ஞாயிறு
19 ஏப்ரல் 2026
65-0429E
மணவாட்டியைத் தெரிந்துக் கொள்ளுதல்
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியே,

மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல் என்ற இந்தச் செய்தியை நாம் கேட்கும்போது, ஒருவன் தனக்கு மனைவியாக இருக்க விரும்பும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது, அவளிடம் காண வேண்டிய குணநலன்களையும் தகுதிகளையும் பற்றி தீர்க்கதரிசி வெறுமனே பேசி நமக்கு அறிவுறுத்துகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். அது உண்மைதான், அவர் அப்படித்தான் செய்கிறார், ஆனால் அவருடைய வார்த்தைகளில் ஒரு உண்மையான மறைக்கப்பட்ட அன்பின் மடல் இருக்கிறது. அவர் தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அதைவிட மிகவும் ஆழமானது. தேவன் அவளிடம் நேரடியாகப் பேசிக் கொண்டும், அவளிடம் அவர் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்றும், ஏன் ஆரம்பத்திலிருந்தே அவளைத் தெரிந்து கொண்டார் என்றும் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அவளைத் தம்முடைய அன்பான, இனிமையான மணவாட்டியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை அவள் அறிய வேண்டும் என்று அவர் விரும்பினார், அவளுடன் தம்முடைய நித்தியத்தைப் பகிர்ந்துகொள்ளவும் அவர் விரும்பினார்.

ஆதியிலே, தேவன் தம்முடைய அதே குணநலன்களைக் கொண்ட ஒரு மணவாட்டியைத் தேடிக்கொண்டிருந்தார். தம்முடைய அதே ஆவி அவளுக்குள் வெளிப்பட வேண்டும். தம்முடைய சிந்தையே அவளுக்குள் இருக்கும் வரை, தமக்கும் தம்முடைய வாக்குத்தத்த வார்த்தைக்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மணவாட்டியை அவர் விரும்பினார். அவரைப் போலவே அவளும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அவள் அவருடைய அதே மாம்சமும், அதே எலும்புகளும், அதே ஆவியும், ஒவ்வொரு காரியமும் அதே விதமாகவே, அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் இருவரும் ஒன்றாவார்கள்.

அவள் கண்களில் எந்த வெறித்தனமான பார்வையும் கொண்டிருக்க மாட்டாள். அவள் வேறு எந்தச் சத்தத்துடனும் சரசமாடமாட்டாள். யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவள் அவருக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பாள். அவள் அவருடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வாள். அவர் என்ன சொன்னாலும், அது நிறைவேற எவ்வளவு காலம் எடுத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவள் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பாள். அவள் அதை விசுவாசிப்பாள். அவள் அவருடைய வார்த்தையோடு தரித்திருப்பாள்.

அவள் அவரை, அவரை மட்டுமே நேசிப்பாள். அவர் அவளுக்குப் மகத்தான ஐஸ்வரியங்களை கொடுத்திருக்க வேண்டியதில்லை, அவளிடம் விலையுயர்ந்த முத்து, அதாவது அவரைப் பற்றிய உண்மையான வெளிப்பாடு இருந்தது. அவர்கள் இருவரும் ஒன்றே என்பதை அவள் அறிவாள். அவருடைய ஆவி அவளுக்குள் வாசம் செய்யும். அவளுக்கு என்ன தேவையோ, அதை அவர் அவளுக்குக் கொடுப்பார்; அவள் செய்ய வேண்டியதெல்லாம் கேட்டு விசுவாசிப்பது தான், அவர் அதைச் செய்வார்.

அவள் விரும்பும் விதத்திலும், அவள் ரசனைக்கேற்பவும் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வீட்டை அவளுக்காகக் கட்டுவதற்கு அவர் நீண்ட காலமாக சென்றிருப்பார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் விரும்பும் விதத்திலேயே அவர் அதைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் வாக்களித்தபடியே, ஒரு நாள் அவளுக்காகத் திரும்பி வருவார் என்றும், அப்போது அவர்கள் ஆயிர வருடங்களுக்கான ஒரு மகத்தான கலியாண விருந்தை உடையவர்களாயிருப்பார்கள் என்றும் அவள் அறிந்திருந்தாள். பின்னர், நித்தியத்தைக் கழிப்பதற்காக அவர் அவளுக்காகக் கட்டிய அந்த அழகான இல்லத்திற்கு அவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.

வேறு எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. அவள் வேறு எதையும் விரும்பமாட்டாள். அவர் யார், அவள் யார் என்பதை அறிந்த அந்த வெளிப்பாட்டைப் பெற்றதில் அவள் மிகுந்த திருப்தியும் மனநிறைவும் அடைவாள். அவர் தமது வார்த்தையைக் காத்துக் கொள்வார் என்பதை அவள் அறிவாள். அவர் தம்முடைய மணவாட்டியாக இருக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்ட ஒருவள் அவள்தான் என்பதை அறிந்து அவள் நிறைவடைவாள்.

என்னுடைய சகோதர சகோதரிகளே, நித்தியத்தினூடாக நோக்கிப் பார்க்கும் வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய சர்வவல்லமையுள்ளவர் நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட இனிய மணவாட்டியாக இருக்க வேண்டுமென்றுஅவர் உங்களைத் தெரிந்து கொண்டுள்ளார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை, தம்முடைய பலமுள்ள தூதன் மூலமாக அவர் பேசி, நாம் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியாய் இருக்கிறோம் என்று நமக்குச் சொல்லும்போது, என்னுடனும் அவருடைய மணவாட்டியின் ஒரு பகுதியினருடனும் வந்து சேர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கிறேன்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 65-0429E / மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதல்

நேரம்: பிற்பகல் 12:00 மணி. ஜெஃபர்சன்வில் நேரம்

 

வேதவசனங்கள்:

ஆதியாகமம் 24:12-14
ஏசாயா 53:2
வெளிப்படுத்தின விசேஷம் 21:9