ஞாயிறு
29 மார்ச் 2026
65-0221E
யார் இந்த மெல்கிசேதேக்கு?
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள நித்திய ஜீவ மணவாட்டியே,

ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிற அந்த சத்தம் யார்?

அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேவனிடமிருந்து வரும் வெளிப்பாட்டின் மூலமாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அவரால் முன்குறிக்கப்பட்ட மணவாட்டி மட்டுமே அந்த வெளிப்பாட்டை உடையவளாய் இருப்பாள். ஆகவே, அவருடைய வார்த்தையின் ஒரே வியாக்கியானி யார் என்று அவர் சொன்னதை அறிந்துகொள்ள நாம் அவருடைய வார்த்தையை ஆராய வேண்டும். ஏழு முத்திரைகளை உடைத்து வெளிப்படுத்துவது யார்? வேதாகமத்தின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவது யார்? அவருடைய மணவாட்டியை அழைத்து வழிநடத்துவது யார்? பிழையற்ற சத்தத்தைக் கொண்டிருப்பது யார்?

வார்த்தையின்படி, அது மெல்கிசேதேக்கைத் தவிர வேறு யாருமல்ல, அவரேதான். தகப்பனும் தாயும் இல்லாத ஒரு மனிதர், நாட்களுக்குத் தொடக்கமும் முடிவும் இல்லாதவர். மாம்சமாகி, இறைச்சியையும் சோள அப்பத்தையும் உண்டு, மோர் குடித்து, ஆபிரகாமுடன் பேசிய தேவன். அவர் மனித மாம்சத்தில் ஜீவித்த, ஒரு ஆளுமை கொண்ட ஒரு நபராக இருந்தார்.

அதே வார்த்தை, மெல்கிசேதேக், அந்த நபர், அந்த ஆளுமை, ஆபிரகாமுக்குத் தன்னை வெளிப்படுத்தியது போலவே, மீண்டும் மனித மாம்சத்தில் ஜீவித்து, தன்னை வெளிப்படுத்துவார் என்றும், பின்னர் மீண்டும் இயேசு கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்துவார் என்றும் கூறியது; ஆனால் இன்று, வெளிப்படுத்தல் 10:7-ல் உள்ள தம்முடைய ஏழாவது தூதன் மூலமாகவே.

அதனால் அவர் தம்முடைய மணவாட்டியிடம் பேசி, தம்மை வெளிப்படுத்தும்படியாக, அவருடைய ஆவியானது அந்தப் பூமிக்குரிய கூடாரத்தைப் பட்சித்துவிடும். தேவன் தாமே மனித மாம்சத்தில் ஜீவித்து பேசுகிறார். அவருடைய முதல் முழுமையாக திரும்பளிக்கப்பட்ட வித்து முழு முதிர்ச்சி அடைந்திருந்தது. தேவனுடைய முழுமையான திட்டம் வந்திருந்தது; தேவனும் மனிதனும் ஒன்றாயிருந்தனர். தேவன் ஆபிரகாமிடம் பேசியது போலவே, தம்முடைய மணவாட்டியிடம் உதட்டிலிருந்து செவிக்கு அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் மெல்கிசேதேக்கு என்னும் நபருக்குள் வந்து வாசம் செய்தார். அதன் பிறகு மெல்கிசேதேக்கை குறித்து நாம் ஒன்றும் கேள்விப்படவில்லை, ஏனென்றால் அவர் இயேசு கிறிஸ்துவானார், மெல்கிசேதேக்கு ஆசாரியனாக இருந்தார், ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவானார். இப்பொழுது, உங்களுக்கு அது தவிர்க்கப்பட்டது, ஏனென்றால் அந்த சரீரத்தில் அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். ஆனால் நீங்கள் இன்னும்அறிந்துக்கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள்.

இன்னும்…!! அப்படியானால் நாம் யார்?

நம்முடைய கண்கள், நம்முடைய உருவம், நாம் எப்படி இருந்தோமோ, நாம் துவக்கத்தில் அவருடைய சிந்தனையில் இருந்தோம். ஒரு தேவதூதன், நட்சத்திரம், கேருபீன் அல்லது வேறு எதுவும் தோன்றுவதற்கு முன்பே. அவர் அதை நினைத்தார், அதை உரைத்தார், அதன் விளைவாக நாம் இங்கே இருக்கிறோம்.

அது எல்லையற்றது. அதை நம்மால் மனதால் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அதுதான் தேவன். தேவன், எல்லையற்றவர்!

ஆதியிலே நாம் அவரில் இருந்தபடியால், இவ்வுலகில் உள்ள இந்த அழிவுள்ள ஜீவியம் முடிந்த பிறகு நமக்கு என்ன சம்பவிக்கிறது?

இந்த மாம்ச அங்கி களையப்படும்போது, ஒரு இயற்கையான சரீரம், ஆவிக்குரிய சரீரம், அது கைகளால் செய்யப்படாத, ஸ்திரியிடமிருந்து பிறக்காத ஒரு சரீரம், அதனிடம் நாம் செல்கிறோம். பின்பு அந்த சரீரம் திரும்பி வந்து மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தை எடுத்துக்கொள்கிறது.

அவருடைய மணவாட்டிக்காக எவ்வளவு அற்புதமான காரியங்கள் சேமிப்பில் உள்ளது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தும்போது, இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள். அவருடைய மணவாட்டிக்குரிய ஒரு அன்பு மடலைக் குறித்து பேசுகிறோமே! நாம் என்னவொரு நாளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நம்மிடம் வெளிப்பாடு இருக்கிறது, அது மெல்கிசேதேக்கு, அது தேவனுடைய சத்தம், ஒலிநாடாக்களில் நம்மிடம் பேசுகிறது என்பதை நாம் அறிவோம். நம்மிடம் உள்ள வெளிப்பாடு, இன்றைய நாளுக்காக தேவனால் அருளப்பட்ட பரிபூரண சித்தமாகும். ஆகையால், அவர் யார் என்றும், நாமே அவருடைய மணவாட்டி என்றும் நாம் அறிவோம்.

அந்த வெளிப்பாடு ஒவ்வொரு நாளும் மகத்தானதாகிக்கொண்டே போகிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் நமக்கு அதிக மகிழ்ச்சியையும், அதிக வெளிப்பாட்டையும் தருகிறது. நாம் யார், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், நம்முடன் இருக்க அவரால் காத்திருக்க முடியவில்லை என்பதை அவர் நமக்குச் சொல்லும்போது, மணவாட்டி அவருடைய சத்தத்தின் பிரசன்னத்தில் அமர்ந்து தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறாள்!!!

வாருங்கள், ஜெஃபர்சன்வில் நேரப்படி பிற்பகல் 12:00 மணிக்கு, நாங்கள் மெல்கிசேதேக்கின் சத்தத்தைக் கேட்கும்போது, நடக்கவிருக்கும் நிகழ்விற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

சகோதரன் ஜோசப் பிரான்ஹாம்

 

செய்தி: 65-0221E "யார் இந்த மெல்கிசேதேக்கு?"

 

வாசிக்க வேண்டிய வேதவசனங்கள்:

ஆதியாகமம் 18ஆம் அதிகாரம்

யாத்திராகமம் 33:12-23
பரி.யோவான் 1:1
ரோமர் 8:1
2 கொரிந்தியர் 5:1
1 தெசலோனிக்கேயர் 4:13-18
முதலாம் தீமோத்தேயு 3:16 / 6:15
எபிரேயர் 7:1-3 / 13:8
வெளிப்படுத்தின விசேஷம் 10:1-7 / 21:16