
Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள நிபந்தனையற்ற மணவாட்டியே,
கர்த்தர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தினபடியால் கடந்த வாரம் முகாமில் அவர் அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நேரத்தை நமக்குத் தந்தார். அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் நிரூபித்தார், அதுவே நம்முடைய முற்றிலுமானதாய் இருக்கிறது: அவருடைய வார்த்தை, இந்த செய்தி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தம், அவை யாவும் மாறாததாயிருக்கின்றன, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
பிசாசு செய்தியை செய்தியாளனிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதை நாம் கேள்விப்பட்டோம், ஆனால் கர்த்தராகிய இயேசுவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக, தேவன் தாமே தம்முடைய பலமுள்ள தூதன் மூலம் பேசி நமக்குச் சொன்னார்:
உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியுடன், தேவனால் நியமிக்கப்பட்டு, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன் வரும்போது, செய்தியும் அதைக் கொண்டு வந்த தூதனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்திக்கு, வார்த்தைக்கு வார்த்தை, அடையாளமாக இருக்கத்தக்கதாக அனுப்பப்பட்டிருக்கிறான், ஆகவே அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாக உள்ளது.
அதன் பின்னர் நாம் ஒலிநாடாக்களை கேட்டுக் கொண்டிருக்கும்போது எந்த பூச்சியையும் பிடிக்கும்படி ஒரு வடிகட்டும் கரந்தைத் துணி நமக்குத் தேவையில்லை என்று அவர் நமக்குக் சொன்னார், ஏனென்றால் இந்தச் செய்தியில் பூச்சிகளோ அல்லது பூச்சி சாறுகளோ இல்லை. அது எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் பாயும் அவருடைய ஆர்ட்டீசியன் ஊற்றாகும். எப்போதும் பொங்கி எழும்பிக் கொண்டு, ஒருபோதும் வற்றிப் போகாமல், தொடர்ந்து தள்ளிக் கொண்டே தள்ளிக்கொண்டேயிருந்து, நமக்கு அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அதிக அதிகமாகத் தருகிறது.
அவர் நம்முடனான அவருடைய உடன்படிக்கை மறுக்க முடியாதது, பேச்சுவார்த்தைக்கு உட்படாதது, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நிபந்தனையற்றது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர் நமக்கு நினைவூட்டினார்.
அது அன்பு, ஆதரவு அல்லது சரணடைதல் என எதுவாக இருந்தாலும், ஏதாவது நிபந்தனையற்றதாக இருந்தால் அது முற்றிலுமானது மற்றும் எந்த சிறப்பு விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டது அல்ல: வேறு என்ன நடந்தாலும் பொருட்படுத்தாமல் அது நடந்தேதீரும்.
அதன்பின்னர் அவர் மனதில் பதியச் செய்ய விரும்பினார், எனவே இந்த நாளில் அவருடைய வேதவாக்கியங்கள் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அவர் நம்மிடத்தில் சொன்னார்.
கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நமக்கு முன்பாக நிறைவேறியுள்ளது.
அவர் வாக்களித்தபடியே ஒரு மணவாட்டியை வெளியே அழைக்கும்படி, நம்முடைய நாளில் மாம்ச சரீரத்தில் மீண்டும் மனுஷகுமாரன் வந்துள்ளார். அது நம்மிடத்தில் நேரடியாக பேசிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்துவாகும், அதற்கு எந்த மனிதனுடைய வியாக்கியானமும் தேவையில்லை. நமக்குத் தேவையானதெல்லாம், நாம் விரும்புவதெல்லாம், தேவனிடத்திலிருந்து தாமே வருகிற ஒலிநாடாக்களில் பேசுகிற தேவனுடைய சத்தமேயாகும்.
இது உண்மையாக்கப்பட்ட வார்த்தையின் வெளிப்படுத்துதலான வெளிப்பாடாகும். நாம் அந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவரைக் குறித்த ரகசியத்தின் வெளிப்பாடு.
மணவாட்டி என்னே ஒரு மகிமையான நேரத்தை உடையவளாயிருந்து கொண்டு, குமாரனின் பிரசன்னத்தில் கிடந்து, முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறாள். கோதுமை மீண்டும் கோதுமைக்குத் திரும்பிவிட்டது, நம்மிடையே புளித்த மா ஏதுமில்லை. சுத்தமான தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசிக்கொண்டு, வனைந்து கொண்டு, வார்த்தையான, கிறிஸ்துவின் சாயலுக்குள் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம், அவருடைய தன்மையாக இந்த மகத்தான காலத்தில், உலக சரித்திரத்தின் இந்த மகத்தான காலத்தில் தோன்றும்படியாக அவர் முன்குறித்தார். நாம் தவறிப்போக மாட்டோம், நாம் ஒப்புரவாகமாட்டோம் என்றும், ஆனால் நாம் அவருடைய உண்மையான, உண்மையுள்ள வார்த்தை மனவாட்டியாக, வரப்போவதாக அவர் வாக்களித்த ஆபிரகாமின் ராஜிரீக மேம்பட்ட வித்தாக இருப்போம் என்பதை அவர் அறிந்திருந்தார்.
எடுத்துக்கொள்ளப்படுதல் சமீபித்து விட்டது. நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. குமாரனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து, அவருடைய மணவாட்டி உடையான அவருடைய சத்தத்தை கேட்டு, தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட அவருடைய மனவாட்டிக்காக அவர் வருகிறார். நம்மோடு இருக்கும்படி வாஞ்சித்துக் கொண்டு, காலத்தின் திரைக்கப்பால் காத்துக் கொண்டிருக்கிற நம்முடைய அன்பார்ந்தவர்களை நாம் சீக்கிரத்தில் காணத் துவங்குவோம்.
ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டியை பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளன. இந்த ஒலிநாடாக்கள் மாத்திரமே அவருடைய மனவாட்டியை ஒன்றிணைக்கும். இந்த ஒலிநாடாக்கள் அவருடைய மணவாட்டிக்கு தேவனுடைய சத்தமாய் இருக்கின்றன.
ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் 65-1204 என்ற செய்தியில் சீக்கிரத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை குறித்த யாவற்றையும் நாங்கள் கேட்க போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, அவருடைய மணவாட்டியின் ஒரு பாகமான எங்களோடு நீங்கள் வந்து ஒன்றிணையும்படி நான் உங்களை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்