காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 3 மே, 2025

அன்புள்ள புத்திரசுவிகாரமாக்கப்பட்டவர்களே,

நாம் இப்பொழுது தேவனுடைய பலமான காரியங்களை புசித்துக்கொண்டும், அவருடைய வார்த்தையின் தெளிவான ஒரு புரிந்து கொள்ளுதலை உடையவர்களாயிருக்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாட்டை நமக்கு கொடுத்திருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய சிந்தையோ முழுவதும் குழப்பமற்றதாய் இருக்கிறது.

அவர் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். அவர் என்னவாயிருக்கிறார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் யார் என்பதை நாம் சரியாக அறிவோம். நாம் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவோம், நாம் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயத்துமிருக்கிறோம்.

உலகத் தோற்றம் முதற்கொண்டு மறைக்கப்பட்டிருந்த எல்லா ரகசியங்களையும் அவர் பேசி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி மற்றவர்கள் அவருடைய அருளப்பட்ட வழியைப் புறக்கணித்து, ஒரு வித்தியாசமான வழிநடத்துதலை விரும்பினர் என்பதை அவர் நமக்குச் சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தையோடு தரித்திருக்கும் ஒரு சிறு குழுவை அவர் உடையவராயிருப்பார்.

உலகம் முழுவதும், அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி காரியங்களைப் பொதுவானதாகக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களில் சிறிய குழுக்கள் பூமியெங்கும் சிதறடிக்கப்படுவார்கள்.

மகிமை, நாம் பூமியெங்கும் சிதறடிக்கப்பட்டிருக்கிறோம், ஆனால் இயங்கு பொத்தானை அழுத்தி தேவனுடைய சத்தம் நம்மிடத்தில் பேசுவதை கேட்பதன் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை அவருடைய பலமுள்ள தூதன் மூலம் அவர் நமக்கு என்ன கூறப் போகிறார் என்பதைக் குறித்த ஒரு முன்ருசியை நாம் ருசித்துப் பார்ப்போமாக.

என்னுடைய அன்பான தெரிந்து கொள்ளப்பட்டவர்களே, நீங்கள் இப்பொழுது உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கோ ஓரிடத்தில் அல்ல, ''உன்னதங்களில்.'' அதுதான் விசுவாசி என்ற உங்களுடைய ஸ்தானம். நீங்கள் ஜெபத்தை ஏறெடுத்து செய்தியை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகிவிட்டீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றவர்களாய், தேவனுடைய ஆசிர்வாதத்தினால் நிரப்பப்பட்டு, பரிசுத்தவான்களாக நீங்கள் ஒன்று கூடியிருக்கிறீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, உங்களுடைய ஆவியானது ஒரு பரலோக சூழ்நிலைக்குள்ளாக கொண்டுவரப்பட்டுள்ளது.

என்ன சமபிக்கக்கூடும். என்னுடைய பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அசைவாடுவார். நீங்கள் புதிதாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் இரத்தத்தின் கீழ் உள்ளன. உங்களுடைய கரங்களும் இருதயங்களும் என்னண்டை உயர்த்தப்பட்டிருப்பதோடு, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து என்னை ஆராதித்துக் கொண்டு, நீங்கள் பரிபூரண ஆராதனையில் இருக்கிறீர்கள்.

நீங்கள் முன்குறிப்பில், என்னுடைய முன்னறிவில் தெரிந்து கொள்ள பட்டவர்களாக இருக்கிறீர்கள். முன் நியமித்ததினால் தெரிந்துகொள்ளப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் வஞ்சிக்கப்படுவது கூடாத காரியமாகும். உலக தோற்றத்திற்கு முன்னே நான் உங்களை நியமித்திருக்கிறேன். நீங்கள் குட்டி தேவனாக, பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்; வெறுமன குடும்பத்திற்குள்ளாகப் பிறந்திருக்கவில்லை, என்னுடைய புத்திரசுவிகாரமாக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள்.

நான் உங்களை தெய்வீக சுகமளித்தலினால், முன்னறிவினால், வெளிப்பாட்டினால், தரிசனங்களினால், வல்லமைகளினால், அந்நிய பாஷைகளினால், வியாக்கியானங்களினால், ஞானத்தினால், அறிவினால், எல்லா உன்னத ஆசிர்வாதங்களினாலும், மகிமையால் நிறைந்ததும், சொல்லி முடியாததுமான சந்தோஷத்தினாலும் உங்களை ஆசீர்வதிப்பேன்.

ஒவ்வொரு இதயமும் என் ஆவியால் நிரப்பப்படும். நீங்கள் ஒன்றாக நடந்து, உன்னதங்களிலே ஒன்று சேர்ந்து வீற்றிருப்பீர்கள். உங்களுக்கு மத்தியிலே ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒரு சிகரெட்டும் புகைப்படவில்லை, ஒரு குட்டையான ஆடையும் இல்லை, இந்த, அந்த அல்லது மற்ற, எந்த ஒன்றும் இல்லை, ஒரு தீய எண்ணமும் இல்லை, ஒருவருக்கு எதிராக ஒருவர் எதையும் கொண்டிருக்கவில்லை, எல்லோரும் அன்பிலும் ஒற்றுமையிலும் பேசுகிறார்கள், ஒவ்வொருவரும் ஒரே இடத்தில் ஏகமனதோடு இருக்கிறார்கள்.

அதன்பின்னர் திடீரென்று பரலோகத்திலிருந்து ஒரு பலத்த காற்றடிக்கிற முழக்கம் உண்டாகும், நான் உங்களை எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் ஆசீர்வதிப்பேன். அப்பொழுது நீங்கள் தாவீதை போல, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நடனமாடி, நீங்கள் வெட்கப்படவில்லை என்று உலகத்திற்கு சொல்லுவீர்கள். நீங்கள் என்னுடைய ஒலிநாடா மணவாட்டியாயிருக்கிறீர்கள்! நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசியுங்கள். நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள், அசைக்கப்பட முடியாதே!

மற்றவர்கள் அதை புறக்கணிக்கலாம், அல்லது அதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கோ, இது உங்கள் மரியாதைக்குரிய பதக்கம். தாவீது தன் மனைவியிடம் சொன்னது போல்; “இது ஏதோ ஒன்று என்று நீ நினைக்கிறாய், நாளை வரை காத்திரு, நாங்கள் இன்னும் அதிகமான ஒலிநாடாக்களைக் கேட்டு, கர்த்தரைத் துடித்து, அவருடைய ஆவியால் நிரப்பப்படுவோம்; ஏனென்றால் நாம் கானானில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறோம்.

அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கீழே பார்த்து:

“நீ என்னுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற மணவாட்டி” என்று கூறுவேன்.

இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் கூட கிடைக்கலாம். புத்திர சுவிகாரம் # 1 60-0515E என்ற செய்தியை இன்றைக்கான தேவனுடைய சத்தம் எங்களுக்கு கொண்டு வந்து, எங்களிடத்தில் பேசப் போவததை நாங்கள் கேட்க போகிறபடியால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவிக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்து கொள்ள வாருங்கள்.

இது சபைக்கு மாத்திரமே என்பது ஞாபகமிருக்கட்டும், வெளியிலுள்ளவர்களுக்கல்ல, இது புதிர்களில் உள்ள ஒரு ரகசியமாய் அவனுக்கு இருக்கிறபடியால், புரிந்து கொள்ள முடியாமல், அவனுடைய தலைக்கு மேலே சென்று விடுகிறது, அவனுக்கு இதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால், சபைக்கோ, இது கன்மலையில் உள்ள தேனாகவும், இது சொல்லி முடியாத சந்தோஷமாயும், இது ஆசிர்வதிக்கப்பட்ட உறுதியாயும், இது ஆத்துமாவின் நங்கூரமாயும், இது நம்முடைய நம்பிக்கையும் புகலிடமாயும், ஓ, இது நன்மையான ஒவ்வொரு காரியமாயும் இருக்கிறது. ஏனென்றால் வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது.

சகோதரா. ஜோசப் பிரான்ஹாம்

 

 

செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:

யோவேல் 2:28
எபேசியர் 1:1-5
1 கொரிந்தியர் 12:13
1 பேதுரு 1:20
வெளிப்படுத்தின விசேஷம் 17:8
வெளிப்படுத்தின விசேஷம் 13

சனி, 26 ஏப்ரல், 2025

அன்புள்ள விலையேறப்பெற்ற நண்பர்களே,

என்னுடைய அன்பார்ந்தவர்களே, சுவிசேஷத்தில் எனக்கு அருமையானவர்களே, தேவனுக்கென்று நான் பெற்றெடுத்த பிள்ளைகளே.

நம்முடைய கர்த்தருடன் நமக்கு உண்டாயிருந்த என்னே ஒரு அற்புதமான வார இறுதி. அவருடன் நேரத்தை செலவிடுவது, அவரிடம் பேசுவது, அவருடைய சத்தத்தைக் கேட்பது, அவரை ஆராதிப்பது, அவருக்கு நன்றி செலுத்துவது, நாம் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்குச் சொல்வது, அது வேறு எதையும் போல இல்லை.

இந்த நாளில் ஜீவிக்கும்படியாய் இருப்பதும், வேதாகமத்தின் ஒரு பகுதியாக இருந்து நிறைவேற்றப்படுவதுமான இது என்னே ஒரு கனத்திற்குரியதாய் இருக்கிறது. நம்முடைய இருதயத்தில் உள்ள அனைத்தையும் அழிவுள்ள மானிட வார்த்தைகளினால் எப்படி வெளிப்படுத்த முடியும்? தீர்க்கதரிசி கூறினது போல், அது நான் அல்ல, உள்ளே ஆழமாக ஏதோ ஒன்று இருந்து கொண்டு, அது என்னுள் தள்ளப்பட்டு கொப்பளிக்கிறது; பரிசுத்த ஆவியின் ஒரு ஆர்ட்டீசியன் ஊற்று. இது மணவாளனுக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதலாக உள்ளது.

ஒரு மணவாட்டி தன்னுடைய கல்யாணத்திற்கு முன்பே எவ்வளவு உற்சாகமாக இருக்கிறாள். கடைசி சில வினாடிகள் கடந்து செல்லும்போது அவளுடைய இதயம் மிக வேகமாக துடிக்கத் தொடங்குகிறது....நேரம் இறுதியாக வந்துவிட்டது என்பதை அவள் அறிவாள். "நான் என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். அவர் எனக்காக வருகிறார். இப்போது நாம் ஒன்றாக இருப்போம்."

நாம் உண்மையிலேயே காலத்தின் கடைசி இறுதி தருணங்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். மணவாட்டி சீக்கிரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நம்முடைய தேனிலவு விருந்துக்கு அழைக்கப்படுவாள். அவர் நம்மை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். இனி எந்த கேள்வியும் இல்லை; இனி ஆச்சரியப்படுவதற்கில்லை; நாம் மணவாட்டியாய் இருக்கிறோம்.

அவர் இன்னும் முடிக்கவில்லை. அவர் இன்னும் தனது அன்பான தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை ஆசீர்வதித்து, ஊக்குவிக்க விரும்புகிறார். அவர் அவளை ஊக்குவிப்பதிலும், அவளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் அவளிடம் கூறுவதையும் அவர் எவ்வளவாய் நேசிக்கிறார். அவர் அவளைக் குறித்து எவ்வளவு பெருமைப்படுகிறார்.

அவளுக்குக் கொடுக்க அவருக்கு இன்னொரு மிக விசேஷித்த வெளிப்பாடு இன்னமும் உள்ளது. உலகில் உள்ள பல சத்தங்கள் ஒலிநாடாக்களை இயக்குவதை மறுக்கும் போது, மணவாட்டி அவருடைய பரிபூரண சித்தத்திலும், அவர் அருளின வழியிலும் இருக்கிறாள் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த விரும்புகிறார்.

அவரது திட்டம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவருடைய மணவாட்டி எப்போதும் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். மக்கள் எப்போதும் தங்களுடைய சொந்த வழியை, அவர்களுடைய கருத்தையே விரும்பி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை வழிநடத்த ஒரு வித்தியாசமான தலைவரை விரும்புகிறார்கள். ஆனால் தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த ஒரு தலைவரை அனுப்பினார், அவர்தாமே, பரிசுத்த ஆவியானவர், இந்த நாளின் பரிசுத்த ஆவியானவர், மற்ற எல்லா நாட்களிலும் இருந்தது போலவே, தேவனுடைய தீர்க்கதரிசி.

மனிதர்கள் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் எப்போதும் விரும்பியுள்ளனர். சாமுவேலின் நாளில், சாமுவேல் அவர்களை வழிநடத்துவதை விரும்பாமல் தேவனை அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். சாமுவேலும் கூட ஒரு மனிதனாக இருந்ததால் இது விசித்திரமாகத் தோன்றியது, ஆனால் வித்தியாசம் என்னவென்றால், அவர்களை வழிநடத்த தேவன் தெரிந்து கொண்ட மனிதனாய் சாமுவேல் இருந்தான். அது சாமுவேலை அல்ல, தேவன் சாமுவேலைப் பயன்படுத்தினதாக இருந்தது. அவர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சத்தமாயும், அவர்களை வழிநடத்தும் மனிதனாயும் இருந்தார், ஆனால் அவர்கள் மற்ற சத்தங்களையே விரும்பினர்.

ஜனங்கள் சாமுவேலுக்குப் பயந்தனர் என்பதை சவுல் அறிந்திருந்தான், எனவே அவன் "சவுலும் சாமுவேலும்" என்று அறிவிக்க வேண்டியிருந்தது. மக்கள் தன்னைப் பின்பற்றும்படி அவர்களைப் பயமுறுத்த வேண்டியிருந்தது. உண்மையாகவே, அவன் அழைக்கப்பட்டான். உண்மையாகவே, அவன் சாமுவேலால் அவர்களுடைய ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தான், ஆனால் தேவன் இன்னமும் ஒரு அருளப்பட்ட வழியை உடைவராயிருந்தார், மேலும் அவர்களை வழிநடத்த, சவுலை வழிநடத்தவும் கூட அவர் தீர்க்கதரிசியாக தெரிந்து கொண்டார். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியிடம் பேசி, சவுல் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். சவுல் தானும் அபிஷேகம் செய்யப்பட்டதாக தீர்மானம் செய்து, தீர்க்கதரிசியின் வார்த்தையை மட்டும் கேட்க விரும்பவில்லை, தேவன் அவனுடைய ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டார்.

ஆதலால் அவர்கள் அதைச் செய்தபோது, யுத்தத்தில் எதிரிகளுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டபோது, அப்பொழுது சவுல் இரண்டு காளைகளைக் கொன்று எல்லா ஜனங்களுக்கும் அனுப்பினான். இதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், சவுல் காளையைத் துண்டாக வெட்டி இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் அனுப்பி, “சாமுவேலின் பின்னாலேயும் சவுலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ இந்த காளைக்கு செய்யப்பட்டதே அதே போல் அவனுடைய மாடுகளுக்கும் செய்யப்படும்'' என்றான். அவன் எவ்வளவு வஞ்சகமாக தன்னை தேவனுடைய மனிதனுடன் இணைத்துக் கொண்டான் என்று பார்த்தீர்களா? அது எவ்வளவு-எவ்வளவு கிறிஸ்தவத் தன்மையற்ற ஒரு செயல்! சாமுவேலின் நிமித்தமே ஜனங்களுக்கு பயமுண்டாயிருந்தது. ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு பயந்திருந்தார்கள் என்பதனால், அவர்கள் தன்னையும் பின்பற்றும்படி சவுல் செய்தான். ''அவர்கள் சாமுவேலையும் சவுலையும் பின்பற்றட்டும்” என்றான்.

ஒரு நாள் சவுல் மிகவும் தொல்லைக்குள்ளான. தேவனிடத்திலிருந்து அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவனுக்கு ஆறுதலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்குப் பதில்கள் தேவைப்பட்டன. தனக்குத் தேவையான பதிலைப் பெற எங்கு செல்ல வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்; ஒரே ஒரு இடம் மட்டுமே இருந்தது, தேவனுடைய தீர்க்கதரிசி, சாமுவேல். அவன் மரித்துவிட்டிருந்தான், ஆனால் அவன் இன்னமும் தேவனுடைய சத்தமாக பரதீசிலும் கூட இருந்தான்.

இந்தக் கடைசி நாளில் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த அவர் யாரைத் தேர்ந்தெடுத்தார் என்பதைத் தம்முடைய மணவாட்டி தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிதா விரும்பினார், எனவே அவர் தம்முடைய பலமுள்ள தூதனை காலத்தின் திரைக்கு அப்பால் அழைத்துச் சென்று மீண்டும் ஒருமுறை நமக்குச் சொல்லவும், ஆறுதல்படுத்தவும், நாம் அவருடைய பரிபூரணமான மற்றும் அருளப்பட்ட சித்தத்தில் இருக்கிறோம் என்பதை நமக்கு ஊக்குவிக்கவும் செய்தார்.

தீர்க்கதரிசி கூறிக் கொண்டிருக்கிற எல்லாவற்றுக்கும் மிகவும் கவனமாகக் செவி கொடுங்கள்.

இப்போது, நீங்கள் இதை மீண்டும் சொல்ல நான் விரும்பவில்லை. இது என் சபைக்கு முன்பாக, அல்லது நான் மேய்ப்பராய் இருந்து கொண்டிருக்கிற என் ஆடுகளுக்கு முன்பாகவோ உள்ளது.

அவர் நமக்கு எதையும் சொல்வதற்கு முன், இது நமக்கும், அவருடைய சபைக்கும், அவருடைய ஆடுகளுக்கும், அவர் மேய்ப்பனாய் இருந்து வருபவர்களுக்கும் மட்டுமே என்று நமக்குத் தெரியப்படுத்த விரும்புகிறார். எனவே, "சகோதரன் பிரன்ஹாம் என்னுடைய மேய்ப்பர்" என்று நீங்கள் சொல்ல முடியாவிட்டால், நான் அதை முன்பே சொல்லியிருக்கிறேன், அப்படியானால் மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியமில்லை, இது உங்களுக்கானது அல்ல, மேலும் இதை நாம் திரும்பத் திரும்ப எவருக்கும் சொல்ல வேண்டும் என்று அவர் விரும்பவில்லை, ஆனால் "சகோதரன் பிரான்ஹாம் என்னுடைய மேய்ப்பர்" என்று விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமேயாகும்.

"சகோதரன் பிரான்ஹாம் நம்முடைய மேய்ப்பர்" என்று சொல்வதற்காக நாம் அதிகம் விமர்சிக்கப்படும் கேள்விக்கு நம்முடைய பதில் உள்ளது. (அவர்கள்தான் ஒலிநாடாவைக் கேட்கும் மக்கள்.) அவர்கள் சொல்வது சரி, அவர் இருக்கிறார், நாங்கள் அப்படித்தான்.

தயவுசெய்து என் மீது கோபப்பட வேண்டாம், நான் யாரையும் வருத்தப்படுத்த இந்த காரியங்களைச் சொல்லவில்லை, அது தவறாக இருக்கும், ஆனால் அவர் மணவாட்டிக்கு கூறிக் கொண்டிருப்பது இதுதான். நான் என் வியாக்கியானத்தை அதற்குக் கொடுக்கவில்லை, அவர் அதை வெளிப்படையாகச் சொல்கிறார்... தேவனுடைய வார்த்தைக்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை.

நான் இந்த சரீரத்திலிருந்தேனோ அல்லது சரீரத்துக்கு புறம்பேயிருந்தேனோ, அது ஒரு மறுரூபமாகுதலோ…அது நான் வழக்கமாக காணும் எந்த தரிசனத்தைப் போலும் இல்லை.

இப்பொழுது இது அவர் எப்போதும் கண்டிருந்த எந்த தரிசனத்தைப் போலும் இருக்கவில்லை என்று அவர் நமக்கு சொல்லுகிறார். அவர் ஒருபோதும் சென்றிராத இடத்திற்குச் சென்றார். அவர் எப்போதும் கண்டிருந்த எந்த தரிசனத்தையும் விட அது மகத்தானதாய் இருந்தது. அவர் கனவு கண்டு கொண்டிருக்கவில்லை, அவர் படுக்கையில் தன்னுடைய சரீரத்தைப் பார்த்தார்; அவர் அங்கே இருந்தார்.

இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியே, அது உண்மையிலேயே நன்கு பதியட்டும். அது மறுபுறம் இருந்த இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாயிருந்தது, நிகழ்காலத்தில், அவரிடம் ஓடி வந்து, ஆரவாரமிட்டுக்கொண்டும், அவரைப் பிடித்து, கைகளை அவர் மீது போட்டுக்கொண்டு, "ஓ, எங்களுடைய விலையேற்ப்பெற்ற சகோதரனே!" என்று கூறினர்.

அவர் அங்கே இருந்தார்; அவரால் அதை உணர முடிந்தது; அவரால் அவர்கள் கூறினதைக் கேட்க முடிந்தது. அவர்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தனர். அவர் நின்று, அவர் வாலிபமாக இருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய கைகளை தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு கிடந்த தன்னுடைய பழைய சரீரத்தைத் திரும்பிப் பார்த்தார்.

இப்போது அவர் அங்கே இருந்தார் என்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் அவர் பார்த்துக்கொண்டிருந்தது இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாயிருந்தது. இப்போது மேலிருந்து ஒரு சத்தம் அவரிடத்தில் என்ன கூறிக் கொண்டிருந்தது என்பதை நாம் கேட்போமாக.

அப்பொழுது எனக்கு மேலே இருந்து பேசிக்கொண்டிருந்த அந்தக் சத்தம், "உங்களுக்குத் தெரியும், தீர்க்கதரிசிகள் தங்களுடைய மக்களுடன் சேர்க்கப்பட்டனர் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது" என்று கூறியது.

தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு மாத்திரமே காண்பித்துக் கொண்டும், உற்சாகப்படுத்திக் கொண்டுமிருந்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் அதற்கு இன்னும் நிறைய இருந்தது. அவர் திரும்பி வந்து, நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம், அது என்னவாக இருக்கும் என்பதை மட்டுமல்ல, "இயங்கு பொத்தானை அழுத்திக் கேட்பதன் மூலம்" நாம் அவருடைய பரிபூரண சித்தத்தில் இருக்கிறோம் என்றும், மணவாட்டி இருக்கும் இடத்திற்கு நாம் எப்படிச் செல்கிறோம் என்றும் நமக்குச் சொல்கிறார்.

சகோதரன் பிரான்ஹாம் இயேசுவை மிகவும் ஆவலாக பார்க்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அவர்கள் அவரிடம்:

"இப்போது, அவர் சற்று உயரத்தில், அந்த வழியில் மேலே இருக்கிறார்" என்றனர், "என்றோ ஒருநாள் அவர் உங்களிடம் வருவார்" என்றும் கூறினர்.

அவர் யாராயிருந்தார் என்று அவர்கள் அவரிடம் சொல்லத் தொடங்கினார்கள்.

“நீர் ஒரு தலைவராக அனுப்பப்பட்டீர். தேவன் வருவார். அவர் வரும்போது, நீர் அவர்களுக்குக் கற்பித்தபடி, அவர்கள் உள்ளே செல்கிறார்களா இல்லையா என்பதை, அவர் முதலில் உம்மை நியாயந்தீர்ப்பார். உம்முடைய போதனையின்படி நாங்கள் உள்ளே செல்வோம்.”

ஒரு தலைவராக யார் அனுப்பப்பட்டார்? யார் நமக்குக் கற்பித்தபடி நாம் நியாயந்தீர்க்கப்படப் போகிறோம்? யாருடைய போதனையின்படி நாம் பரலோகத்திற்குள் பிரவேசிப்போம்?

சகோதரன் பிரான்ஹாம் சொன்னதைத்தான் நான் என் மக்களுக்குக் கற்பிக்கிறேன் என்று ஒருவர் சொல்லலாம்... ஆமென், நீங்கள் அதைத் தான் செய்ய வேண்டும், சிலர் செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் அதை "சகோதரரன் பிரான்ஹாமும் நானும்" என்று ஆக்க வேண்டாம்.

நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதை அவர் உறுதிசெய்ய விரும்புவதால், தொடர்ந்து படிப்போம்.

ஜனங்கள் கூச்சலிட்டு, “அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உம்முடன் என்றோ ஒரு நாள் பூமிக்குத் திரும்புவோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று கூறினர். “இயேசு வருவார், நீர் எங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையின்படி நீர் நியாயந்தீர்க்கப்படுவீர்.

அவர் எங்களுக்குப் பிரசங்கித்த வார்த்தையால் நாங்கள் நியாயந்தீர்க்கப்படுவோம். இவ்வாறு, தேவனுடைய சத்தம் ஒலிநாடாக்களில் சொன்னதிலிருந்து நியாயத்தீர்ப்பு வருகிறது. நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான சத்தம் ஒலிநாடாக்களில் உள்ள சத்தம் அல்ல என்று எப்படி எவரேனும் சொல்ல முடியும்?

“பின்னர் நீர் ஏற்றுக்கொள்ளப்படுகிற அந்த நேரத்தில், நீங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்,”

நீங்கள் ஆயத்தமா. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கான கர்த்தருடைய பரிபூரண சித்தம் என்ன என்பதை இது உறுதிப்படுத்தும். மணவாட்டி தீர்க்கதரிசியிடம் அவர் என்ன செய்வார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறாள். வேறு யாரும் இல்லை. ஒரு குழு அல்ல. மற்றொரு மேய்ப்பர் அல்ல, தேவனுடைய தீர்க்கதரிசி, வில்லியம் மரியன் பிரான்ஹாம்.

அப்பொழுது, உம்முடைய ஊழியத்தின் வெற்றிச் சின்னங்களாக, நீர் எங்களை அவருக்குக் அளிப்பீர்.”

யார் நம்மை கர்த்தராகிய இயேசுவிடம் சமர்ப்பிக்கப்போவது?
தீர்க்கதரிசி சொல்வதை மட்டும் கேட்பது முடிந்துவிட்டதா?
சகோதரன் பிரான்ஹாம் ஒருபோதும் ஒலிநாடக்களை இயக்கும்படி சொல்லவில்லையா?

நீங்கள் மணவாட்டியாக இருக்க விரும்பினால், நீங்கள் இயங்கு பொத்தானை அழுத்தி கேட்பது மேலானதாகும் என்று மணவாட்டி சத்தமிட்டு கூறிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் நம்பிக்கை வைக்கப்படவில்லையா? சரி, இன்னும் கூட நிறைய இருக்கிறது.

"நீர் எங்களை அவரிடம் வழிநடத்துவீர், மேலும், நாம் அனைவரும் சேர்ந்து, என்றென்றும் வாழ பூமிக்குத் திரும்புவோம்" என்று கூறினர்.

யார் நம்மை அவரிடம் வழிநடத்துவார்? மணவாட்டியை யார் வழிநடத்துகிறார்? மணவாட்டி அவரிடம், மணவாட்டியை அவர் அவரிடம் வழிநடத்துவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள், பிறகு நாம் என்றென்றும் வாழ பூமிக்குத் திரும்புவோம்.

உங்களிடம் ஏதேனும் வெளிப்பாடு இருந்தால். இந்தச் செய்தியை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறினால், முதலில் அவருடைய சத்தத்தை, ஒலிநாடாக்களை, முன்வைக்க வேண்டும் என்று தேவன் உங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். போதகர்களே, தீர்க்கதரிசியை உங்கள் பிரசங்க பீடங்களில் மீண்டும் வைக்கவும். அந்தக் சத்தத்தால் நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகின்றபடியால், ஒலிநாடாக்களே நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தமாக இருக்கிறது.

வார்த்தையின்படி, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம் நாம் நம்முடைய நாளுக்கான அவருடைய பரிபூரண மற்றும் அருளப்பட்ட சித்தத்தில் இருக்கிறோம்.

புறக்கணிக்கப்பட்ட ராஜா 60-0515M: என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், தேவன் அவருடைய வார்த்தைக்கான உண்மையான வெளிப்பாட்டிற்கு உங்களுடைய கண்களை திறந்திருப்பாரேயானால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0324e ஏழாம் முத்திரை என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்
சனி, 19 ஏப்ரல், 2025

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0324m முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும் என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்க தயங்காதீர்கள்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி 63-0323 ஆறாம் முத்திரை என்ற செய்தியைக் கேட்போம். இது ஜெபர்சன்வில் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற எந்த நேரத்திலும் கேட்க தயங்காதீர்கள்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

தொடர்புடைய சேவைகள்