
அன்பான உண்மையும் ஜீவனுமுள்ள மணவாட்டியே,
வார்த்தையாகிய இயேசுதாமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு வந்தபோது, அவர் வருவதாகக் கூறியபடியே, ஒரு தீர்க்கதரிசியாக வந்தார். அவர் மீண்டும் வருவதற்கு முன்பு, இயேசு கிறிஸ்து என்ற நபரின் முழு வெளிப்படுத்துதலும் ஒரு தீர்க்கதரிசியில் மீண்டும் மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் என்று அவருடைய வார்த்தை அறிவிக்கிறது. அந்த தீர்க்கதரிசி வந்திருக்கிறார், அவருடைய பெயர் வில்லியம் மரியன் பிரான்ஹாம்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்ததம் நேரடியாக அவர்களிடம் பேசுவதைக் கேட்பது தேவனுடைய பரிபூரண சித்தம் அல்ல என்பதை எப்படி எவரேனும் அடையாளங்கண்டு கொள்ள முடியாது? வார்த்தை எப்போதும் அவருடைய தீர்க்கதரிசிக்கு வருகிறது என்பதை நாம் அறிவோம்; அது வேறு வழியில் வர முடியாது. அது குறித்து தேவன் நமக்கு முன்னறிவித்த அவருடைய வழித் தடத்தின் வழியாக வர வேண்டும். அதுவே எப்போதும் வரும் ஒரே வழி. தேவன் அதைச் செய்வேன் என்று வாக்குபண்ணின வழியில் அசைவாடுகிறார். அவர் எப்போதும் செய்த அதே விதத்தில் செய்ய அவர் ஒருபோதும் தவறுவதில்லை.
அவர்கள் யாவரும் ஒன்றையே புசித்தனர், அவர்கள் யாவரும் ஆவியிலே நடனமாடினார்கள், அவர்கள் யாவரும் சகலத்தையும் பொதுவாக வைத்திருந்தார்கள்; ஆனால் பிரித்தெடுக்கும் நேரம் வந்த போது, வார்த்தையானது பிரித்தெடுத்தலைச் செய்தது. அது இன்றைக்கும் அவ்விதமாகவே இருக்கிறது! வார்த்தையானது பிரித்தெடுத்தலைச் செய்தது! நேரமானது வந்த போது...
இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிற அந்த நேரத்தை நாம் காண்கிறோம், வார்த்தையானது வேறு பிரித்துக் கொண்டிருக்கிறது. "இன்றைக்கு மணவாட்டியை வழிநடத்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர் என்று தேவன் அழைத்த மற்றவர் இருக்கிறார்கள். வெறும் ஒலிநாடாக்களை விட உங்களுக்கு அதிகம் தேவை. இன்றைக்கு சபையை வழிநடத்த தேவன் மனிதர்களை வைத்திருக்கிறார்" என்று அவர்கள் கூறும்போது, மணவாட்டி தீர்க்கதரிசியை மிதமிஞ்சிய ஸ்தானத்தில் பொருந்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாள்.
"இந்த கூட்டத்திலேயே நீர் ஒருவர் மாத்திரம் தான் என்று நினைக்க முயற்சிக்கிறீர். சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்!” தேவன் அதைப் போல ஒரு போதும் இடைப்பட்டது கிடையாது. அவனுக்கு அதைக் காட்டிலும் இன்னும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவன், “சரி. சபையார் எல்லாரும் பரிசுத்தமுள்ளவர்கள். நீ உன்னையே...முயற்சிககிறாய்.” இப்போது இதை நாம் இன்றைக்கு வீதிப் பேச்சு வழக்கில் வெளிப்பபடுத்துவோமானால்,, “கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்,”.என்பதாகும்.
மேலும் தேவன் மோசேயை அங்கே அதற்காகத்தான் அனுப்பினார் என்று அவன் அறிந்திருந்தான்.
தேவன் தம்முடைய மணவாட்டியை வழிநடத்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர்களை; அவர்களை கர்த்தர் உரைக்கிறதாவது, தீர்க்கதரிசி செய்தியாரிடம் வழிநடத்தும்படிக்கு உடையவராயிருக்கிறார். செய்தியும் செய்தியாளரும் ஒன்றே. அது தேவன் இன்றைக்கான அருளப்பட்ட வழியை, எப்பொழுதுமே ஒருபோதும் மாற்றுகிறதில்லை என்பதாயுள்ளது.
ஏனென்றால் அவர்கள் ஒரு தவறுக்கு செவிகொடுத்தார்கள். மோசே, தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டவனும், மேலும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழியைக் காண்பிக்கும் தலைவனுமாக இருந்தபோது. அவர்கள் இதுவரையிலும் நல்லவிதமாக வந்திருக்கிறார்கள், ஆனாலும் அப்போது அவர்கள் அவனுடன் ஒத்துப்போகமாட்டோம் என்றார்கள்…இப்போது, விசுவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அவிசுவாசிகளால் அந்த ரூபகாரப்படுத்தப்பட்டதைப் புரிந்துக் கொள்ள முடியாது.
இன்றைய இந்த மகத்தான கடைசிக் கால வெளிப்பாட்டைப் பெற நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டீர்கள் என்பது மாத்திரமல்ல, ஆனால் தேவன், தம்முடைய சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமான ஒலிநாடாக்கள் மூலம், தம்முடைய இனிய இருதயமான மணவாட்டியிடம் மறைப்ப்பொருளில் பேசுகிறார்.
அப்படியானால், நீ ஒரு தேவனுடைய குமாரனாகவோ அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்தால், நீ எல்லா சமயமும் தேவனுக்குள் இருந்தாய். ஆனால், நீ எந்த படுக்கையில், எந்த நேரத்தில் விதைக்கப்படுவாய் என்று அவர் அறிந்திருந்தார். ஆகையால் இந்த மணி நேரத்தில் வந்து கொண்டிருக்கிற செய்திக்கு, இந்த மணி நேரத்தின் உண்மையுள்ளவரும் ஜீவிக்கிறவருமான தேவனை ரூபகாரப்படுத்தும்படிக்கு இந்த மணி நேரத்திற்கான சவாலை சந்திக்கும்படியான, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனாய் அல்லது குமாரத்தியாய், ஒரு தேவனுடைய குமாரனாய், ஒரு சிருஷ்டியாக நீ இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கிறாய். அது உண்மை! நீ உலகத் தோற்றத்திற்கு முன்னே தெரிந்துகொள்ளப்பட்டாய்.
அவருடைய மணவாட்டிக்கு என்னே ஒரு மறைபொருளான அன்பின் மடல் மகிமை!!! உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் நம்மை அறிந்திருந்தார், நம்மைத் தெரிந்து கொண்டார் என்பது மட்டுமல்லாமல், இன்றைக்கான அவருடைய வெளிப்படுத்தப்பட்ட குமாரரும் குமாரத்தியுமாயிருக்கும்படிக்கு அவர் நம்மை தெரிந்து கொண்டார் என்று அவர் இங்கே நமக்கு சொல்லுகிறார். இந்த நேரத்தில் வந்து கொண்டிருக்கிற செய்தியான, இந்த நேரத்தின் உண்மையும் ஜீவனுமுள்ள தேவனை ரூபகாரப்படுத்த இந்த நேரத்தின் சவாலை நாம் சந்திப்போம் என்பதை அவர் அறிந்திருந்ததால், ஆதியில் இருந்த மற்ற எல்லா பரிசுத்தவான்களுக்கும் மேலாக, இன்று அவர் நம்மை இங்கு பூமியில் வைத்தார்.
நாம் தேவனுக்குள், ஒரு மரபணுவாக, ஒரு வார்த்தையாக, ஒரு தன்மையாக, ஆதியிலிருந்தே இருந்தோம், ஆனால் இப்போது கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு, அவருடைய வார்த்தையின் மூலம், அவருடைய வார்த்தையினால் அவருடன் ஐக்கியம் கொள்கிறோம்; ஏனென்றால் நாம் அவருடைய வார்த்தை, அது நம்முடைய ஆத்துமாக்களை போஷித்துக் கொண்டிருக்கிறது.
தேவனுடைய கலப்படமற்ற வார்த்தையைத் தவிர வேறு எதையும் நம்முடைய ஜீவியத்தில் செலுத்த முடியாது, புகுத்தவும் மாட்டோம். இது இன்றைக்கான தேவன் அருளியிருக்கிற வழியாயுள்ளது என்பதை நாம் விசுவாசித்து, அடையாளம் கண்டு கொள்கிறோம்.
நீங்கள் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்களால் ஆமென் என்று கூற முடிந்த, ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தமான, ஒரே சத்தத்தை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி எங்களுடன் சேர்ந்துகொள்ள உங்களுக்காக நாங்கள் விருப்பங் கொள்கிறோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்படுகின்றன 65-1206
செய்தியைக் கேட்பதற்கு முன் படிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
ஆதியாகமம் 22
உபாகமம் 18:15
சங்கீதம் 16:10 / 22:1 / 22:18 / 22:7-8 / 35:11
ஏசாயா 7:14 / 9:6 / 35:7 / 50:6 / 53:9 / 53:12 / 40:3
ஆமோஸ் 3:7
சகரியா 11:12 / 13:7 / 14:7
மல்கியா 3:1 / 4:5-6
பரி. மத்தேயு 4:4 / 24:24 / 11:1-19
பரி. லூக்கா 17:22-30 / 24:13–27
எபிரெயர் 13:8 / 1:1
பரி. யோவான் 1:1
வெளிப்படுத்தின விசேஷம் 3:14-21 / 10:7