
அன்பான நியமிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையே,
தேவன் நம்மை மிக அதிகமாக நேசிக்கிறபடியால், அவர் தம்முடைய தீர்க்கதரிசியை நம்முடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கச் செய்கிறார், அந்த பதில்களை ஒலி நாடாவில் வைத்துவிட்டார். நமக்கு அதைக் குறித்த தேவை ஏற்படும்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசித்து, இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதுதான்.
என்னிடம் பரிசுத்த ஆவி இருக்கிறதா?
தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிற போது, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீங்கள் கண்டு, அதை ஏற்றுக் கொள்ளும்போது, அதுவே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாயுள்ளது.
நீர் இந்த செய்தியை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், அது கர்த்தர் உரைக்கிறதாவது என நான் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், கர்த்தாவே நான் அதை உடையவனாய் இருக்கிறேனே!
ஆனால், நான் மிகவும் தோல்வியடைவது போல் தென்படுகிறது…மேலும் எனது கடந்த காலம் எப்படி?
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்றோ, அல்லது அதைப் பற்றி ஒன்றுமில்லை, அது தேவன் இப்பொழுது உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதாய் உள்ளது. அதுதான் அத்தாட்சியாயுள்ளது.
கர்த்தாவே, நீர் என் கடந்த காலத்தைப் பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய அநேக, அநேக தவறுகளையும் கூட இப்பொழுது பார்க்கிறதில்லை, நீர் என்னுடைய சத்தத்தை மாத்திரமே கேட்கிறீர்; தேவனுக்கு மகிமை, நான் பரிசுத்த ஆவியை உடையவனாய் இருக்கிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், நீர் கடற்கரையில் உள்ள ஒரே கூழாங்கல் மாத்திரம் அல்ல என்று நீர் கூறினீர் என்பதை நான் அறிவேன், ஆனால் இந்தக் கடைசி காலத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியை யார் வழிநடத்திக் கொண்டிருப்பார்?
தேவனுடைய உதவியால், நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்.
என்னுடைய இருதயத்தில் அநேக காரியங்கள் உள்ளன, நான் என்ன செய்ய வேண்டும்?
தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, "நாம் போவோம்" என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது முக்கியம் வாய்ந்ததல்ல.
கர்த்தாவே உமக்கு நன்றி, நாங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். உம்முடைய வார்த்தையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. உம்முடைய பரிசுத்த ஆவியானது உம்முடைய தீர்க்கதரிசி மூலம் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது, எனவே நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து உம்முடைய வார்த்தையின் பேரில் ஒன்று கூடி, நாங்கள் புறப்பட்டு செல்ல ஆயத்தமாக இருக்கிறோம்.
என்னிடம் பல கேள்விகள் உள்ளன, எனக்கு வழிகாட்டுதல், உதவி, மற்றும் பதில்கள் தேவை. நான் அதை எங்கே பெற்றுக்கொள்வது?
நான் உங்களை நேசிக்கிறபடியால், நான் உங்களுக்கு உதவ முயற்சிக்கவே இங்கே இருக்கிறேன். நீங்கள் கிறிஸ்துவுக்கு நான் பெற்றெடுத்த என் பிள்ளைகள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் உரிமை கோருகிறேன். இன்றிரவு நான் உங்களை உரிமை கோருகிறேன்; நான் உங்களை எல்லா நேரத்திலும் உரிமை கோருகிறேன்; நான் உங்களை எப்பொழுதும் என்னுடைய சகோதர சகோதரியுமாகவே உரிமை கோருகிறேன்.
சகோதரன் பிரான்ஹாம் நாங்களும் கூட உம்மை நேசிக்கிறோம். எங்களுக்கு வழிகாட்டவும், எங்களை வழி நடத்தவுமே தேவன் உம்மை அனுப்பினார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை வார்த்தையை கொண்டு சரிபார்த்துள்ளோம், அது பரிபூரணமாக அமைந்துள்ளது.
சுவிசேஷத்தில் என்னுடைய தகப்பன் யார்?
நீங்கள் என் பிள்ளைகள்; நான்-நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பன், ஒரு குருவானவராயிருப்பது போன்ற தந்தை அல்ல, பவுல் அங்கே கூறினது போன்று நான் சுவிசேஷத்தில் உங்களுடைய தகப்பனாய் இருக்கிறேன்.
சகோதரன் பிரான்ஹாம், எங்களை வழிநடத்த பரிசுத்த ஆவியானவர் உம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். வேதாகமத்தில் பவுல் கூறினது போலவே, நீர் என்ன கூறினீரோ அது சத்தியமாய் இருக்கிறபடியால், அதை நாங்கள் சரியாக பின்பற்றும்படி நீர் கூறிக்கொண்டிருக்கிறீர், நாங்கள் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் மாற்றக்கூடாது.
நீர் என்ன செய்ய வேண்டும் சகோதரன் பிரான்ஹாம்?
நான் உங்களை கிறிஸ்துவுக்குப் பெற்றெடுத்தேன், இப்பொழுது, நான்-நான் உங்களை கிறிஸ்துவுக்கு நியமிக்கிறேன்; அது கிறிஸ்துவுக்கு உங்களை ஒரு கற்புள்ள கன்னிகையாக நியமிப்பதாயுள்ளது. என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! என்னுடைய நம்பிக்கையை வீணாக்கிவிடாதீர்கள்! நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாகத் தரித்திருங்கள்.
நீர் கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு கன்னிகைகளாக எங்களை அவருக்கு நியமித்திருக்கிறீர். நாங்கள் ஒருவரோடு ஒருவர் கூட சரசம் செய்ய மாட்டோம், நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் கேட்கின்ற ஒவ்வொரு வார்த்தையையும், உம்முடைய சேகரிக்கப்பட்ட வார்த்தையின் மூலமே சரிபார்த்து செய்கிறோம்.
சகோதரன் பிரான்ஹாம், அவருடைய மணவாட்டியாய் இருப்பதற்கு நான் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் என்ன?
வார்த்தையுடன் தரித்திருங்கள்.
நம்முடைய கேள்விகளுக்கான எல்லா பதில்களும் இந்த வார்த்தைகளால் அடக்கப்படலாம்:
வார்த்தையுடன் தரித்திருங்கள்.
இந்த செய்தியே நம்முடைய நாளுக்கான வார்த்தையாய் உள்ளது. சகோதரன் பிரான்ஹாம் நம்முடைய நாளுக்கான தேவனுடைய சத்தமாய் இருக்கிறார். ஒவ்வொரு காரியமும் வார்த்தையோடு சரியாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. நாம் இயங்கு பொத்தானை அழுத்தினால், நமக்குத் தேவையான அனைத்தும் அந்த ஒலிநாடாக்களில் அங்கே அருளப்பட்டுள்ளது.
உங்களுக்கு பதில் தேவைபடுகிற எதையாவது உங்கள் இருதயத்தில் பெற்றுள்ளீர்களா? 64-0823E - கேள்விகளும் பதில்களும் #2 என்ற செய்தியை நாங்கள் கேட்கையில், நாங்கள் எங்களுடைய எல்லா பதில்களையும் பெற்றுக்கொள்ளப்போகிறபடியால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்