ஞாயிறு
22 மார்ச் 2026
65-0221M
விவாகமும் விவாகரத்தும்
ஆராதனை தொடங்கும் நேரம்
0
நாட்கள்
19
மணி
40
நிமிடங்கள்
35
வினாடிகள்

Sun Apr 26, 2020 10:00 AM EDT

அன்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட, முன்குறிக்கப்பட்ட மணவாட்டியே:

நான் வளர்ந்து வரும் இளைஞனாக இருந்தபோது, கேட்பதற்கு ஒரு ஒலிநாடாவைத் தேர்ந்தெடுக்க முயன்றது எனக்கு நினைவிருக்கிறது. அதன் தலைப்புகளைப் படிக்கும்போது, விவாகமும் விவாகரத்தும் என்ற தலைப்பைக் கேட்க மாட்டேன் என்றும், ஏனெனில் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்; அது விவாகமானவர்களைப் பற்றியது மட்டுமே என்றே நான் எப்போதும் நினைப்பேன்.

பின்னர் ஒரு நாள், விவாகமும் விவாகரத்தும் என்ற தலைப்பைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பிதாவானவர் அந்தச் செய்தியின் வெளிப்பாட்டை எனக்குக் கொடுத்தார். அவருடைய அபிஷேகம் என்னுடைய இருதயத்திற்குள் வந்தது. அவர் என்னுடன் பேசுகிறார். இந்தச் செய்தி எனக்கானதாய் இருக்கிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பே அவர் என்னைத் தெரிந்துகொண்டார் என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவே என்னுடைய விவாக விழா. அவரைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. நான் அவருக்கும், அவருடைய வார்த்தைக்கும், அவருடைய சத்தத்திற்கும் மாத்திரமே உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறேன். நாம் ஒன்றாயிருக்கிறோம்.

உண்மையில், இந்தச் செய்தி, விவாகம் செய்து இப்போது விவாகரத்து பெற்றிருந்த பல சகோதர சகோதரிகளுக்கானதாயிருந்தது; அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவர்களுக்குச் சொன்னார்; ஆனால் அதைவிட மிகவும் முழுமையான மற்றும் பெரிய அர்த்தம் இருந்தது, மிகவும் மேலானது, மிகவும் வல்லமை வாய்ந்தது.

ஒரே கணவர் இருந்தார், அவர் தம்முடைய பல, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். தேவனுடைய சத்தம், தம்முடைய தூய்மையான, கலப்படமற்ற, கன்னிகையான வார்த்தை மணவாட்டியை அழைத்துக் கொண்டிருந்தது. மனிதனால் தீண்டப்படாத, தீட்டுப்படுத்தப்படாதவள். அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் மட்டுமே உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவள். அவராலும் அவருடைய சத்தத்தாலும் முழுமையாகத் திருப்தியடைந்தவள்.

அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், இன்று நாம் ஒரு சிறு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி, நாமே அவருடைய கன்னிகையான வார்த்தை மணவாட்டி என்று சொல்ல முடியும். மகிமை!!

தம்முடைய மணவாட்டியை அழைக்கும் விஷயத்தில் எந்தக் குறைகளும் இருக்கக்கூடாது என்பதை அவர் உறுதிசெய்ய விரும்பினார். எனவே, அவரே வந்து, தம்முடைய வார்த்தையை வெளிப்படுத்தவும், தம்முடைய மணவாட்டியைத் தம்மிடம் அழைக்கவும் மனித மாம்சத்தில் வாழ்ந்தார். அவரே தம்முடைய சொந்த மணவாட்டியைத் தெரிந்துகொள்ளப்போகும் எலியேசராய் இருந்தார்.

நம்மை யார் அணுகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் நமக்கு எந்தக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிசெய்ய, அவரே ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சூறாவளியிலிருந்து தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரத்திடம் பேசி, அவரை நீதிமான்களாக்கினார். பின்னர், ஓஹையோ நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் அவரிடம் வெளிப்படையாகப் பேசினார்.

நான் மீண்டும் வந்து மாம்சத்தில் ஜீவிப்பேன் என்று உங்களிடம் சொன்னேனே, அதை உலகிற்குக் காட்டிச் சொல்வதற்காக, அவர் அவருடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டார். உங்களை என்னுடைய மணவாட்டியாக அழைப்பதற்காக, நான் அவரில் வாழத் தெரிந்து கொண்டவர் அவரே. அது அவர் அல்ல; அவர் மூலமாகப் பேசுவது நானே. உங்களிடம் பேசுவதற்கு, அவருடைய சத்தத்தை என்னுடைய சத்தமாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன். உங்களை அழைத்தவரும், என்னுடைய பரிபூரண மணவாட்டியாக உங்களைப் பூரணப்படுத்தி வருபவரும் நானே.

இந்தச் செய்தியின் வெளிப்பாட்டையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய சத்தத்தையும், இப்போது நாம் யார் என்பதையும், மனித வார்த்தைகளால் விவரித்துரைக்க முயற்ச்சிப்பதற்கு அப்பாற்பட்டது. நான் சொல்வது என்னவென்று உங்களுக்குத் துல்லியமாகப் புரியும் என்று நான் அறிவேன். விசுவாசத்தினால் ஏற்படும் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய சந்நிதியில் தாமே அமர்ந்திருந்து, பூரணப்படுத்தப்படுவதன் மூலம், அந்த மணவாட்டி தன்னைத் தானே ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

தேவனுடைய சத்தம் தங்களோடு பேசுவதைக் கேட்க இந்த உலகத்திற்கு எத்துணை அரியதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அவர் பேசும்போது, தனது வார்த்தையை வெளிப்படுத்தும்போது, நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தும்போது, வார்த்தைக்கு வார்த்தை அமர்ந்து செவிகொடுப்பதற்கு எத்துணைச் சிறந்த வாய்ப்பு இது! அவருடைய சந்நிதியில் அமர்ந்திருப்பதற்கு ஈடான அனுபவம் வேறெதுவும் இல்லை; எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 12:00 மணிக்கு, ஜெஃபர்சன்வில் நேரப்படி, அவர் தனது மணவாட்டியோடு, "விவாகமும் விவாகரத்தும்" 65-0221M எனும் செய்தியை பேச நாங்கள் கேட்கும்போது, நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.

சகோதரன் ஜோசப் பிரன்ஹாம்

 

இச்செய்தியைக் கேட்பதற்கு முன் வாசிக்கவேண்டிய வேத வசனங்கள்:

மத்தேயு 5:31-32 / 16:18 / 19:1-8 / 28:19
அப்போஸ்தலர் 2:38
ரோமர் 9:14-23
முதலாம் தீமோத்தேயு 2:9-15
முதலாம் கொரிந்தியர் 7:10-15 / 14:34
எபிரெயர் 11:4
வெளிப்படுத்தின விசேஷம் 10:7
ஆதியாகமம் 3-ஆம் அதிகாரம்
லேவியராகமம் 21:7
யோபு 14:1-2
ஏசாயா 53
எசேக்கியேல் 44:22