Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்புள்ள மணவாட்டியே,
நாம் அனைவரும் கேட்க விரும்பும் சத்தம் இந்த ஞாயிற்றுக்கிழமை பேசும், மேலும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்காக ஒரு விசேஷமான அன்பின் மடலான செய்தியைக் கொண்டுவரும்.
அந்த சத்தம் இப்பொழுது உலகத்திடம் பேசி அவர்களை எச்சரித்தது: “என் சித்தமில்லாமல் எனக்கு ஊழியம் செய்ய முயற்சிக்காதீர்கள். என் மணவாட்டியே, உனக்காக நான் ஒரு பரிபூரணமான வழியை ஏற்படுத்தியிருக்கிறேன். என் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்; என் ஒலிநாடாக்களில் நான் உரைத்துள்ளதை அப்படியே சொல்லுங்கள், ஏனெனில் நீங்கள் நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிக்கிறீர்கள். இரக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் களிகூருங்கள், நன்றியோடு இருங்கள், ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் நன்மையிலும் இரக்கத்திலும் நீங்கள் ஜீவிக்கும்படி, நான் உங்களுக்கு மறைவான ஆகாரத்தையும், ஆவிக்குரிய ஆகாரத்தையும் அளித்துக் கொடுத்திருக்கிறேன்.
என் சத்தத்தைக் கேட்பதற்கு தேசத்தில் இப்பொழுது ஒரு பஞ்சம் நிலவுகிறது. நீங்கள் ஒலிநாடாக்களில் என் சத்தத்தைக் கேட்க விரும்பும் மக்கள் என்று சொல்வதால் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்வதில்லை; ஆனால் நான் உங்களை வெளியே அழைத்து, இன்றைய தினத்திற்காக நான் ஏற்படுத்திய பரிபூரணமான வழியை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இந்த வறட்சியின்போது நீங்கள் அவிசுவாசிகளுடன் உங்களை இணைத்துக்கொள்ளவில்லை. உங்களைத் தாங்குவதற்காக என் சத்தத்தைக் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். என் சத்தத்தைக் ஒலிக்கச் செய்வதன் மூலம், நான் வந்து உங்களை என் மணவாட்டியாக அழைத்துச் செல்லும் நாள் வரை, உங்களுடைய பீப்பாய் ஒருபோதும் காலியாகாது, உங்களுடைய குவளையும் ஒருபோதும் வற்றிப்போகாது.
நீங்கள் செல்வதற்கு ஒரு பரிபூரணமான இடம் அருளப்பட்டிருக்கு வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய சத்தத்தைப் பதிவு செய்தேன். அங்கே எந்தத் தவறும் இல்லை, வியாக்கியானமும் தேவையில்லை, தேவனுடைய தூய்மையான சத்தம் மட்டுமே. நான் கூறியுள்ளதை அப்படியே கேட்க நீங்கள் செல்லக்கூடிய ஓர் இடம் அது: கர்த்தர் உரைக்கிறதாவது.
ஞாயிற்றுக்கிழமையன்று நான் உங்களிடம் மிகவும் தெளிவாகப் பேசப் போகிறேன். நான் உங்களிடம் பேசப்போவதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். இந்தக் காலத்தில் இந்த ஒலிநாடாக்கள் உங்கள் ஆவிக்குரிய ஆகாரமாகும். அவர்களில் சிலருக்கு இது மிகவும் நிறைவானது; அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் நான் உங்களைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய பரிபூரணமான அருளப்பட்ட வழியின் வெளிப்பாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
உங்களுக்கு, இது மறைக்கப்பட்ட ஆகாரம், இங்கே நீங்கள் ஜீவ வார்த்தையின் நன்மையிலும் இரக்கத்திலும் ஜீவித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
நான் என் குமாரனில் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருந்தபோது, நான் யார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை: தேவனும் மனிதனுமாக. பின்பு நான் கடைசி நாட்களில் மீண்டும் திரும்பி வந்து, ஆபிரகாமுக்கு முன்பாக ஜீவித்ததுபோல மீண்டும் மனித மாம்சத்தில் ஜீவிப்பேன் என்றும், இறங்கி வந்து அப்போது நான் செய்தது போல, மனித மாம்சத்தில் உருமேற்கொண்டு நான்தானே செயல்படுவேன் என்றும் வாக்களித்தேன்.
அவர்கள் அப்போதும் இப்போதும் தவறவிட்ட விஷயம் இதுதான், ஆனால் நீங்கள் அதை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். நான் உங்களை போஷிப்பதற்கு சேமித்து வைக்கப்பட்ட ஆகாரமும், என் செய்தியாளனும் ஒன்றே. நீங்கள் அவர்களைப் பிரிக்க முடியாது. செய்தியும் செய்தியாளனும் ஒன்றே. இந்த நாளில் நான் என்ன செய்வேன் என்று என் வார்த்தையில் உங்களுக்குச் சொன்னேன். அதனால்தான், உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும், நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் என் சத்தத்தை வைப்பது என் சித்தமாகும்; ஏனெனில் நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சத்தம் அதுவே. இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேசும் ஒரே ரூபகாரப்படுத்தப்பட்ட சுத்தமாகும்.
இரக்கம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது என் வார்த்தையின் பேரில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் யார், நீங்கள் யார் என்பதற்கான வெளிப்பாட்டை நான் உங்களுக்குக் கொடுத்துள்ளேன். உங்கள் இருதயங்களிலும் சிந்தனைகளிலும் ஒரு சிறு சந்தேகத்தின் நிழல்கூட இருக்கக்கூடாது. நீங்கள் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட மணவாட்டியாவீர்கள். நீங்கள் ஆதியிலே என்னில் இருந்த என்னுடைய உரைக்கப்பட்ட வார்த்தை.
நீங்கள் ஆகாரத்தை, ஆவிக்குரிய ஆகாரத்தை அணுக வேண்டும், உலகம் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. நீங்கள் மருத்துவர்கள் கைவிட்டபோதும், நம்முடைய சரீரங்களின் குணமாக்குதலை நாம் அணுகுவோம்; இது கடைசி நாட்களில் நான் உங்களுக்கு வாக்களித்து, கொடுத்த ஆகாரங்களில் ஒன்றாகும்.
உங்கள் இருதயங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தி, இந்தக் காரியங்களைச் செய்வதாக நான் வாக்களித்தேன். நான் உங்களுக்குள் இருக்கிறேன். நீங்கள் என்னில் ஒரு பாகமாய் இருக்கிறீர்கள், நான் உங்களில் ஒரு பாகமாய் இருக்கிறேன். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, உலகெங்கிலும் உள்ள என் மணவாட்டியை என் சத்தத்தால் நான் ஒன்றிணைப்பேன். ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்கும்படி நான் உங்களுக்குச் சொல்வேன். உங்களுக்காக ஜெபிக்காதீர்கள், உங்களுடைய கைகளை வைத்துள்ளவருக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றாக ஜெபிப்போம், நீங்கள் விசுவாசித்தால், உலகில் எங்கும் ஒரு பலவீனமான நபர் கூட இருக்க மாட்டார்.
நீங்கள் விசுவாசித்து, உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்தால், நான் அறிவிப்பேன்:
சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டுவிட்டாய்! இயேசு கிறிஸ்து உன்னைத் தோற்கடித்துவிட்டார்! அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து, இன்றிரவு எங்கள் மத்தியில் நின்றுகொண்டு, இந்தக் கடைசி நாளின் செய்தியை ரூபகாரப்படுத்துகிறார். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்களை விட்டு போ! “என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்,” நீ துரத்தப்பட்டுவிட்டாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த சபையாரை விட்டு போ!
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் ஒரு சுகமளித்தல் உண்டாகும்.
நாம் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும், என்னுடைய அருமை சகோதரனே, சகோதரியே, அது இங்கே இருக்கிறது, நாம் பேசியிருக்கிற அதே காரியம், பரிசுத்த ஆவி, தேவன், இங்கேயே இருக்கிறார்.
அவருடைய செய்தியாளர் எங்களுக்கு கொண்டு வருகிற மணவாட்டிக்காக மறைக்கப்பட்ட, ஆகாரமான ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரமான செய்தியைக் கேட்கப்போகிறபடியால், இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் உலகை அழைக்கிறேன்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம் 65-0718E
செய்தியாளர்: சங்கை. வில்லியம் மாரியன் பிரான்ஹாம்
வேதவசனங்கள்: 1 இராஜாக்கள் 17:1-7 / ஆமோஸ் 3:7 / யோவேல் 2:28
மல்கியா 4:4 / லூக்கா 17:30 / பரி.யோவான் 14:12