
அன்புள்ள விடுவிக்கப்பட்டவர்களே,
இப்பொழுது, அங்கே, “அவர்கள்,” பாவிகளல்ல. “அவர்கள்,” அதாவது, அந்த நாளின் சபை, அவர்கள் வார்த்தையாயிருந்த அந்த மனிதனின் பேரில் குற்றங்கண்டு பிடித்தனர். அது சரிதானே? வார்த்தையாயிருந்த அந்த மனிதன் பேரில் அவர்கள் குற்றம் கண்டு பிடித்தனர். இப்பொழுது மனிதனின் மூலம் கிரியை செய்யும் அந்த வார்த்தையின் பேரில் அவர்கள் குற்றம் கண்டு பிடிக்கின்றனர்.
தொடக்கத்திலிருந்தே உலகம் அவரை நிராகரித்து, அவரைப் புறக்கணித்து, அவர்களுடைய பாரம்பரியங்களை, அவர்களுடைய கோட்பாடுகளை, அவர்களுடைய கருத்துக்களைக் கைக் கொள்வதன் மூலம் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்க மறுத்துவிட்டது. அவர்கள் எப்போதும் தேவனுடைய திட்டத்தைத் தவறவிட்டனர்; தேவன், ஒரு மனிதனாக, வார்த்தையாக இருந்தார், இப்போது மனிதன் மூலம் வார்த்தை கிரியை செய்கிறது.
ஆனால் நம்முடைய நாளில் அவர், "எனக்கு ஒரு சிறிய குழு இருக்கும், தெரிந்து கொள்ளப்பட்ட சிலர். அவர்கள் ஆதியிலிருந்தே என்க்குள் இருந்தார்கள். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டு, என் வார்த்தையையும், என் வார்த்தையை வெளிப்படுத்த நான் தெரிந்துகொண்ட மனிதனையும் விசுவாசிப்பார்கள். அவர் அவர்களுக்கு என்னுடைய சத்தமாய் இருப்பார்" என்றார்.
"அவர்கள் என்னுடைய சத்தத்தை அறிவிக்க வெட்கப்பட மாட்டார்கள். நான் மீண்டும் வந்திருக்கிறேன் என்றும், நான் செய்வதாக சொன்னது போல் மானிட மாம்சத்தின் மூலம் என்னை வெளிப்படுத்தியுள்ளேன் என்றும் உலகிற்குச் சொல்ல அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள். இந்த முறை அவர்கள் மனிதனை வணங்க மாட்டார்கள், ஆனால் அந்த மனிதன் மூலம் பேசும் வார்த்தையாகிய என்னை வணங்குவார்கள். அவர்கள் என்னை நேசித்து, அவர்களுடைய சரீரதத்தின் ஒவ்வொரு தசைநாரினாலும் என்னை அறிவிப்பார்கள்."
"இவ்வாறு, என் மணவாட்டியாக மாற அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் அவர்களுக்குக் கொடுத்துள்ளேன். நான் அவர்களை என் வார்த்தையால் பலப்படுத்தியுள்ளேன்; ஏனென்றால் அவர்கள் மாம்சமாக்கப்பட்ட என்னுடைய வார்த்தையாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுகமளித்தல் தேவைப்பட்டால், அவர்கள் என் வார்த்தையைப் பேசுகிறார்கள். அவர்களுக்குத் தடையாக ஏதேனும் தடை இருந்தால், அவர்கள் என் வார்த்தையைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை விலகிச் சென்றால், அவர்கள் என் வார்த்தையைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ, அதற்காக அவர்கள் என் வார்த்தையைப் பேசுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவர்களில் மாம்சமாக்கப்பட்ட என்னுடைய வார்த்தையாய் இருக்கிறார்கள்."
“அவர்கள் யார் என்பதை அவர்கள் அறிவார்கள், ஏனென்றால் நான் அவர்களுக்கு என்னை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என் வார்த்தைக்கு உண்மையாகவும் உத்தமமாகவும் இருந்து என் சத்தத்தின் பேரில் ஒன்றிணைந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் என் சத்தத்தை, என் வார்த்தையை, என் பரிசுத்த ஆவியை அறிந்திருக்கிறார்கள். வார்த்தை இருக்கும் இடத்தில் கழுகுகள் கூட்டி சேர்க்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.”
அவருடைய தீர்க்கதரிசி தம்முடைய வார்த்தையைப் பேசி, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் சிலுவையில் அறையப்பட்டதற்காக இந்தத் தலைமுறையைக் குற்றஞ்சாட்டி, அவர்கள் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கும்போது, மணவாட்டி களிகூருவாள். ஏனெனில் நாம் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட அவருடைய மணவாட்டி என்பதை நாம் அறிவோம். நாம் நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து கூக்குரலிட்டு, இவ்வாறு கூறுகிறோம்:
கர்த்தாவே, நான் உம்முடையவன். எனக்குத் தெரிந்த மட்டில் என்னை பிரதிஷ்டை செய்து கொண்டவனாய், இந்த பலி பீடத்தின் மேல் என்னை கிடத்துகிறேன். கர்த்தாவே, உலகத்தை என்னை விட்டகற்றும். அழிந்து போகக்கூடியவைகளை என்னை விட்டகற்றி. அழிந்து போகக் கூடாதவைகளையாகிய தேவனுடைய வார்த்தையை எனக்களியும். நான் வார்த்தையுடன் நெருங்கி ஜீவித்து, வார்த்தை என்னிலும் நான் வார்த்தையிலும் இருக்கத்தக்கதாக அந்த விதமாக அருள்புரியும். அதிலிருந்து நான் ஒருபோதும் விலகாதிருப்பேனாக,
ஜீவன் உண்டு, மரணமும் உண்டு. ஒரு சரியான வழி உண்டு, ஒரு தவறான வழி உண்டு. உண்மை உண்டு, ஒரு பொய்யும் உண்டு. இந்தச் செய்தி, இந்தக் சத்தம், இந்நாளுக்காக தேவனால் அருளப்பட்ட பரிபூரண வழியாய் இருக்கிறது. நாங்கள் அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் பேரில் ஒன்று கூடி குற்றச்சாட்டு 63-0707M என்ற செய்தியை கேட்கப் போகிறபடியால், தேவனுடைய வல்லமையான மணவாட்டியின் ஒரு பாகமாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்
சகோ. ஜோசப் பிரன்ஹாம்