Sun Apr 26, 2020 10:00 AM EDT
அன்பான கிறிஸ்துவினுடைய சிறிய கன்னிகையே, வார்த்தையே, மந்தையே, மணவாட்டியே:
நாம் தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்து என்றும், அவருடைய சத்தத்தைப் பின்பற்றுவதைத் தவிர நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாது என்றும் அவருடைய பலமுள்ள தூதன் பிரகடனம் செய்ததைக் கேட்டபோது நம்முடைய இருதயங்கள் எவ்வளவு களிகூர்ந்தன! அது நம்முடைய ஜீவனைப் பார்க்கிலும் மேலானது. நீங்கள் எங்கள் ஜீவனை எடுக்கலாம், ஆனால் அவருடைய சத்தத்தை உங்களால் எடுக்க முடியாது. நாங்கள் அவருடைய வார்த்தையோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவருடைய சத்தத்தோடு ஒன்றாய் இருக்கிறோம். நாங்கள் அவரோடு ஒன்றாய் இருக்கிறோம்.
ஒலிநாடாக்களை ஒலிக்கச் செய்வதை நாங்கள் நம்புகிறோம் என்றும், அது தேவனுடைய மணவாட்டியிடம் பேசும் அவருடைய சத்தம் என்றும் நாங்கள் கூறுவதால், நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கேலி செய்யப்படுவது எங்களுக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறது. நாங்கள் ஒரு ஒலிநாடா சபை என்று பிரகடனம் செய்வதால், அது வார்த்தைக்கு முரணானது, தவறானது, நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்று மக்கள் நினைக்கும்படி சாத்தான் அவர்களை வஞ்சித்திருக்கிறான். ஆனால் உண்மையில், அது தேவனுடைய மணவாட்டிக்காக அவர் வழங்கிய பரிபூரணமான வழியாகும்.
இது வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? உரைக்கப்பட்ட ஒரு வார்த்தையை நீங்கள் தவறாகப் வியாக்கியானித்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். அவர்கள் சரியான நோக்கத்தையும் குறிக்கோளையும் கொண்டிருக்கலாம், ஆனால் தவறாக இருக்கலாம். ஒருவர் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும் கூட தவறாக இருக்க முடியும்.
தம்முடைய மணவாட்டியின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களே நேரடியாகக் கேட்கும்படி தேவன் ஒரு வழியை ஏற்படுத்தியிருக்காவிட்டால், வேறு ஒரு வழி இருந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும், வியாக்கியானம், தெளிவுரை அல்லது விளக்கம் தேவையின்றி, வார்த்தை நேரடியாகத் தங்களிடம் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பைப் பெற அவர் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். எல்லாமே கர்த்தர் உரைக்கிறதாவது...அவ்வளவுதான்!
அவருடைய மணவாட்டியாக இருக்க நாம் வார்த்தையுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்.
நமக்கு தேவையுள்ள ஒவ்வொரு காரியமும் சரியாக இங்கே எழுதப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன், அது பரிசுத்த ஆவியினால் வியாக்கியானிக்கப்பட வேண்டும். பூமியிலுள்ள எந்த மனிதனுக்கும் வார்த்தைக்கு தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க உரிமையில்லை என்று நான் நம்புகிறேன். அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு எவருமே தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானி. அவர் அதைச் செய்வதாகக் கூறினார், அவர் அதைச் செய்கிறார்.
அவருடைய வார்த்தையுடன் நிலைத்திருப்பதைத் தவிர, அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியாயிருப்பதற்கு வேறு வழியேயில்லை என்பதை தெளிவாக கர்த்தர் உரைத்து தம்முடைய மணவாட்டிக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். தேவன் தாமே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார், அதனோடு தங்களுடைய வியாக்கியானத்தை சேர்க்க எந்த ஒருவருக்கும் உரிமை கிடையாது.
அவருடைய தீர்க்கதரிசியே தம்முடைய வார்த்தையின் வியாக்கியானி என்றும் அந்த வார்த்தை கூறுகிறது. அவரே ஜனங்களுக்கு தேவனுடைய சத்தமாக இருக்கிறார். அவர் கூறுகிறதே நம்முடைய நாளுக்கான வார்த்தையாகும்.
ஒலிநாடாக்களில் உள்ள தேவனுடைய சத்தத்தைக் கேட்பதன் மூலம், நாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிற தீர்க்கதரிசனமாக இருக்கிறோம். உங்களிடத்தில் பேசுகிற ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தத்திற்கு செவி கொடுப்பதைக் காட்டிலும் வல்லமையான, புனிதமான, நிறைவான, பரிபூரணமானது ஒன்றுமேயில்லை.
மற்றவர்கள் இதில் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடும்போது, தாங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறோம் என்ற உறுதியுடன், கழுகுகள் கூடிவந்து மிகுந்த சந்தோஷத்துடன் களிகூர்கின்றன. உங்களிடம் ஒலிப்பதிவு இயந்திரம் இருந்தால், ஒரு கூட்டத்தினரை ஒன்று கூட்டி, அதை இயக்கி, கவனமாகக் கேளுங்கள் என்று அவர் நமக்குச் சொன்னார். அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், அதைத்தான் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.
தேவன் அவருடைய நாமத்திற்காக, இந்தத் பொல்லாத காலத்திலிருந்து நம்மை அழைத்திருக்கிறார். நாம் இதற்கு முன் ஒருபோதும் கண்டிராத பல சோதனைகளையும் உபத்திரவங்களையும் கடந்து கொண்டிருக்கிறோம். சாத்தான் தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அறிந்திருப்பதால், அவன் போர்க்குணம் கொண்டவனாக இருக்கிறான். நான் அவருடைய மணவாட்டியாக இருந்தும், இந்த காரியங்கள் எல்லாம் எனக்கு எப்படி நடக்க முடியும் என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் வெளிப்படுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, நாம் அவருடைய மணவாட்டி என்பதை நீங்கள் சாத்தானுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் மாம்சத்தில் உள்ள வார்த்தை. நாம் வார்த்தையைப் பேசலாம், அது நிறைவேறும். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
தேவனுடைய சத்தம் சாத்தானிடம் நேரடியாகப் பேசி அவனிடம் சொல்கிறது:
சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே.
எதுவானாலும்…நமக்குத் தேவை எதுவானாலும்...நாம் அதைக் கேட்டு, விசுவாசித்து, அங்கேயே நிலைத்திருக்க வேண்டும். அது உடனடியாக வெளிப்படலாம்; அது ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் ஆகலாம். நாம் என்ன பார்க்கிறோம் அல்லது உணர்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல, அது சரியாக அந்த நேரத்தில் நிகழ்ந்தது.
தேவனுடைய கழுகுகளுக்காக நாம் கூடிவரும் ஒவ்வொரு ஆராதனையும் மேலும் மேலும் மகத்தானதாகிறது. நாம் ஒரே சிந்தையில், ஒருமனப்பட்டு கூடி, உன்னதங்களில் ஒன்றாக அமர்ந்து, அவருடைய வார்த்தையால் நம்மிடம் பேசி நம்மைப் பரிபூரணப்படுத்தும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, தேவனுடைய சத்தம் நம்மிடம் மீண்டும் பேசுவதையும், அவருடைய சொந்த வார்த்தையின் வியாக்கியானத்தை நமக்குக் கொண்டு வருவதையும் நாம் கேட்கும்போது, நீங்கள் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புவோம்.
சகோ. ஜோசப் பிரான்ஹாம்
செய்தி: இப்பொல்லாத காலத்தின் தேவன் 65-0801M
செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்க வேண்டிய வேதவாக்கியங்கள்:
பரி மத்தேயு 24ஆம் அதிகாரம் / 27:15-23
பரி. லூக்கா 17:30
பரி. யோவான் 1:1 / 14:12
அப்போஸ்தலர் 10:47-48
1 கொரிந்தியர் 4:1-5 / 14ஆம் அதிகாரம்
2 கொரிந்தியர் 4:1-6
கலாத்தியர் 1:1-4
எபேசியர் 2:1-2 / 4:30
2 தெசலோனிக்கேயர் 2:2-4 / 2:11
எபிரெயர் 7ஆம் அதிகாரம்
1 யோவான் 1ஆம் அதிகாரம் / 3:10 / 4:4-5
வெளிப்படுத்தின விசேஷம் 3:14 / 13:4 / அதிகாரங்கள் 6-8 மற்றும் 11-12 / 18:1-5
நீதிமொழிகள் 3:5
ஏசாயா 14:12-14