Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான மிகவும் நேசிக்கப்பட்டவர்களே,
நமக்காக ஏராளமான மகத்தான காரியங்கள் நடந்துகொண்டும், காத்துக்கொண்டும் இருக்கின்றன. தேவன் தமது வார்த்தையை ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திக்கொண்டும், அதை நிறைவேற்றிக்கொண்டுமிருக்கிறார். நாம் எப்போது மேலே செல்லப் போகிறோம் என்பதை நாம் கண்டறிந்துகொண்டு, நம்மை அதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஜெபங்கள் மற்றும் மன்றாட்டுகளின் மூலம் நாம் தேவனை நோக்கி நம் முகங்களைத் திருப்பியிருக்கிறோம், மேலும் நாம் வாழும் இந்த நேரத்தை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். காலம் முடிந்துவிட்டது; அவர் தமது மிகவும் நேசிக்கப்பட்ட மணவாட்டியான நமக்காக வருகிறார்.
ஆனால் முதலில், தேவன் தமது தூதன் மூலமாக, தம்முடைய மக்கள் அவருக்குச் செவிகொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கும்படி அவர் சத்தமிடுகிறார். “கர்த்தர் உரைக்கிறதாவது: சபை தாய்நாட்டிற்குத், இந்த நேரத்தின் செய்திக்குத் திரும்பும் வரை,தேவன் தம்முடைய சபையோடு ஈடுபட்டார். மூலத்திற்குத் திரும்புங்கள்!”
நான் அதை விரும்புகிறேன். சகோதரனே, தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு ஒரு தீர்க்கதரிசி எழுந்து நின்று, சொல்வதைக் என்னால் கேட்க முடியும்போது, அதுவே அது. என்னைப் பொறுத்தவரை, அதுவே எல்லாவற்றையும் தீர்த்துவிடுகிறது. அதைக் குறித்ததெல்லாம் அதுவே.
ஆ, நாமும் கூட அதை எவ்வளவு நேசிக்கிறோம். அதுவே எங்களோடு அதை தீர்த்து வைக்கிறது. அவர் எங்களுக்குச் செய்யும்படி பயிற்றுவித்தபடியே நாங்கள் சரியாக செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில், நாங்கள் அவருடைய மூல வார்த்தையை ஒருபோதும் விட்டு விலகியதில்லை; ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்துடனேயே நாங்கள் எப்போதும் நிலைத்திருக்கிறோம், ஏனெனில், அது கர்த்தர் உரைக்கிறதாவது!!
நமக்கு பேசப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும், ஒலிநாடாக்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். நீங்கள் அவருடைய மணவாட்டி என்பதை அறிந்துகொள்வதற்கான உண்மையான அளவுகோல் அதுவே.
காலத்தின் திரைக்கு அப்பால் தீர்க்கதரிசி கண்ட அந்த ஜனக் கூட்டம் நாம்தான். “நீர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது நம்முடைய சத்தமாய் இருந்தது. நாங்கள் பரலோகத்தை நோக்கி எங்கள் கண்களைத் திருப்பி, அவருடைய வருகைக்காக ஏங்கிக்கொண்டும், ஜெபித்துக்கொண்டுமிருக்கிறோம்.
தானியேலைப் போலவே, அவர் எங்கள் ஜெபங்களைக் கேட்டு, யூதர்களுக்கும் எருசலேமுக்கும் அவர் தீர்மானித்ததை, இறுதிக்காலம் முடியும் வரை, அதாவது முழுவதையும் வெளிப்படுத்த இறங்கி வந்திருக்கிறார். அவர் தானியேலிடம், “இவ்வார்த்தைகளை புதைபொருளாக வைத்து, முடிவு காலம் மட்டும் இந்த வார்த்தைகளை முத்திரைபோடு” என்று கூறினார்.
அந்தக் கடைசி கால நாள் இப்பொழுதே வந்துவிட்டது. நாம் வந்துவிட்டோம். நாம் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிற அவருடைய மிகவும் பிரியமான மணவாட்டியாய் இருக்கிறோம். இதுவே கடைசிச் சபைக் காலம். செய்தியும் தூதனும் ஒன்றே; அவை எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்றன. இதுவரை முத்திரையிடப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் மெய்யான வெளிப்பாடு, இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் அல்ல, இரண்டாம் நபர் அல்ல, மூன்றாம் நபர் அல்ல, ஆனால் தேவனுடைய நபர். தேவனுடைய மற்ற எல்லா இரகசியங்களும் வெளிப்படுத்தப்படும், ஏனெனில் அது இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவை கடைசி காலத் தலைமுறைக்கு வெளிப்படுத்தப்படும்.
சபையை எடுத்துக் கொள்ளப்படுதலுக்கும், வீட்டிற்குச் செல்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்காக, தேவனுடைய வார்த்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தப்படுகிறது!! சபை ஒலிநாடாக்களுக்குத் திரும்ப வேண்டும். தாய்நாட்டிற்கு, தொடக்கத்திற்குத் திரும்புங்கள். இந்த நேரத்தின் செய்திக்குத் திரும்புங்கள், உங்களை அழைத்த மூல சத்தத்திற்குத் திரும்புங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்குத் திரும்புங்கள்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, உங்கள் போதகரிடம், “இன்று நாம் தேவனுடைய மூல சத்தத்தைக் கேட்போமாக. தேவன் தாமே பேசத் தேர்ந்தெடுத்த சத்தம். அவர் வரும்போது கர்த்தராகிய இயேசுவை நமக்கு அறிமுகப்படுத்தும் சத்தம். நான் உங்களுக்கு தேவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று தேவன் தாமே கூறின ஒரே சத்தம்” என்று சொல்லுங்கள்.
அந்த சத்தத்தை விட மகத்தான ஒரு சத்தம் இருக்க முடியாது. அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் அனைவரும் ஆமென் என்று சொல்லக்கூடிய ஒரு சத்தம்.
தேவன் பேசும்போதும், அவருடைய வருகையின் சரியான நேரத்தை வெளிப்படுத்தும்போதும், உலகெங்கிலும் உள்ள மணவாட்டியின் ஒரு பகுதியினருடன் நீங்களும் இணைந்துகொள்ள வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் இதுவரை கேட்டிராத மாபெரும் அபிஷேகமாக அது இருக்கும்.
61-0730E - “தானியேலைச் சந்தித்த காபிரியேலின் ஆறுவகை நோக்கங்கள்” என்ற செய்தியை ஜெஃபர்சன்வில் நேரப்படி, பிற்பகல் 12:00 மணிக்கு, நாம் கேட்கும்படிக்கு கூடுவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்