
அன்புள்ள ராஜரீகமான ஆசாரியக்கூட்டமே,
ஒவ்வொருவரும் உணர்வடைந்து, உங்களுடைய ஆத்துமாவைத் திறந்து, உங்களுடைய இருதயத்தைப் விழித்தெழச் செய்யுங்கள். இன்றைக்கு, இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி ஆரவாரமிட்டுக் கொண்டிருக்கிறாள்:
இந்த நாளிலே, இந்த தீர்க்கதரிசனம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மகிமையான நாட்களில் ஒன்றில், சபையின் இந்த ஐக்கிய கூட்டமைப்பு ஒன்றுகூடி, புதிய போப் அமெரிக்காவிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, தீர்க்கதரிசனத்தின்படி அங்கு வைக்கப்படும்போது, அதன்பின்னர் அவர்கள் மிருகத்தைப் போன்ற ஒரு சொரூபத்தை உருவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
தேவனுடைய தீர்க்கதரிசியின் சத்தம் அதை டிசம்பர் 19, 1954-ல் உரைக்க, 9 மாதங்கள் கழித்து, இப்பொழுது போப் லியோ XIV என்று அழைக்கப்படும் ராபர்ட் பிரீவோஸ்ட் பிறந்தார். அவர் இப்பொழுது ரோமாபுரியின் புதிய போப் ஆவார். "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது நிறைவேறியுள்ளது.
மே 7, 1946 அன்று, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில்லில் நியமித்து, அவருக்கு தன்னுடைய கட்டளையை அளித்து, இந்த வல்லமையான ஏழாம் தூதனாகிய செய்தியாளர், உலகிற்கு என்னுடைய சத்தம் என்று உலகிற்கு அறிவிக்க வைத்தார். நீங்கள் அவருக்குச் செவிகொடுங்கள்.
எட்டு வருடங்களுக்கு முன்பு, இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில்லில், ஒரு குழந்தையாக இருந்தது முதற்கொண்டே, என்னைப் பின்தொடர்ந்த, தரிசனங்களைக் காண்பித்த, கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்தபோது, நான் அவரிடம் சென்றபோது, அவர், "நீ உத்தமமாக இருந்தால், ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், ஜெபத்திற்கு முன்னால் எதுவும் நிற்காது" என்றார்.
வில்லியம் மரியன் பிரான்ஹாம் உலகிற்கு தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சத்தமாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தை வருகிற ஒரு வல்லமையான தீர்க்கதரிசி. வார்த்தையின்படி, அவர் மாத்திரமே தேவனுடைய வார்த்தையின் தெய்வீக . வியாக்கியானியாயிருக்கிறார்.
அவர் அக்கினி ஸ்தம்பத்தால், தேவனால் தாமே ரூபகாரப்படுத்தப்பட்டார்.
மே 7, 2025 அன்று, சாத்தான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நிறைவேற்றும்படி, கிறிஸ்துவின் பிரதி குருவை தங்களுக்கு தேர்ந்தெடுக்கும்படி ரோமாபுரியில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் தன்னுடைய போப்பாண்டவரின் தேர்வு குழு உறுப்பினர்களின் கூட்டத்தை வைத்தான்.
ஒரு வெள்ளை புகையின் குமிழியுடன் மனிதனால் அவர் உறுதிப்படுத்தப்பட்டார்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் மணவாட்டி, தீர்க்கதரிசியினுடைய தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படுவதை, நம்முடைய சொந்த கண்களால் பார்க்கிறபடியால், நாம் கேட்கும்போதே, களிகூர்ந்து, கூச்சலிட்டு, ஆர்ப்பரித்து, கர்த்தரைப் ஸ்தோத்தரிக்கிறாள்.
அது நம்முடைய கண்களுக்கு முன்பாகத் திறந்திருக்கும் சிவந்த சமுத்திரத்தை பார்ப்பது போல் இருக்கிறது. வானத்திலிருந்து விழும் புதிய மன்னா. மணவாட்டிக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான காடைகள். கன்மலையிலிருந்து வருகிற தண்ணீர். அக்கினி இறங்கி எலியாவுடன் பலியை பட்சித்தல்.
தீர்க்கதரிசனம் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தம் பண்ணப்பட்ட வார்த்தை நம்முடைய ஜீவியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. நம்மைச் சுற்றி காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. வார்த்தையைக் கேட்டு விசுவாசிப்பதன் மூலம் மணவாட்டி தன்னைத் ஆயத்தப்படுத்திக் கொண்டாள். நாம் மாம்சமாக்கப்பட்ட வார்த்தையாயிருக்கிறோம்.
உண்மையிலேயே, நாம் வந்துவிட்டோம். நேரம் சமீப்த்துவிட்டது. மணவாட்டி களிகூர்ந்து, உலகம் முழுவதும் ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றுபடுகிறாள். தீர்க்கதரிசி மணவாட்டிக்கு நாம் தேவனுடைய ராஜரீக ஆசாரியக்கூட்டமாயும், ஒரு பரிசுத்த ஜாதியாயும், அழைக்கப்பட்ட,, தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட சொந்த ஜனமாயும் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்வதனால் திரும்ப உறுதியளித்துக் கொண்டிருக்கிறார்.
நாம் இப்பொழுது தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், மனிதனால் அல்ல, ஆவியினால், தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுகிறோம். சந்தேகத்தின் எந்த ஒரு நிழலுமின்றி, நாம் அவருடைய மணவாட்டியாயிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். நம்முடைய விசுவாசம் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை எட்டுகிறது. நம்மைத் தடுக்கவோ அல்லது மெதுவாக்கவோ முடியாது, தேவன் அதை நம்முடைய இருதயத்திலும் ஆத்துமாவிலும் வெளிப்படுத்தி நங்கூரமிட்டுள்ளார்.
நாம் யார் என்பதை மணவாட்டி முழுமையாக அடையாளங் கண்டு கொண்டாள். நாம் நம்முடைய ஆவிக்குரிய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில், ஒவ்வொரு காரியத்தையும் முழு உடைமையாக கொண்டிருக்கிறோம். நமக்கு பரலோக சமாதானம், பரலோக ஆசீர்வாதங்கள், பரலோக ஆவி உள்ளது. ஒவ்வொரு காரியமும் நம்முடையது. அவர் நமக்காக அடுத்து வைத்திருப்பதற்கு நாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.
கர்த்தருடைய எக்காளம் தொனிக்கும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இந்த வானத்துக்குரிய சரீரங்கள் கீழே வந்து பூமிக்குரிய, மகிமையடைந்த சரீரங்களை தரித்துக்கொள்ள, ஒரு நிமிஷத்திலே, இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். நாம் அவர்களுடன் சேர்ந்து, ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்க எடுத்துக்கொள்ளப்படுவோம்.
என்னே ஒரு நாள். என்னே ஒரு நேரம். நாம் அனைவரும் நம்முடைய ஆத்துமாக்களில் உணருவதை மனித வார்த்தைகளில் சொல்ல எனக்கு வழி இல்லை. நம்முடைய இருதயங்கள் துடிக்கின்றன. நாம் அதைச் சாத்தியமாக்கவில்லை, பரிசுத்த ஆவி நமக்குள் பொங்கி எழும் ஒரு ஆர்ட்டீசியன் ஊற்றைப் போன்றது. ஆதாமின் நாட்களிலிருந்து மணவாட்டி இந்த தருணத்திற்காகக் காத்திருக்கிறாள்... இப்பொழுது நாம் இங்கே இருக்கிறோம்.
நாங்கள் உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களை அழைக்கிறோம். நாங்கள் உங்களிடம் மன்றாடுகிறோம். புத்திர சுவிகாரம் #2 60-0518: என்ற செய்தியை நாங்கள் கேட்கப் போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், 12 மணிக்கு, ஜெபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் அவருடைய வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் கேட்கப் போகிறபடியால், உலகம் எப்போதும் அறிந்திராத மிக அற்புதமான நேரத்திற்காக எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
சகோதரன். ஜோசப் பிரான்ஹாம்
செய்திக்கு முன் படிக்க வேண்டிய வேத வசனங்கள்:
ஆதியாகமம் 1:26
எபேசியர் முதலாம் அதிகாரம்
ரோமர் 8:19
கலாத்தியர் 1:6-9
எபிரெயர் ஆறாம் அதிகாரம்
யோவான் 1:17