காப்பகப்படுத்தப்பட்ட கடிதங்கள்
சனி, 13 ஏப்ரல், 2024

அன்பான பூமியின் உப்பானவர்களே,

ஓ அன்புள்ள மணவாட்டியே, வார்த்தையின் பிரசன்னத்தில், முதிர்ச்சி யடைந்து, நாம் யாராக இருக்கிறோம் என்றும், நாம் எங்கிருந்து வந்தோம் என்றும், நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் அடையாளங் கண்டு கொண்டு, ஒன்று கூடி உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு, என்னே ஒரு நேரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம்.

நாம் இப்பொழுது தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை, நம்முடைய இருதயங்களின் ஆழத்திலிருந்து, அறிந்து கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு இருப்போம் என்பதல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் தேவனுடைய சிந்தனையின் தன்மைகளாக இருக்கிறோம்.

சாத்தான் நம்மைத் தாக்கி, நம்முடைய தவறுகளையும், நம்முடைய கடந்த காலத்தையும், நம்முடைய அனுதின தோல்விகளையும் நமக்குக் காண்பிக்க முயற்சிக்கும்போது; அவன் தன்னுடைய பொய்களால் நம்முடைய மனதிலும் உள்ளத்திலும் நம்மை உடைக்க முயற்சிக்கும்போது, நாம் அவனுக்கு நினைவூட்டி, அவனிடம், "தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்பே, என்னை முன்னதாகவேக் கண்டார்; அது உண்மை சாத்தானே, என்னை, அவர் என்னை மீட்கவே இயேசுவை அனுப்பினார்" என்று சொல்லுகிறோம். ஒரு அடியாயிற்றே!

“இப்போது சாத்தானே, என்னை விட்டுப் போ, ஏனென்றால் அவருடைய குமாரனின் இரத்தம் எனக்காகப் பேசுகிறது. என்னால் பாவம் செய்ய முடியாது. என்னுடைய தவறை, ஆம், என்னுடைய பல தவறுகளை, தேவனால் கூட பார்க்க முடியாது. அவர் கேட்கும் ஒரே காரியம் என்னுடைய சத்தம் அவரை ஆராதிப்பதையும் ஸ்தோத்தரிப்பதையும் மாத்திரமேயாகும், மேலும் அவர் காண்கிறதோ என்னுடைய பிரதிநிதித்துவம் என்ற ஒரே காரியத்தையேயாகும்.”

நம்முடைய பிரதிநிதித்துவம் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கிலிருந்து நம்மை ஒன்று கூட்டி, அவருடைய மணவாட்டிக்காக அவர் அருளியிருக்கிற வார்த்தையின் கீழ் நம்மை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே அவர் கனப்படுத்தும் ஒரே காரியமாய் இருக்கிறது, ஏனென்றால் இதுவே அவருடைய அருளப்பட்ட வழியாய் இருக்கிறது.

அவர் நமக்கு அடுத்து என்ன சொல்லி வெளிப்படுத்தப்போகிறார்? அவர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் பலமுறை பேசுவதையும், நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் நம்மிடம் கூறுவதையும் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால் இந்த முறையோ அது பற்றி நாம் இதுவரை கேள்விப்படாதது போல் இருக்கப் போகிறது.

திவ்விய சிற்பாசாரி இதை அவருடைய அருமையானவர்களுக்காக வடிவமைத்திருக்கிறார். பார்த்தீர்களா? ஓ, திவ்விய ஜீவனுக்கு அதிபதியானவரும் திவ்விய சுபாவமும், திவ்விய சிற்பாசிரியருமானவர் திவ்விய தேவனால் திவ்வியமாக முன்குறிக்கப்பட்டிருக்கிற ஒரு திவ்விய தன்மைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிற இந்த ஒரு இடம் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும்! அந்த நகரம் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்! அதைக் குறித்து நினைத்துப் பாருங்கள்.

நாம் நம்முடைய சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய உற்சாகமும் எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. தேவன் நம்மிடம் நேரடியாகப் பேசி, நாம் அவருடன் நித்தியம் முழுவதும் ஜீவிக்கும்படியாக அவர் இப்போது நம்முடைய புதிய வீட்டை உருவாக்கி வடிவமைத்து வருகிறார் என்பதை நமக்கு சொல்வதைக் கேட்க நம்முடைய இதயங்கள் துடிக்கின்றன.

முன்குறித்தல், பிரதிநிதித்துவம், காலம், எட்டாம் நாள், பரிசுத்த பர்வதம், கூர்நுனி கோபுரங்கள் மற்றும் பரிசுத்த சபைக் கூடுதலைக் குறித்த எல்லாவற்றையும் அவர் நமக்குச் சொல்லும்போது, நாம் வேறு என்ன கேட்போம், ஞாயிற்றுக்கிழமை நமக்கு என்ன வெளிப்படுத்தப்படும்?

இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து நம்முடைய சிந்தனைகளை நாம் மூடிட முடியுமா? நம்முடைய புதிய வீடு எப்படி இருக்கும் என்பதை குறித்து தேவன் நமக்கு சொல்லும்படியாக அவர் தம்முடைய மணவாட்டியை உலகம் முழுவதிலுமிருந்து கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவர் நமக்குச் சொல்லப் போகிறார். என்னே ஒரு மகிமையான நேரத்தை நாம் உடையவர்களாக இருப்போம்.

மறுபுறம், நம்முடைய யுத்தங்கள் ஒருபோதும் கடினமாக இருந்ததில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தான் நம்மைத் தாக்குகிறான். அவனுடைய தாக்குதல்கள் ஒருபோதும் இலகுவாகவோ அல்லது விலகிப் போவதாகவோ தெரியவில்லை.

ஆனால் தேவனுக்கு மகிமை, அவருடைய வார்த்தையில் நம்முடைய விசுவாசம் இதற்குமேல் ஒருபோதும் உயர்ந்ததில்லை. நாம் அசைக்கப்பட முடியாதபடி, நாம் யார் என்பதை அறிவதில் உள்ள நம்முடைய விசுவாசம் நம்முடைய ஆத்துமாவில் ஆழமாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

நாம் பயப்பட ஒன்றுமில்லை; அதைக் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. பிதாவானவரே நம்மை குறித்த முழுப் பொறுப்பாயிருக்கிறார். அவர் நம்முடைய ஒவ்வொரு அடிச்சுவடுகளையும் வழிநடத்தி வழிகாட்டுகிறார். அவர் நம்மை அவருடைய உள்ளங்கையில் தாங்குகிறார். பொய்யுரைத்து ஏமாற்றும் சாத்தானுடைய முடிவு சமீபித்துவிட்டது, அவனும் அதை அறிந்திருக்கிறான். பயப்படுகிற ஒருவன் அவனே, அவன் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை மணவாட்டியிடம் தொடர்பு கொண்டிருப்பதையும், அவன் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்படுகிறதையும் அவன் அறிந்திருக்கிறான்.

நாம் வார்த்தையாயிருக்கிறோம். நாம் ஆதியிலிருந்து அவருக்குள் இருந்தோம். நாம் என்றோ ஒரு நாள் இருக்கப் போகிறோம் என்று அல்ல, நாம் இப்பொழுதே அவ்வாறு இருக்கிறோம். நாம் வார்த்தையாக இருந்தால், நாம் விசுவாசித்தால் மாத்திரமே, அப்பொழுதே நாம் அந்த வார்த்தையை பேச முடியும்,...நாம் விசுவாசிக்கிறோமே.

நீங்கள் (வார்த்தைக்கு) ஒரு விசுவாசியாய் அல்லது நீங்கள் (வார்த்தை அல்ல) என்று சந்தேகப்படுபவராய் இருக்கிறீர்கள். ஒரு வார்த்தையை அவிசுவாசிக்கிற ஒரு தசைநாரும் நம்முடைய சரீரத்தில் இல்லை. அங்கு தான் காரியமே உள்ளது! நாம் வார்த்தையாய் இருக்கிறோம் என்பதை சாத்தானுக்கு நாம் நிரூபித்துவிட்டோம். நாம் பாதத்தின் அடிபாகத் தோலாயிருக்கலாம், ஆனால் நாம் இன்னமும் அந்த சரீரத்தின் பாகமாய் இருக்கிறோமே!!!

ஆகையால் அந்தப் பொய்யன் நம்மில் ஒருவருக்குப் பின் வரும்போது, மணவாட்டி உலகம் முழுவதிலுமிருந்து ஒன்றாகக் கூடி வந்து, நாம் அவனை வார்த்தையினால் அடிக்கிறோம், அவனை அடிக்கிறோம்.

நம்மில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டால், நாம் ஒன்றுபட்டு அவனை அடிக்கிறோமே! நம்மில் ஒருவர் திடனற்றுப்போகும் நிலையை அடைந்தால், நாம் அனைவரும் என்ன செய்கிறோம்? அவனை அடிக்கிறோமே!

மணவாட்டியே, நாம் பரம வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறோம். வேளையானது வந்துவிட்டது. மணவாட்டித் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நாம் பேழைக்குள் இருக்கிறோம். அவர் வாசலை மூடிவிட்டபடியால், நாம் பாதுகாப்பாக உள்ளே இருக்கிறோம். மணவாளனுடன் இணைக்கப்பட மணவாட்டி நடைப் பிரகாரத்தில் நடந்து வருவதற்கான இசையை நம்மால் கேட்க முடிகிறது.

நாம் 1000 வருடங்களாக நம்முடைய தேனிலவில் இருப்போம், அதன்பிறகு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வருங்கால வீட்டிற்கு அவரோடு செல்வோம்.

நண்பர்களே, இதை தவறவிடாதீர்கள். ஒலிநாடாக்களே: தேவனால் அருளப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிற ஒரே வழியாக மாத்திரமே உள்ளது. இது அக்கினி ஸ்தம்பம் அவருடைய மணவாட்டியினிடத்தில் பேசிக்கொண்டும், வழிநடத்திக் கொண்டுமிருக்கிறதாயுமுள்ளது.

நீங்கள் என்ன செய்தாலும், இந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சத்தத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன்பாக வைக்கவும். விசுவாசம் கேட்பதன் மூலமும், வார்த்தையைக் கேட்பதன் மூலமும் வருகிறது, வார்த்தை தீர்க்கதரிசியிடம் வருகிறது. ஒலிநாடாக்களின் மூலமாக தம்முடைய மணவாட்டியினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற நம்முடைய நாளுக்கான தீர்க்கதரிசியே பரிசுத்த ஆவியாக இருக்கிறார்.

பரலோக மணவாளன் மற்றும் பூலோக மணவாட்டியின் வருங்கால வீடு 64-0802 என்பதைக் குறித்து எல்லாவற்றையும் தேவன் தம்முடைய வல்லமையான தூதன் மூலமாக பேசி நமக்கு சொல்லவிருக்கிற படியால், மணவாட்டியின் ஒரு பாகமாக ஒன்றிணைக்கப்பட்டு, எல்லோரும் ஒரே நேரத்தில், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் சேர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

 

சனி, 6 ஏப்ரல், 2024

அன்புள்ள ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து பருகுபவர்களே,

கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள மிக முக்கியமான ஈஸ்டர் வார இறுதிக்குப் பிறகு மணவாட்டி ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டாள். நாம் அவரோடு உள்ளே அடைத்துக்கொண்டு, ஐக்கியங்கொண்டு, வார இறுதி முழுவதும் அவரை ஆராதித்தோம். அவருடைய பிரசன்னம் நம்முடைய வீடுகளையும் நம்முடைய சபைகளையும் நிரப்பியது.

நாம் இவ்வளவு மகத்தான எதிர்பார்ப்புகளில் இருந்தோம். இது நமக்கான தேவனுடைய சித்தமாயிருந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம். தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். நாம் உலகத்தையும் அதனுடைய எல்லா கவனச்சிதறல்களையும் மூடிவிட்டோம். நாம் உலகம் முழுவதிலுமிருந்து ஒருமனதாக ஒன்றுபட்டோம். நாம் உன்னதங்களிலே ஒன்றுசேர்ந்து உட்கார்ந்து கொண்டு, அவர் வழியில் நம்மோடு பேசும்படியாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.

நம்முடைய இருதயங்கள், “கர்த்தாவே, என்னை இன்னும் அதிகமாக உம்மைப் போலாக்கும். உம்முடைய அதி சீக்கிர வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்தும். எனக்கு அதிகமான வெளிப்பாட்டைத் தாரும். உம்முடைய பரிசுத்த ஆவியானது என்னுடைய சரீரத்தின் ஒவ்வொரு தசைநார்களையும் நிரப்புவதாக,” என்று கதறிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு ஆராதனையும் துவங்கும்போது, நாம் நமக்குள்ளே, “அது எப்படி இருக்கும்? என் வாழ்நாள் முழுவதும் இந்த செய்திகளை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் நான் அவைகளை முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது போல, இப்போது அவை அனைத்தும் புதிதாகத் தோன்றுகின்றன” என்று கூறிக்கொண்டோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நம் இருதயங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஆழ்ந்த வெளிப்பாடு நம்முடைய இருதயங்களுக்குள்ளாக மீண்டும் வருகிறது...அது அவரே...அவர்தான். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மிடம் நேரடியாகப் பேசுகிறார்.

நான் அல்ல! அவரே! அந்த ஒருவர் அவரே! நான் சற்றுமுன் உங்களுக்குக் கூறினேன், அவர் என்னுடைய சரீரத்தை எடுத்துக் கொண்டார். அவர் என்னுடைய நாவை எடுத்துக்கொள்கிறார், என்னுடைய கண்களை எடுத்துக்கொள்கிறார், ஏனென்றால் நான் அதை அவரிடத்தில் சமர்ப்பிப்பேன் என்று அவர் அறிந்திருந்தார், எனவே அவர் வந்து, நான் அதைச் செய்யும்படிச் செய்தார். எனவே அது நானல்லவே! அது அவராயுள்ளதே! அங்கே உங்களோடிருப்பது நானல்ல, அங்கே உங்களோடிருப்பது அவராகும். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். ஓ, தேவனே, தேவனே; அதை விசுவாசியுங்கள். ஓ, ஜனங்களே; அவரை விசுவாசியுங்கள். அவரை விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார்.

இன்றைக்கு நிமிடத்தில் பேசிக் கொண்டிருக்கிற தேவனுடைய சத்தமாக ஒலிநடாக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும்படியான வெளிப்பாட்டை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். அவைகள் அவருடைய வார்த்தைகள், அவருடைய சத்தம்…நித்திய ஜீவனின் வார்த்தைகளை அவர் நம்மிடத்தில் பேசுவதற்கு நாம் செவி கொடுக்கும்படியாக அவருடைய சத்தம் பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டது. அவைகள் அவருடைய மணவாட்டிக்கான அவருடைய அருளப்பட்ட வழியாயிருக்கின்றன.

இது புதிய, சுத்தமான, பொங்கி பொங்கி வழிகிற ஆர்ட்டீசியன் ஊற்றாயுள்ளது. நாம் எவ்வளவு அதிகமாகப் பருகினோமோ, அவ்வளவு அதிகமாக,, “இன்னும் அதிகமாக கர்த்தாவே, இன்னும் அதிகமாக. கர்த்தாவே என் பாத்திரத்தை நிரப்பும், கர்த்தாவே அதை நிரப்பும்” என்று கதறினோம். அவர் நிரப்பினாரே! நாம் அதிகமாக பருக, அவர் நமக்கு அதிகமாகவே தருகிறார்.

ஆகையால் சாத்தான் சுவிசேஷத்தின் வல்லமையால் தோற்கடிக்கப்பட்டான் என்று அறிவிக்கப்பட்டான். நமக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பரலோகத்தின் தேவனால் நியமிக்கப்பட்ட தம்முடைய தூதனை அனுப்பினார். வார்த்தையை எழுதின தேவனால் அனுப்பப்பட்ட அவருடைய தூதன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த அப்பொழுது இருந்தார். "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஜனங்களே வெளியே வாருங்கள்".

பிசாசு ஒவ்வொரு சுகவீனமான நபரையும், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரையும் விட்டுச் செல்ல வேண்டியதாயிருந்தது. இப்போது தேவனுடைய வல்லமை நம்மை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பெலத்திற்கும் உயர்த்தியுள்ளது.

ஆகையால், நாம் நம்முடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து கூறினோம்:

“நான் இப்பொழுதே அந்த இயேசு கிறிஸ்துவை, உயிர்த்தெழுந்த தேவ குமாரனாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் என்னுடைய இரட்சகராயிருக்கிறார், அவர் என்னுடைய இராஜாவாக இருக்கிறார், அவர் என்னுடைய சுகமளிப்பவராக இருக்கிறார். நான் இப்பொழுதே குணமாக்கப்பட்டிருக்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனக்காக மரித்த அவருக்காக நான் ஜீவிப்பேன். எனக்காக உயிர்த்தெழுந்த அவருக்காக என்னால் மிகச் சிறந்த முறையில்…பணியாற்றும்படி புறப்பட்டுப்போக புதிதான ஜீவனோடு இங்கிருந்து நான் எழும்புவேன். அல்லேலூயா!”

இது நாம் அனுதினமும் பருகுகிற ஆர்ட்டீசியன் தண்ணீராயுள்ளது. இது மாத்திரமே எல்லா நேரத்திலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிற பரலோகத்திலிருந்து நேரடியாக வரும் ஊற்றாகும். இது தனக்குத் தானே நிரப்பிக் கொள்கிறது. எப்போதும் புதியதாகவும் சுத்தமாகவும் இருக்கும். அது ஒருபோதும் தேக்கமடையாது. இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிற ஜீவனுள்ள தண்ணீராய், எல்லா நேரத்திலும் மணவாட்டிக்கு புதியதான ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகிறது.

அது எப்போதுமே ஒரு பொங்கி வழிதலாய் இருந்து வருகிறது. நாம் அதை அடித்து மேலிழுக்கவோ, அதை சுற்றவோ, அதை முறுக்கவோ அல்லது இணைக்கவோ தேவையில்லை. இது தேவனுடைய ஊற்றின் ஜீவ தண்ணீராய் இருக்கிறது, வேறு எதையும் பருகுவதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.

இன்றைக்கு நாம், “எங்களுடைய தண்ணீர் நீங்கள் குடிக்கக்கூடிய மிகச் சிறந்த தண்ணீராயுள்ளது. நாங்கள் அதை எங்களுடைய 7 படிநிலையில் வடிகட்டும் செயல்முறை மூலம் பயன்படுத்தியுள்ளோம். அதன்பின்னர் நீரேற்றத்தில் உங்களுக்கு தேவைப்படுகிறது என்று நாங்கள் நினைக்கிற தண்ணீரில் நாங்கள் வடிகட்டிய அனைத்து தாதுக்களையும் மீண்டும் சேர்த்துள்ளோம்” என்பதை கேட்கிறோம்.

தேவனுக்கு மகிமை, நாம் எதைப் பருகிக் கொண்டிருக்கிறோம் அல்லது எதைச் சேர்த்திருக்கிறோம் அல்லது வடிகட்டியிருக்கிறோம் என்ற ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்யவோ அல்லது கேள்வி கேட்கவோத் தேவையில்லை. நமக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும் நம்முடைய தண்ணீரில் உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயங்கு பொத்தானை அழுத்த, அது பீறிட்டு வருகிறபோது பருக வேண்டும் என்பதேயாகும்.

இந்தத் தண்ணீரைப் பருகுவது என்னே ஒரு ஆறுதல். அதிலிருந்து பருகுவதற்கு நாம் அநேக மைல்கள் வெளியே செல்வோம், ஆனால் நாம் இதற்கு அவ்வாறு செல்ல வேண்டியதில்லை. நாம் எங்கு சென்றாலும் அதை எடுத்துச் செல்கிறோம். நம்முடைய வீடுகளில், நம்முடைய சபைகளில், பணியில், நம்முடைய கார்களை ஓட்டும்போதும், ஒரு நடைபயிற்சியை செய்யும்போதுமே…நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம், நாம் பருகுகிறோம்.

ஓ உலகமே, தேவன் அருளியிருக்கிற ஊற்றிலிருந்து பருகு வாருங்கள். இந்த ஒரு இடம் மாத்திரமே, “நான் பருகக்கூடாத எந்த காரியத்தையும் நான் பருகாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் என்னை பாதுகாத்துக் கொள்வார் என்று நான் ஜெபிக்கிறேன்” என்று நீங்கள் கவலைப்பட்டுக் கூற வேண்டியிராததாயுள்ளது. இது முழுவதுமே பரலோக ஊற்றுகளிலிருந்து பாய்கிற சுத்தமான ரூபரகாரப்படுத்தப்பட்ட வார்த்தையாய் உள்ளது.

அவனுடைய மணவாட்டி பருகுவதற்கு வேறு இடமில்லையே!

வெடிப்புள்ள தொட்டிகள் 64-0726E என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடைய ஆர்ட்டீசியன் ஊற்றிலிருந்து எங்களுடன் பருக வாருங்கள்.

சகோ. ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவசனங்கள்:

சங்கீதம் 36:9
எரேமியா 2:12-13
பரி. யோவான் 3:16
வெளிப்படுத்தின விசேஷம் 13 வது அதிகாரம்

 

 

ஞாயிறு, 31 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் (ஆங்கிலத்தில்) ஒலிக்கும்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 


சனி, 30 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்லறையிலிடுதல் 57-0420 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 


தொடர்புடைய சேவைகள்
வெள்ளி, 29 மார்ச், 2024

அன்புள்ள மணவாட்டியே, இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி, கல்வாரியில் அந்த நாள் 60-0925 என்ற செய்தியைக் கேட்போமாக. இது ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:30 மணிக்கு வாய்ஸ் ரேடியோவில் ஒலிக்கும், ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உங்கள் குடும்பத்தின் அட்டவணைக்கு ஏற்ற நேரத்தில் கேட்கலாம்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்