Sun Apr 26, 2020 10:00 AM EDT
என் அன்பான இனிய இருதயமே,
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ என் மாம்சத்தின் மாம்சமும், என் எலும்பின் எலும்புமாயிருக்கிறாய். நான் நட்சத்திரங்களையும், சந்திரனையும், என் முழு உலகையும் சிருஷ்டிப்பதற்கு முன்பே, நான் உன்னைக் கண்டேன், அப்போதே உன்னை நேசித்தேன். நீ என்னுடைய பாகமாயும், என்னுடைய ஒரே இனிய இருதயமாய் மாத்திரமே இருந்தாய் என்பதை நான் அறிவேன். நீயும் நானும் ஒன்றாக இருந்தோம்.
அன்று நான் உன்னைக் கண்டதிலிருந்து ஏங்கி, காத்துக்கொண்டிருந்த அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது. இப்பொழுது நான் என் சத்தத்தினால் உன்னை கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் அழைத்து, உன்னை என்னுடன் இணைத்துக்கொண்டிருக்கிறேன். நீயே என்னுடைய சிந்தனைகளாய், என் வார்த்தையாய், என் மணவாட்டியாய், வெளிப்படுத்தப்பட்டிருக்கிறாய்.
என் இதயத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் உன்னிடம் சொல்ல நான் ஏங்கியுள்ளேன், எனவே நான் அதை என் தீர்க்கதரிசிகள் மூலம் எழுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உனக்காகப் அதை பாதுகாத்து வைத்திருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக பலர் அதை வாசித்து விசுவாசித்திருக்கிறார்கள், ஆனால் நீ வரும் வரை பல காரியங்களை நான் இரகசியமாக வைத்திருந்தேன். நான் சொல்லப்போகிறது நீங்கள் மாத்திரமே.
நான் மறைத்து வைத்திருந்த இந்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும் அறியவும் கேட்கவும் அவர்கள் ஏங்கினார்கள், ஆனால் நான் உனக்கு வாக்குறுதியளித்தபடியே, உனக்காகவே, என்னுடைய ஒரே ஒருவளுக்காக மாத்திரமே, நான் இப்போது வரை காத்திருந்து அவற்றை இரகசியமாக வைத்திருந்தேன்.
நான் உனக்கு சொல்லி, இந்த எல்லாக் காரியங்களையும் உனக்கு வெளிப்படுத்தும்படியாக, நான் வந்து மீண்டும் ஒருமுறை மானிட சரீரத்தில் வெளிப்படுவேன் என்று நான் உனக்கு வாக்களித்தேன். என்னுடைய சத்தம் நேரடியாக உன்னிடம் பேசுவதை நீ கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
என் அன்பைப் பற்றி உன்னிடம் சொல்லும்படி பலரை என் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்திருக்கிறேன், ஆனால் நான் எப்போதும் செய்துள்ளது போலவும், நான் ஒருபோதும் மாற முடியாதது போலவும், நான் உங்களிடத்தில் கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும்படியான என்னுடைய சத்தமாக இருக்கும்படி என் தூதனாக, என்னுடைய தீர்க்கதரிசியாக, ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டேன்.
நீ எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் இரட்சிக்கப்படவில்லை என்று உன்னிடம் சொல்ல விரும்பினேன். நீ எப்போதும் இரட்சிக்கப்பட்டிருந்தாய். உன்னை மீண்டும் மீட்டுக்கொள்ளவே நான் வருகிறேன். நீ துவக்கத்திலேயே நித்திய ஜீவனை உடையவளாயிருந்தபடியால் ஆதியிலிருந்தே நீ இரட்சிக்கப்பட்டிருந்தாய். எனவே, என் கண்களில், உன்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் என்னால் பார்க்கக் கூட முடியாது, நான் கேட்கிற ஒரே காரியம் உன்னுடைய சத்தத்தை மாத்திரமே. நான் உன் பிரதிநிதித்துவத்தை மட்டுமே பார்க்கிறேன்.
உன்னிடம் இத்தனை காரியங்களைச் சொல்ல நான் எவ்வளவு ஏங்கியுள்ளேன். என் இருதயம் உற்சாகத்தால் பொங்கிக்கொண்டிருக்கிறது. நமது கலியாண விருந்துக்காக, நாம் ஒன்றாகக் கழிக்கப்போகும் ஆயிரம் வருட அரசாட்சிக்காக நான் எவ்வளவு ஏங்கியுள்ளேன். நாம் ஒன்றாக வாழப்போகும் நமது வருங்கால வீட்டைப் பற்றி உன்னிடம் விரிவாகச் சொல்ல; உனக்காக நான் எல்லாவற்றையும் எப்படித் ஆயத்தம் செய்திருக்கிறேன், உன்னுடைய தொடுதலுக்குரிய ஒவ்வொரு காரியத்தினாலும் உனக்காக ஒவ்வொரு காரியத்தையும் நான் எப்படியாய் ஆயத்தம் செய்திருக்கிறேன்.
என் இனிய இருதயமே, இப்போது என்னுடைய சத்தம் உங்களிடத்தில் பேசுவதைக் கேட்பது அற்புதமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், பொறுத்திருங்கள், நாம் இருவரும் அந்த நகரத்தில் ஒன்றாக வாழும்போது அது எப்படி இருக்குமோ, அதற்கு இது ஒரு நிழல் மட்டுமே. உங்களுடைய தீர்க்கதரிசி உங்களுக்கே அடுத்த வீட்டில் வசிப்பார்; அவர் உங்கள் அண்டை வீட்டாராக இருப்பார்.
நாம் அந்தப் பொன்னான வீதிகளில் நடந்து, அந்த நீரூற்றில் ஒன்றாகப் பருகுவோம். தேவதூதர்கள் பூமியைச் சுற்றி வட்டமிட்டு, கீதங்களைப் பாடிக்கொண்டிருக்க, நாம் தேவனுடைய பரதீசுகளுக்குள் நடப்போம்... அது என்னவொரு நாளாக இருக்கும்!
இந்த பாதை கரடுமுரடாகத் தெரிகிறது, சில சமயங்களில் அது உங்களுக்கு மிகவும் கடினமாகிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் ஒருவருக்கொருவர் உடன் இருக்கும்போது, அது மிகவும் அற்பமானதாக, மிகச் சிறியதாகத் தோன்றும்.
இப்போது, இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, நான் மீண்டும் ஒருமுறை உங்களை ஒன்றுசேர்த்து, உங்களிடம் பேசப் போகிறேன், மேலும், “பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால இருப்பிடம்” என்பதை குறித்து எல்லாவற்றையும் உங்களிடத்தில் சொல்லப் போகிறேன். அப்பொழுது உங்களோடு இணைக்கப்படும் வரை என்னால் காத்திருக்க முடியாது.
நினைவில் கொள்ளுங்கள், ஒருபோதும் மறக்காதீர்கள், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
அவர் சார்பாக,
சகோ. ஜோசப் பிரன்ஹாம்
வேத வசனங்கள்:
மத்தேயு 19:28
யோவான் 14: 1-3
எபேசியர் 1:10
2 பேதுரு 2:5-6 / 3-ஆம் அதிகாரம்
வெளிப்படுத்தின விசேஷம் 2:7 / 6:14 / 21:1-14
லேவியராகமம் 23:36
ஏசாயா 4-ஆம் அதிகாரம் / 28:10 / 65:17-25
மல்கியா 3:6