்ல, ஆனால் அதை ஒலிநாடாக்களில் கேட்கும்போது மணவாட்டி ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பதாக கூறக்கூடிய ஒரே இடமாக உள்ளது. இந்த செய்தி கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. நான் பிரசங்கிப்பது அல்லது கற்பிப்பது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதல்ல, ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம் என்ன கூறுகிறதோ... அதுவே அக்கினிஸ்தம்பத்தால் ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரே சத்தமாய் உள்ளது.

“பிரான்ஹாம் கூடாரம் அறிவிக்கிற செய்தியை நீங்கள் கேட்கவில்லையென்றால், கழுகுகள் ஒன்று கூடுகின்றன என்று வெளியிடப்படும் கடிதங்களைப் படிக்கவில்லையென்றால், அதே நேரத்தில் உங்களுடைய வீடுகளில் கேட்கவில்லையென்றால் நீங்கள் மணவாட்டி அல்ல” அல்லது “சபைக்குச் செல்வது தவறு, நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே தரித்திருக்க வேண்டும்” என்று கூறும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அது மிகவும் தவறு. நான் அதை ஒருபோதும் நினைத்ததில்லை, அதைக் கூறினதும் இல்லை, அல்லது அதை நம்பியதுமில்லை. அது இன்னும் அதிகமான பிரிவினையை, கடினமான உணர்வுகளை மற்றும் மணவாட்டியிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்தியுள்ளது, ஜனங்களைப் பிரிப்பதற்கு சத்துரு அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நான் மணவாட்டியைப் பிரிக்க விரும்பவில்லை, நாம் ஒன்றாக ஐக்கியப்பட வேண்டும் என்று வார்த்தை கூறினது போல் நான் மணவாட்டியை ஒன்றிணைக்க விரும்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் வம்பு செய்யக்கூடாது, ஆனால் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைத் தவிர வேறு எதுவும் நம்மை ஒன்றிணைக்க முடியாது.

நாம் வாக்குவாதம் செய்து ஜனங்களிடம் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது அவர்கள் மணவாட்டி அல்ல என்றோ சொல்லக்கூடாது, கர்த்தர் உங்களை வழிநடத்துவது போல் செய்யுங்கள். அவர்கள் இன்னும் நம்முடைய சகோதர சகோதரிகள். நாம் ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் வேண்டும்.

இப்பொழுது, சண்டையிடாதீர்கள். புரிகிறதா? கோபம் கோபத்தைப் பிறப்பிக்கும். முதலாவதாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது, நீங்கள் திருப்பிக் கோபப்பட்டால், நீங்கள் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தி, அதை உங்களை விட்டு விரட்டுகின்றீர்கள். பரிசுத்த ஆவி உங்களை விட்டு சென்று விடுகின்றார். கோபம் கோபத்தைப் பிறப்பிக்கும்.

தீர்க்கதரிசி இங்கே கூறினதை வைத்து, நான் ஒருபோதும் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்த விரும்பவில்லை. நான் ஒருபோதும் வம்பு செய்ய விரும்பவில்லை. நாம் அன்பில் ஒன்றாக வழக்காடலாம், ஆனால் வம்பு செய்யக்கூடாது. நான் எழுதிய அல்லது கூறினதில் யாரையாவது புண்படுத்தியிருந்தால், தயவுசெய்து என்னை மன்னியுங்கள், அது என் நோக்கம் அல்ல.

நான் முன்பு வெளிப்படுத்தி கூறியது போல, இன்றைக்கான தேவனுடைய சத்தத்தை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டும்படிக்கு கர்த்தரிடத்திலிருந்து என்னுடைய ஜீவியத்தில் நான் ஒரு அழைப்பை உணர்கிறேன். மற்ற ஊழியக்காரர்கள் மற்ற அழைப்புகளைப் பெற்று, ஒருவேளை காரியங்களை வித்தியாசமாக காணலாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் செய்யும்படி பரிசுத்த ஆவினால் வழிநடத்தப்பட்டு உணர்வதையே அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். “இயங்கு பொத்தானை அழுத்திக் கேளுங்கள்.” மற்றும் நீங்கள் கேட்கக் கூடிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமே என்று எளிமையாக மணவாட்டிக்குச் சொல்வதே என்னுடைய ஊழியமாய் இருக்கிறது. “ஊழியமானது அவர்களுடைய சபைகளில் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தை இயக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன்.”

நான் ஒவ்வொரு வாரமும் எழுதும் கடிதங்கள், தாங்கள் பிரான்ஹாம் கூடாரத்தின் ஒரு பகுதியினர் என்று உணருகிற மணவாட்டியின் பாகத்தினருக்காகவே. அநேகர் அவைகளைப் படிப்பதை நான் அறிவேன், ஆனால் எங்களுடைய சபைக்காக செய்யும்படி நான் வழிநடத்தப்படுகின்றபடியால் அதை செய்ய நான் மாத்திரமே பொறுப்புள்ளவனாய் இருக்கிறேன். ஒவ்வொரு சபையும் ராஜாதிபத்தியம் கொண்டது; அவர்கள் செய்யும்படி கர்த்தரால் வழி நடத்தப்படுவதை உணர்கிற விதமாகவே அவர்கள் செய்ய வேண்டும், அது 100% வார்த்தை. நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல, நாங்கள் உடன்படவில்லை. நானும் பிரன்ஹாம் கூடாரமுமோவென்றால், நாங்கள் ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தையே கேட்க விரும்புகிறோம்.

ஒவ்வொரு வாரமும் எங்களோடு இணைந்து கொள்ளும்படி நான் உலகத்தை அழைக்கிறேன். அவர்களால் எங்களோடு இணைந்து கொள்ள முடியவில்லையென்றால் ஒரு ஒலிநாடாவை தேர்ந்தெடுத்து, எந்த ஒலிநாடாவையாவது இயங்கு பொத்தானை அழுத்தி கேளுங்கள் என்று அவர்களை நான் ஊக்குவிக்கிறேன். அவர்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அபிஷேகம் செய்யப்படுவார்கள். எனவே, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஜெபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, நாங்கள் ஒன்றிணைந்து, 63-0630E உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ளதா? என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால் எங்களோடு சேர்ந்து கொள்ளும்படி இந்த வாரம் நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்